பீரியட்ஸ் நேரத்தில் சொந்த வீட்டிலேயே நடந்த கொடுமை.. 5 லட்சம் சம்பாதிக்கும் பெண்ணுக்கு நடந்த அநியாயம்!

  • சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி மாமியார்கள் அதை ஏற்க மறுக்கும் மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது சில மாமியார்கள் சொன்ன விஷயத்தை கேட்டு தொகுப்பாளர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தங்கள் வீட்டு பெருமையை காக்க வேண்டும் என்று இன்னும் பல மூடநம்பிக்கைகளை பாலோ பண்ணி வருவது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    Advertisement

    அதிலும் படித்து நல்ல பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கு கூட இப்போதும் சில கட்டுப்பாடுகள் முகம் சுளிக்க வைத்திருக்கிறது அதாவது இந்த வார எபிசோட்டில் ஒரு பெண் தன்னுடைய மனக்குமுறலை கொட்டி இருந்தார். நான் படித்து நல்ல வேலையில் இருக்கிறேன் ஆனாலும் பீரியட்ஸ் நேரத்தில் என்னுடைய மாமியார் என்னை தனியாக படுக்க வைக்கிறார். நான் கல்யாணமாகி வந்த புதியதிலேயே என் கணவருக்குடன் பீரியட்ஸ் நேரத்தில் படுக்கக் கூடாது, தனியாக படுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

    Advertisement

    மருமகளின் மனக்குமுறல்

    எங்க வீட்டிலும் பீரியட்ஸ் நேரத்தில் சில விஷயங்களை ஃபாலோ பண்ணுவோம், ஆனால் இது போன்றெல்லாம் நாங்கள் செய்தது கிடையாது. என்னுடைய அம்மா கட்டிலில் படுத்துக் கொள்ளலாம் ஆனால் பீரியட்ஸ் முடிந்ததும் அந்த துணிகளை துவைத்து விட சொல்லுவார். ஆனால் என்னுடைய மாமியார் சேர், சோபா எதிலும் கூட உட்கார விடமாட்டார். எனக்குனு ஒரு சேர் இருக்கும் அதில் தான் நான் உட்கார வேண்டும்.

    நான் வீட்டிற்குள் வரும்போது மிதியடியில் கால் வைத்தால் கூட அந்த மிதியடியையும் பீரியட்ஸ் முடிந்ததும் சோப்பு போட்டு விட வேண்டும். நான் எங்கெல்லாம் தொட்டேனோ அதெல்லாம் கழுவி விடுவார் என்று சொல்ல, அனைவருக்கும் இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. அதைக்கேட்டும் தொகுப்பாளர் அவருடைய மாமியாரிடம் இந்த காலத்திலேயும் இப்படி எல்லாம் பண்ணுறீங்களே எதற்காக என்று கேட்கிறார்.

    Advertisement

    மாமியார் கட்டுப்பாடு

    அதற்கு மாமியார், இது எதற்காக செய்யறாங்கன்னு தெரியாது. ஆனா என்னுடைய மாமியார் எனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தாங்க. அதை என்னுடைய மருமகளும் பாலோ பண்ணணும்னு நினைக்கிறேன். இது தப்பு எதுவும் இல்லையே.. நம்ம வீடு சுத்தமா இருக்கணும், பீரியட்ஸ் என்பது ஒரு தீட்டுதான் அது கிருமி தொற்று அந்த நேரத்தில் எதையெல்லாம் யூஸ் பண்ணுகிறோமோ அதை வாஷ் பண்ணி விட வேண்டும். நானும் இப்படித்தான் செய்வேன் என்னுடைய மருமகளும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

    அதற்கு அவருடைய மருமகள் சங்ககாலத்தில் நீங்க பயன்படுத்திய பீரியட்ஸ் பொருட்கள் வேற ஆனா நாங்க இப்ப ரொம்பவே சேப்பாக இருக்கிற மாதிரி நாப்கின் முதல் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம் ஆனால் இப்போதும் இதுபோல சொல்லுறது தான் எரிச்சலா இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    பெண்களின் கஷ்டம்

    அப்போது தொகுப்பாளர் ஆவுடையப்பன், அந்த பெண்ணிடம் நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க என்று கேட்க, வருசத்துக்கு 5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன் என்று அந்த சொல்கிறார். படித்து நல்ல வேலையில் இருக்கிற பெண்களுக்கே இதுபோல நடக்கிறது என்றால் படிக்காத அல்லது வீட்டில் இருக்கும் பெண்களை இது போன்றவர்கள் என்னவெல்லாம் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ என்று வருத்தம் தான் அனைவருக்கும் வருகிறது.

    English Summary

    Tamizha Tamizha: This week on Zee Tamil's Tamizha Tamizha program, there was a discussion on the topic of devoted in-laws and daughters-in-law who refuse to accept it. Not only the presenter but also the fans were shocked to hear what some mother-in-law said. Many people were surprised and shocked to learn more superstitions to protect the pride of their family.