நீயும் என்னை விட்டு போயிட்டியே டா! தம்பி உடலை பார்த்து கலங்கிய ஸ்ரீகாந்த் தேவா.. பேரிழப்பு!

  • சென்னை: அப்பாவை இழந்த துக்கத்திலிருந்தே இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ஏற்படுத்திய சோகமே இன்னும் குறையாத நிலையில், அவருடைய தம்பி சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருக்கிறார். தன்னுடைய தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீகாந்த் தேவா, அவரை பார்த்து கலங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கின்றன.

    Advertisement

    "நீயும் என்னை விட்டுட்டு போயிட்டியே டா" என்று தம்பியிடம் சொல்வதைப் போல, உடைந்து போன மனநிலையுடன் ஸ்ரீகாந்த் தேவா அஞ்சலி செலுத்தும் வீடியோ பலரையும் வேதனைப்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இப்படி ஒரு துயரத்தை அந்த குடும்பம் சந்திக்க வேண்டியிருக்கிறதே என்பதுதான் இந்த வீடியோவை பார்ப்பவர்களின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது.

    Advertisement

    தம்பிக்கும் அஞ்சலி

    தேனிசைத் தென்றல் தேவா கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேவாவின் உடல் அவருடைய சொந்த ஊரான சக்கரமல்லூரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தந்தையை இழந்த துயரத்தில் இருந்த ஸ்ரீகாந்த் தேவா, கதறி அழுதப்படியே இறுதி சடங்குகளை முன்னின்று செய்தார். அப்பா இல்லாத இந்த இரண்டு நாட்களைக் கடப்பதே மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இனி வரும் நாட்களை எப்படிக் கடக்கப்போகிறேன் என்று தெரியவில்லை என்றும் அவர் ஏற்கெனவே கண்ணீருடன் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தத் துயரத்திலிருந்து அவர் கொஞ்சம்கூட மீள்வதற்குள் குடும்பத்தில் இன்னொரு இழப்பு ஏற்பட்டுவிட்டது.

    Advertisement

    தேவா வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. ஸ்ரீகாந்த் தேவாவை அணைத்து ஆறுதல்! நெகிழ வைத்த காட்சி

    37 வயதில் உயிரிழந்த கார்த்திக் சபேஷ்

    தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷின் மகன்தான் கார்த்திக் சபேஷ். 37 வயதான இவர், உடல்நலப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி இரவு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    கார்த்திக் சபேஷ் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் வல்லவன்,குளிர் 100 டிகிரி, பட்டத்து யானை, காதல் சொல்ல வந்தேன், உதயம் NH4 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரிய கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்றாலும், பல படங்களில் துணை நடிகராக மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டாம். அவருக்கு மனைவி ரம்யா கார்த்திக் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இளம் வயதிலேயே அவர் உயிரிழந்திருப்பது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Srikanth Deva overcome with emotion upon seeing his younger brother Karthik Sabesh a series of devastating losses