2 லட்சத்துக்கு ஹேண்ட் பேக்.. இல்லாம எப்படி வாழ்றது? விபரீதமாக பேசிய பெண்.. இப்படியும் இருக்காங்களே

  • சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் பெண்களும் அவர்களுடைய ஆசையை நிறைவேற்ற போராடும் கணவர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருக்கிறது. அந்த விவாதத்தில் ஒரு பெண் சொன்ன விஷயம் தான் அனைவரையும் ஆத்திர பட வைத்திருக்கிறது. அதாவது அந்த பெண் பயன்படுத்தும் ஒரு ஹேண்ட் பேக்கின் விலை குறைந்தபட்சம் 2 லட்சமாம். அது போதாது என்று அந்தப் பெண் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.

    Advertisement

    ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வருங்கால கணவர்கள் பயங்கரமான பணக்காரராக இருக்க வேண்டும் என்று சில எதிர்பார்ப்பை பெண்கள் சொல்லியிருந்தனர். அது அனைவருக்குமே ஆச்சரியத்தையும், பயத்தையும் கொடுத்திருந்தது. ஒரு இளம்பெண் பேசும்போது, என்னுடைய வருங்கால கணவர் எனக்கு 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்ய வேண்டும், அம்மா வீட்டில் 50 பவுன் நகை போட வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

    Advertisement

    ஆடம்பர வாழ்க்கை

    இன்னொரு பெண்ணோ என்னுடைய கணவருக்கு தலைமுடி அதிகமாக இருக்க வேண்டும், டாக்டராக இருக்க வேண்டும், விலை உயர்ந்த நாய் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படியுமா பெண்களின் மனநிலை இருக்கு என்று எல்லோருமே புலம்பி வந்தனர். ஆனால் இப்போ இதுவெல்லாம் சூஜிபி. இன்னும் இருக்கு பாருங்க என்று இந்த வார தமிழா தமிழாவில் சில பெண்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    அதில் ஒரு பெண் சொல்கிறார், என்னுடைய வீட்டில் 5 லட்சத்துக்கு புத்தர் சிலை வைத்திருக்கிறேன். நாங்கள் இப்பதான் வீடு கட்டினோம். வீடு கட்டும்போது, என்னுடைய வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதில் எனக்கு அந்த புத்தர் சிலை மட்டும் மிஸ் ஆனது. அதனால் 5 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

    Advertisement
    Zee 5 தமிழா தமிழா: 3 லட்சம் சம்பாதிக்கணும்.. நானே கணவனுக்கு சரக்கு ஊற்றி தரணும்.. இதுவே கனவு

    அதிர்ச்சியான தொகுப்பாளர்

    அதை கேட்டதும் அதிர்ச்சியான தொகுப்பாளர் ஆவுடையப்பன் அந்தப் பெண்ணின் கணவரிடம் 5 லட்சம் ரூபாயும் உடனே கொடுத்துட்டீங்களா? என்று கேட்கிறார். அதற்கு அந்த கணவரோ கொடுக்கவில்லை என்றால் வீட்டில் நமக்கு அர்ச்சனை நடக்கும். அதைவிட எனக்கு இந்த பணம் பெருசு இல்ல சார் என்று புலம்புகிறார். அப்போதான் என்னுடைய மனைவியிடம் 2 லட்சத்துக்கு ஹேண்ட் பேக் வச்சிருக்காங்க என்று சொன்னதும் ஆவுடையப்பன், அந்த பெண்ணிடம் என்னங்க ஹேண்ட் பேக்குக்கு மட்டும் 2 லட்சமா என்று கேட்கிறார்.

    Advertisement

    2 லட்சம் ஹேண்ட் பேக்

    அதற்கு அந்த பெண், ஆமா சார் நம்ம சுற்றி இருக்கிறவர்கள் முன்பு மரியாதையாக இருக்க வேண்டும் என்றால் இதுபோல செலவுகள் செய்ய வேண்டியது இருக்கு. இல்லை எனறால் நம்மை யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்கிறார். அப்போது அவருடைய கணவர் இவங்க பிரண்ட்ஸ் எல்லாம் இதைவிட அதிகமான விலையில் ஹேண்ட் பேக் வச்சிருக்காங்க, குறைந்தபட்சம் 5 லட்சம் வரைக்கும் இவங்க பிரண்ட்ஸ் கிட்ட ஹேண்ட் பேக் இருக்கு, அதே போல வாங்கணும் என்று தான் இவங்க ஆசைப்படுவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement
    தமிழா தமிழாவால் வெடித்த விவாதம்.. மகனுக்கு கொம்பு சீவிய தாய்.. நறுக்குன்னு இளம் பெண் கேட்ட கேள்வி

    ஆடம்பரமான செலவு

    இதை பார்க்கும் போது தான் நமக்கு பதட்டம் வருகிறது. அவங்க வச்சிருக்காங்க, இவங்க வச்சிருக்காங்க என்று அளவுக்கு மீறி ஆடம்பரமாக செலவு செய்யும் போது ஒருநாள் தேவையான பொருட்களையும் கூட இழக்க வேண்டியது இருக்கும். ஏற்கனவே பணவீக்கம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு போகிறது, வீட்டு லோன், பர்சனல் லோன் என்று எல்லாவற்றிற்கும் வட்டி விகிதமும் அதிகரிக்கிறது. ஆனால் சம்பளம் மட்டும் கிணற்றில் போட்ட கல்லு போல அப்படியே தான் இருக்கிறது. ஆனால் இவர்களைப் போல சிலர் கணக்கு பார்க்காமல் கண்ட மேணிக்கு செலவு செய்தால் நாளை என்ன ஆகும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Tamizha Tamizha: In this week’s episode of the Zee Tamil show *Tamizha Tamizha*, the discussion centered on women who aspire to a luxurious lifestyle and the husbands who struggle to fulfill those desires. During the debate, a statement made by one of the women left everyone outraged: she claimed that a single handbag she uses costs at least 2 lakh rupees—and, to make matters worse, she spoke about this with a sense of dissatisfaction.