கருப்பு கொடுத்த வெற்றி.. யாரும் செய்யாத செயலை செய்த சூர்யா.. அந்த மூன்று பேர் ஹேப்பி! திரிஷா நெகிழ்ச்சி


  • சென்னை: சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூல் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சூர்யா எடுத்திருக்கும் ஒரு செயல் தற்போது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அல்லது இசையமைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் பரிசுகள் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். கடந்த காலங்களில் சில நடிகர்கள் தங்களது இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

    Advertisement

    கார் பரிசளித்த சூர்யா

    ஆனால் திரைக்கு பின்னால் அமைதியாக உழைக்கும் ஒரு எடிட்டருக்கு கார் பரிசளிக்கப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அரிதான ஒன்று என்று கருப்பு பணத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி சூர்யாவை பாராட்டி இருக்கிறார். கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் கலைவாணன் ஆகிய மூவருக்கும் தலா சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மகிந்திரா BE 6 மின்சார கார்களை சூர்யா பரிசாக வழங்கி இருக்கிறார்.

    எடிட்டருக்கு கார் பரிசு

    குறிப்பாக எடிட்டர் கலைவாணனுக்கும் இந்த கௌரவம் வழங்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிகழ்வை பாராட்டி இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதில், "ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு நடிகர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு எடிட்டருக்கு கார் பரிசளித்த சம்பவத்தை இதுவரை பார்த்ததே இல்லை. அந்த வகையில் சூர்யா புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாய் அபயங்கர் பதிவு

    இதற்கிடையில் கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், "Trishhhh" என்ற ஒற்றை வார்த்தையுடன் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

    Advertisement
    பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்

    திரிஷா பதில் போஸ்ட்

    அதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷாவும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "ஒரு சிறப்பான மனிதரை சந்தித்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். சாய் அபயங்கரின் இசை கருப்பு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வரும் நிலையில், திரிஷாவின் இந்த பாராட்டும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    கருப்பு திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக மட்டுமல்லாமல், அதில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படமாகவும் தற்போது பார்க்கப்படுகிறது. திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு மட்டுமல்லாமல், திரைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்களுக்கும் சமமான மரியாதை கிடைக்க வேண்டும் என்ற செய்தியை சூர்யா தனது செயலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Advertisement
    “விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் 'கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!”

    கூட்டு வெற்றி

    ஒரு படத்தின் வெற்றி என்பது ஹீரோவின் வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரின் உழைப்பின் வெளிப்பாடு என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியிருக்கிறது கருப்பு படக்குழுவின் இந்த கொண்டாட்டம். குறிப்பாக எடிட்டருக்கு கார் பரிசளித்த சம்பவம், இனி தமிழ் சினிமாவில் மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு புதிய முன்னுதாரணமாக அமையுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும், "சூர்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, தன்னுடன் உழைப்பவர்களை மதிக்கும் மனிதர்" என்று பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    English Summary

    Suriya: Actor Suriya has won hearts once again, not just for the blockbuster success of Karuppu but also for recognizing the efforts of the film’s technical team in a unique way.Directed by R. J. Balaji, Karuppu has emerged as one of the biggest hits of the year, reportedly crossing the ₹300 crore mark worldwide. To celebrate the film's success, Suriya presented luxury electric cars worth around ₹30 lakh each to music composer Sai Abhyankkar, cinematographer Vishnu, and editor Kalaivanan.What has particularly caught the attention of the industry is the recognition given to editor Kalaivanan. While actors, directors, and music composers are often rewarded after a film's success, technicians working behind the scenes rarely receive such public appreciation.Praising the gesture, RJ Balaji shared an emotional note on social media, stating that he had never seen an editor being rewarded with a car after a film's success. He described Suriya's decision as a new benchmark for the industry and highlighted the importance of acknowledging every contributor to a film.Meanwhile, Sai Abhyankkar also grabbed attention after sharing a photograph with actress Trisha Krishnan on social media. The composer captioned the post simply with "Trishhhh," which quickly went viral among fans.Trisha later reposted the image on her Instagram story and described Sai Abhyankkar as "a wonderful person." Fans have pointed out that Sai's music played a significant role in the emotional and commercial success of Karuppu, making Trisha's appreciation even more meaningful.The celebrations surrounding Karuppu have become more than just a box-office success story. Many industry observers feel that Suriya's gesture sends an important message about valuing the contributions of technicians who often remain behind the spotlight.Fans have flooded social media with praise, calling Suriya not only a successful actor but also a person who respects and rewards the people who work alongside him. The incident has also sparked discussions about whether more stars and producers will follow a similar approach in recognizing technical talent in the future.