சாலமன் பாப்பையா வீட்டில் அடுத்தடுத்து இழப்பு.. உருக வைத்த சம்பவம்

  • சென்னை: அன்பு பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே என்று தனது பட்டிமன்றத்தில் பேசி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சாலமன் பாப்பையா இன்று உடல்நிலை குறைபாடு காரணமாக 90 வயதில் காலமாகி இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய துணையாக இருந்த அவருடைய மனைவி ஜெயபாய் கடந்த வருடம் காலமான நிலையில் அதை தொடர்ந்து சாலமன் பாப்பையாவும் மரணம் அடைந்த செய்தி அவருடைய குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.

    Advertisement

    சாலமன் பாப்பையா ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் ஜாலியாக பேசும்போது தன்னுடைய மனைவியைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அந்த மனைவி கடந்த 2025 ஜனவரி 12ஆம் தேதி 80வது வயதில் உடல்நில குறைவு காரணமாக காலமானார். மதுரையில் உள்ள இல்லத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது. சாலமன் பாப்பையா ஜெயபாய் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர்.

    Advertisement

    சாலமன் பாப்பையாவின் குடும்பம்

    நம்மில் பலருக்கு சாலமன் பாப்பையாவின் குடும்ப வாழ்க்கையை பற்றி பெரிதாக தெரிந்திருக்காது. பல ஆயிரம் பட்டிமன்றங்கள், ஏராளமான பயணங்கள், கல்லூரி ஆசிரியர் பணி, சினிமா, பத்மஸ்ரீ விருது இப்படி வெளி உலகத்திற்கு தெரிந்த சாலமன் பாப்பையாவின் வாழ்க்கையில் இன்னொரு பக்கம் ஜெயப்பாய். வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் வீட்டுக்கு திரும்பும் போது அவருக்கென்று ஒருவர் இருக்க வேண்டும்.

    அந்த இடத்தில் பல வருஷங்களாக சாலமன் பாப்பையாவுடன் அவர் மனைவி இருந்திருந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் இறந்த போது சாலமன் பாப்பையா கதறி அழுது இருந்தார். ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் பயணித்துவிட்டு திடீரென்று அந்தத் துணையாக இருந்த மனிதன் இல்லாத வீட்டிற்குள் தனியாக இருக்க வேண்டிய நிலை வருவது எவ்வளவு பெரிய வெறுமை என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    Advertisement

    முதுமையில் தனிமை

    அதுவும் 90 வயதை நெருங்கிய ஒரு வாழ்க்கையில் அது ரொம்பவே கஷ்டம் தான். என்னதான் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும் மனைவியை போல வராது. இதை ஏற்கனவே பல மேடைகளில் பாப்பையாவே சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது அவருடைய மனைவி இறந்து சில மாதத்தில் இவரும் காலமான செய்தி அவருடைய குடும்பத்தினரையும் உருக வைத்திருக்கிறது.

    திருக்குறள் விளக்கம்

    சாலமன் பாப்பையா திருக்குறளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துச் சொன்னவர். அதில் அவர் கொடுத்த எளிய விளக்கங்கள் இப்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குரல் 1124க்கு அவர் அளித்த விளக்கத்தில், மனைவி உடன் இருக்கும்போது உயிருக்கு உடம்பு போன்றவள். பிரியும் போது உயிர் உடம்பை விட்டு பிரிவது போன்று என்ற பொருளில் விளக்கி இருந்தார். அவர் ஒரு காலத்தில் மக்களுக்கு விளக்கிய அந்த வார்த்தைகள் இப்போது அவரது வாழ்க்கையோடு சேர்த்து பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடுகிறது.

    English Summary

    Solomon Pappaiya: Solomon Pappaiah, who used to delight audiences and make them roar with laughter with his signature opening—"Dear elders... beloved mothers"—at his debate shows, has passed away today at the age of 90 due to ill health. His family is devastated by his death, which follows the passing of his wife, Jayabai—his greatest pillar of support—just last year.