சென்னை: அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம் பற்றிய பேச்சு கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. திருமணம் கிரீஸில் நடைபெறப்போகிறது என்று செய்திகள் வெளியான போது அதை மறுத்து சென்னையில் தான் திருமணம் நடக்கும் என்று அனிருத் நெருங்கிய நண்பரும் நடிகருமான பிஜார்ன் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது கிரீஸில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் முக்கிய பிரபலங்கள் அங்கு சென்று இருக்கும் நிலையில் பிஜார்னின் பேட்டி மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
அனிருத் இசையை ரசிக்கும் ரசிகர்கள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளையும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பாக காவியா மாறனுடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் பரவியதிலிருந்து ரசிகர்களின் கவனம் இந்த ஜோடி மீதுதான் இருந்தது. பொதுவாக பல பிரபலங்கள் தங்களுடைய திருமண தேதி மற்றும் திருமணம் நடக்கும் இடத்தை வெளிப்படையாக அறிவித்து விடுவார்கள். ஆனால் அனிருத் இன்னும் தனது திருமண விஷயத்தை சீக்ரெட் ஆகவே வைத்திருக்கிறார். அதனாலயே இதைப்பற்றி எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. திருமணம் கிரீஸில் 10, 11ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையா? பொய்யா? என்று அனிருத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதுபோல கிரீஸில் கல்யாணம் நடக்கப் போகிறது என்றதும் அவருடைய நெருங்கிய நண்பரான பிஜார்ன் சார்ஜரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் ஜெய்லர் 2 படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது அவரிடம் அனிருத் கல்யாணம் கிரீஸில் நடக்க போகிறதா? நீங்க போறிங்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கிரீஸில் திருமணம் நடக்கல, சென்னையில் தான் நடக்கபோகிறது என்று சொல்லி இருக்கிறார். காலேஜ் டைமில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அப்போ நண்பர் சொல்வது தான் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி கொண்டு இரந்தனர். ஆனால் இப்போது கிரீஸில் நடப்பதால் அனிருத் அவருடைய நண்பருக்கே சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். திருமணம் கிரீசில் நடைபெற்றாலும் இந்த வரவேற்பு சென்னையில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவல் மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் குடும்பம் மற்றும் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பம் கிரீஸ் நாட்டிற்கு சென்று இருக்கின்றனர். அதனால் அனிருத் கல்யாணம் நேற்று நடந்து விட்டதா? அல்லது இன்றைக்கு தான் கல்யாணம் நடக்கப் போகிறதா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அனிருத் திருமண புகைப்படங்கள் இப்ப வரைக்கும் வெளியாகாததால் அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அதிகமாக வெளியே சொல்லாத அனிருத் இப்பவும் திருமணத்தையும் ரகசியமாகவே ஆகவே வைத்திருக்கிறார்.அனிருத் கல்யாணம்
நண்பருக்கே தெரியாத திருமணம்
ரகசியம் காக்கப்படுகிறது