ஞாயிற்றுக்கிழமை வசூலில் சூரியின் மண்டாடி அசத்தல்! கார்த்தியின் சர்தார் 2 நிலை! இவ்வளவு வித்தியாசமா?

  • சென்னை: சூரி நடிப்பில் வெளியான மண்டாடி, கார்த்தியின் சார்தா 2 இரண்டு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்ததால் ஆரம்பத்தில் இருந்து இந்த இரண்டு படத்தின் ஒப்பிடாகவே இருந்தது. முதல் நாளில் இரண்டு படத்திற்கும் நிலவரத்தில் சின்னதாக ஏற்றத்தாழ்வு இருந்தது. நேற்றைய ஞாயிற்றுக்கிழமை வசூல் நிலவரம் இந்த போட்டியில் இன்னொரு சுவாரசியமான திருப்பத்தை கொடுத்திருக்கிறது.

    Advertisement

    இப்போது வெளியாகியுள்ள ஆரம்ப பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி, ஞாயிற்றுக்கிழமை மண்டாடி 13.05 கோடி இந்திய நெட் வசூல் செய்திருக்கிறது. அதே நேரத்தில் சர்தார் 2 படம் 2. 45 கோடி நெட் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    மண்டாடி வசூல் நிலவரம்

    மண்டாடிக்கு முதல் நாள் 4.85 கோடி நெட் வசூல் கிடைத்ததாகவும், 2வது நாளில் 6.70 கோடியாகவும் 3வது நாளில் 10 கோடி ஆக வசூல் உயர்ந்ததாக சாத்விக் தளம் சொல்லி இருக்கிறது. அதற்கு பிறகு வந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 3வது நாளை விட 4வது நாளில் மட்டும் சுபர் 30.5% வசூல் அதிகரித்து இருக்கிறது. 4 நாட்களில் இந்திய நெட் வசூல் 34.60 கோடி எட்டி இருக்கிறது. 40.48 கோடி என்று வெளிநாட்டு வசூலையும் சேர்த்து உலக அளவில் 47.98 கோடி கிராஸ் வசூலையும் படம் எட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சர்தார் 2 வசூல் நிலவரம்

    இதுதான் இப்போது சூரி ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ். நேற்று வரைக்கும் படம் ஓடுமா? என்று பார்த்தால் இப்போது வசூலே ஓடுது என்ற நிலைதான். சர்தார் 2 வசூல் சற்று உயர்ந்திருக்கிறது. மூன்றாவது நாளில் 2.20 நெட் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2.45 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது முந்தைய நாளை விட சுமார் 11.4% வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மண்டாடியுடன் ஒப்பிட்டால் வித்தியாசம் ரொம்பவே பெரிதாக இருக்கிறது.

    மண்டாடி vs சர்தார் 2

    4 நாட்களில் சர்தார் 2 இந்தியாவில் 11.60 கோடி ரெட் வசூல் செய்துள்ளதாக ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரிவிக்கிறது. உலக அளவில் அதன் கிளாஸ் 17.85 கோடி என்று கூறப்பட்டது. அதாவது ஞாயிற்றுக்கிழமை மட்டும் மண்டாடி சுமார் 5 மடங்கு அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. சூரி படத்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது வசூலாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பெரிய வெற்றியாக மாறுமா? என்பதை அடுத்த சில நாட்கள் தான் இதற்கான பதிலை சொல்லப்போகிறது.

    English Summary

    box office collection : Since Soori's *Mandadi* and Karthi's *Sardar 2* were released on the same day, the conversation from the very beginning has centered on comparing the two films. On the opening day, there was a slight disparity in their performance. However, the box office figures from yesterday—Sunday—have introduced an interesting new twist to this competition.