நீயா நானா டாக்டர் ஜமீமா திடீர் உயிரிழப்பு.. கடைசியாக வெளியிட்ட பதிவு.. நெகிழ்ச்சி வார்த்தை

  • சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வெளிப்படையான பேச்சால் பிரபலமான டாக்டர் ஜமீமா பேகம் உயிரிழந்துவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவி வந்த நிலையில் அவருடைய நெருங்கிய தோழி வெளியிட்ட இரங்கல் பதிவால் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜமீமா பேகத்தின் தோழியான ரேவதி கமல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், ஜமுனாவின் புகைப்படத்துடன் இரங்கல் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் ஜமீமா பேகம் மறைந்து விட்டதாகவும் அவரது இறுதி நிகழ்வுகள் ஆகஸ்ட் 31, 2026 இன்று நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை தெரிந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    விபத்தில் உயிரிழப்பு

    ஜமீமா பேகம் நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான விவாதத்தில் தனது தம்பியுடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் நீங்கள் பொதுவாக பெண் பிள்ளைகள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்காதீர்கள், பெண் பிள்ளையை நீ எப்படி பார்க்க வேண்டும் என்று ஆண் பிள்ளையிடம் சொல்லி வளருங்கள் அதிரடியாக பேசினார்.

    நீயா நானாவில் ஜமீனா பேச்சு

    அதோடு தன் வந்த தம்பியிடம் நான் உனக்கு முதல் முறையாக எடுத்த லெசன் என்னடா என்று கேட்க, அதற்கு அவருடைய தம்பி செக்ஸ் எஜுகேஷன் என்று சொன்னதும் அரங்கத்தில் இருந்த எல்லோரும் திகைத்துப் போயிருந்தனர். அப்போது அவர் பொதுவாக பெண்கள் என்னவெல்லாம் கஷ்டப்படுவார்கள் என்பது ஆண்களுக்கும் தெரிய வேண்டும். அப்போ ஆண்கள் தன்னால் பெண்களை புரிந்து கொள்ளப் போகிறார்கள். இப்போதுள்ள இளம் ஜெனரேஷன் ரொம்பவும் அட்வான்ஸாக இருக்கிறாங்க, பொறுப்பா இருக்குறாங்க.

    Advertisement

    நீயா நானாவில் தம்பியோடு கலந்து கொண்டு பேசிய பெண் இப்போ உயிரோடு இல்லையா? என்ன ஆனது? பின்னணி
    அவங்கள அவங்க போக்குல வளர விடனும். அவங்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலே போதும். அதை விட்டுட்டு நீ செய்தது தவறு என்று அவங்க மேல நம்ம குற்றம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம் என்று பேசி இருந்தார். அதோடு பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த இவர் திடீரென சாலை விபத்தில் சிக்கி இருக்கிறார். அதில் படுகாயம் அடைந்த ஜமீமாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகி இருக்கிறார்.

    Advertisement

    இன்ஸ்டா பக்கம்

    இந்த தகவல் வெளியானதும் சோசியல் மீடியாவில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருடைய instagram பக்கமும் கவனம் இருந்துள்ளது. அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.71லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். கடைசியாக தன்னுடைய இரண்டு போட்டோக்களை அவர் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போஸ்ட் போட்டு இருக்கிறார்.

    கடைசி போஸ்ட்

    கருப்பு உடை உடன், நீல நிற துப்பட்டா அணிந்து கடற்கரை பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த போட்டோவிற்கு சந்தோஷமாக இருப்பது போன்ற எமோஜிகளை மட்டுமே கேப்ஷனாக வைத்திருக்கிறார். இது அந்த நேரத்தில் சாதாரணமாக பகிரப்பட்ட போட்டோவாக இருந்தாலும் இப்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவரை பாலோ பண்ணும் பலரும் அவரைப் பற்றி பீல் பண்ணி கருத்துக்கள் வெளியீட்டு வருகின்றனர்.

    Advertisement

    அவர் சமூக வலைத்தளங்களில் பெண்கள் கல்வி, சமத்துவம், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Neeya Naana Dr. Jameema: While reports had been circulating on social media for the past few hours claiming that Dr. Jameema Begum—who gained fame for her candid remarks while appearing on Vijay TV's *Neeya Naana*—had passed away, her death has now been confirmed through a condolence post shared by a close friend.