சென்னை: கணவன், மனைவி இருவரும் பிரிந்துவிட்டால், அதன்பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையே தவிர்ப்பவர்கள் பலர். ஆனால், விவாகரத்து ஆன பிறகும் முன்னாள் மனைவியுடன் நல்ல நட்பைத் தொடர்வது மட்டுமல்லாமல், அவருடைய திருமணத்தையே முன்னின்று நடத்தியிருக்கிறார் ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மாகுவேர். இதுதான் இப்போது ஹாலிவுட் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
நம்மில் பலருக்கும் ஸ்பைடர் மேன் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் டோபி மாகுவேர்தான். ஸ்பைடர் மேன் படத்தின் முதல் மூன்று பாகங்களில் ஹீரோவாக நடித்த இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்போது இவரைப் பற்றி பேசப்படுவது சினிமா காரணமாக அல்ல தனது முன்னாள் மனைவியின் திருமணத்தில் அவர் நடந்துகொண்ட விதத்துக்காகத்தான்.
ஸ்பைடர் மேன் பட நடிகர்
டோபி மாகுவேரும் நகை வடிவமைப்பாளரான ஜெனிபர் மேயரும் கடந்த 2020-ம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தாலும், குழந்தைகளுக்காகவும் ஒருவருக்கொருவர் வைத்திருந்த நட்புக்காகவும் இருவரும் நண்பர்களாக தொடர்வதாக கூறியிருந்தனர்.
கடந்த செப்டம்பரில் இவர்களது விவாகரத்து அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த சம்பவம்தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஜெனிபர் மேயர், தொழிலதிபரான ஜெப் ஒகுன்லேசியைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் ஹவாயில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் லனாயில் நடைபெற்றது. பொதுவாக, முன்னாள் மனைவி அல்லது கணவரின் மறுமணத்தில் கலந்துகொள்வதே சிலருக்கு சங்கடமான விஷயமாக இருக்கலாம். ஆனால், டோபி மாகுவேர் அப்படியெல்லாம் நினைக்கவில்லை போல! ஜெனிபரின் திருமணத்தில் கலந்துகொண்டதோடு, அந்த விழாவை முன்னின்று வழிநடத்தியிருக்கிறார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அதிலும் இவருடைய சைன் ஸ்டெப்பான ஸ்பைடர் மேன் போஸ் கொடுத்து இருக்கிறார். மணப்பெண் அவருடைய கணவருடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும்போது இவர் கொடுத்த அந்த போட்டோக்களில் கிளிக் ஆகி இருக்கிறது. இந்தத் திருமணத்தில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், அந்த விழாவில் டோபி மாகுவேர் தனது முன்னாள் மனைவியுடன் இயல்பாக இருந்த விதம்தான் பலரையும் பேச வைத்திருக்கிறது. விவாகரத்து என்றாலே சண்டை, மனக்கசப்பு, ஒருவரையொருவர் குறை சொல்வது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு உறவு முடிந்துவிட்டாலும், அந்த மனிதருடனான நட்பு முடிந்துவிட வேண்டிய அவசியமில்லை என்பதை டோபி மாகுவேரின் இந்தச் செயல் நினைவுபடுத்துகிறது. அதே நேரத்தில், ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி என்பதால், எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது. ஸ்பைடர் மேனாக வில்லன்களுடன் சண்டை போட்ட டோபி மாகுவேர், நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயத்தைச் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். முன்னாள் மனைவியின் புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாகப் பங்கேற்ற அவரது இந்த செயல் தான் இப்போது இணையத்தில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.முன்னாள் மனைவி திருமணம்
விஜய்க்கு லக்.. சினிமா மாதிரி மக்கள் நம்பிட்டாங்க.. உடனே CM ஆனதால் கஷ்டம் தெரியல! நடிகை ரோஜா பேட்டி
கலக்கல் போட்டோஸ்
வித்தியாசமான செயல்
அட்டக்கத்தி தினேஷின் காதலி யார் தெரியுமா? எப்போது திருமணம்? சர்ப்ரைஸ்