முதல் இரவு காட்சி.. வெளியே நின்று மகன் சொன்ன வார்த்தை! சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்டேன்! சுப்பிரமணியபுரம் நடிகை ஓபன்

  • சென்னை: தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருஷம் கழிந்தாலும் அதில் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் ரசிகர்களின் நினைவில் இருந்து மறைவதே இல்லை. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இன்றளவும் ஒரு முக்கிய கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நட்பு, காதல், துரோகம் என ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்த இந்த படத்தில் மைக் செட் ராசாத்தி கேரக்டரில் நடித்த திண்டுக்கல் தனம் இந்த பட அனுபவத்தை பற்றி பேசி இருக்கிறார்.

    Advertisement

    அவரோ கொடுத்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார். அந்த படத்தில் நடிக்க சென்ற முதல் நாளே இயக்குனர் சசிகுமார் பார்த்த அனுபவத்தை சுவாரசியமாக கூறியிருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்திற்கு முன்பே காதல் படத்தில் தனம் நடித்திருக்கிறார். அதன் பிறகு சுப்பிரமணியபுரம் தான் அவருக்கு அடுத்த படம். அந்த படத்தில் நடிப்பதற்காக தனத்திற்கு அலெக்ஸ் என்பவரிடம் இருந்து போன் கால் வந்திருக்கிறது.

    Advertisement

    சுப்பிரமணியபுரம் பட வாய்ப்பு

    உடனடியாக பாரதிபுரம் வாங்க என்று சொல்லி இருக்காங்க. அங்கு தனமும் ஒரு சுமோ காரில் போய் இறங்கி இருக்கிறார். அப்போது தாடியுடன் ஒருவர் தனம் இறங்கி வருவதையே பார்த்துக் கொண்டு இருந்தாராம். அவரைப் பார்த்ததும் இவர் என்ன கேடி மாதிரி இருக்கிறார் என்று தனத்திற்கு தோன்றியதாம். அதற்கு பிறகு தான் இவர்தான் இயக்குனர் சசிகுமார் என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னாராம் அப்ப மனசிற்குள் சின்ன நெருடல் இருந்திருக்கிறது.

    சசிகுமாரை பார்த்த நொடி

    ஆனால் சசிகுமார் அடுத்த நாள் காலையில் சூட்டிங் வருமாறு சொல்லி இருக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் சூட்டிங்கில் தனம் கலந்து கொண்டு இருந்தாராம். பிறகு சசிகுமார் மீது இருந்த பார்வை மாறியதாம். முதல் நாள் திருவிழா காட்சிகள் தான் சூட்டிங் செய்யப்பட்டதாம். கேமராவை பார்த்து சிரிக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அவர் நாட்டாமையை பார்த்து சிரிப்பது போல மாற்றி வைத்துவிட்டார்களாம்.

    Advertisement

    அதுபோல "தோட்டம் கொண்ட ராசாவே.. சூடிக்கொண்ட ராசாத்தி" என்ற பாடல் பின்னணி காட்சி படமாக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் அவர் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் நான் எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு சிலர் என்னை ராசாத்தி ராசாத்தி என்று கூப்பிடுவாங்க. அப்போ எதற்காக இவங்க எப்படி கூப்பிடறாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனால் பிறகு தான் எனக்கு விஷயமே புரிந்தது.

    முதலிரவு காட்சி

    எனக்கு நாட்டாமையுடன் முதலிரவு காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். எனக்கு இந்த நடிப்பு போதும்.. இப்படி எல்லாம் என்னால முடியவே முடியாதுன்னு சொன்னேன். அங்கு என்னோட சொந்தக்காரங்க எல்லாரும் வெளியில இருந்தாங்க. எல்லாரும் நான் நடிக்க போறதை பார்க்கிறதுக்கு வந்துருக்காங்க. ஆனால் நான் நடிக்க போறது இப்படிப்பட்ட ஒரு காட்சி என்று தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... நாம போய் இப்படி நடிக்கணுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

    Advertisement

    மகன் சொன்ன வார்த்தை

    அப்போ கஞ்சா கருப்பு வந்து என்னை திட்டுனாரு. இது எப்படிப்பட்ட படம் தெரியுமா? உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதை நீயே கெடுத்துக்காத என்று சொன்னாரு. அந்த சமயத்தில் என்னுடைய மகனே கோபப்பட்டுட்டான். அம்மா நீ நடிக்கிறதுக்கு வந்துட்டு அந்த காட்சியில் நடிக்க மாட்டேன், இதில் நடிக்க மாட்டேன்னு சொல்றது நல்லாவா இருக்குன்னு அவன் திட்டுனான்.

    சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்பு

    அதற்கு முன்பு நான் அந்த காட்சியில் நடக்க முடியாது என்று சொன்னதும் சசிகுமார் சார் வந்து என்கிட்ட சமாதானம் பண்ணுனார். சார் என்னால இதுபோல நெகட்டிவாக நடிக்க முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மகன் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு சரின்னு பட்டு அவரிடமே மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு அந்த காட்சியில் நடித்திருந்தேன். ஆனால் அந்தப் பட கேரக்டர் எனக்கு பிறகு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று தனம் பேசி இருக்கிறார்.

    English Summary

    Subramaniapuram Actress: Although many years have passed since the release of some films in Tamil cinema, the characters and scenes played in them never disappear from the memory of the fans. Subramaniapuram, released in 2008, is still celebrated as a major cult classic. Dindigul Thanam, who played the character of Mike Chet Rasathi in this film which naturally recorded the life of the youth in a period of friendship, love and betrayal, has talked about this film experience.