ஹோட்டலில் நடிகையுடன் ஒன்றாக இருந்த பிரபல நடிகர்.. எந்த மனைவியும் பார்க்க கூடாத காட்சி! வெளிவந்த ரகசியம்

  • சென்னை: பிரபல நடிகர் ஈஸ்வர் சாய் மனைவி கண்ணீருடன் பேசிய வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தன்னுடைய கணவருடன் ஒன்றாக ஆல்பம் பாடலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையுடன் தன்னுடைய கணவர் ஹோட்டலில் ஒன்றாக இருப்பதாக தனக்கு தகவல் வந்ததாகவும் தான் அங்கு வந்து பார்த்தபோது கண்ட காட்சி தன்னால் நம்ப முடியவில்லை என்று அவர் அதிர்ச்சியுடன் பேசி இருக்கிறார்.

    Advertisement

    தெலுங்கு நடிகர்

    தெலுங்கு சினிமாவில் "பசிங்கா பாலு" என்ற பாடலின் மூலம் பிரபலமான நடிகர் ஈஸ்வர் சாய் தன்னுடன் ஒன்றாக நடித்த ஒரு நடிகையுடன் ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக அவருடைய மனைவிக்கு தகவல் வந்திருக்கிறது. முதலில் அதை அவருடைய மனைவி நம்பவில்லையாம். கணவன் மீது நம்பிக்கை இருந்ததால் அப்படி இருக்காது என்று நம்பினாராம். ஆனால் ஒரு சந்தேகத்தில் தான் அந்த ஹோட்டலுக்கு போய் பார்த்திருக்கிறார். அங்கு அவருடைய இதயத்தை உடைக்கும் காட்சியை கண்டிருக்கிறார்.

    Advertisement

    மனைவி கண்ட காட்சி

    அரைகுறை ஆடையில் நடிகரும், அவருடன் ஆல்பம் பாடலில் நடித்த நடிகையும் இருந்திருக்கின்றனர். இதை பார்த்த மனைவி கணவனிடம் கதறி அழுது இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பின்னர் நடிகர் ஈஸ்வர் சாயின் மனைவி பேசும்போது, என்னுடைய புருஷன் ரொம்ப நல்லவர். அவர் போதைப்பொருள்கள் கூட பயன்படுத்தினது கிடையாது. அந்த நடிகை தான் என் கணவரை ஏமாற்றி நடித்து அவர் பக்கம் திருப்பி இருக்கிறார்.

    கதறி அழுத மனைவி

    அந்த நடிகை ப்ரேக் அப்பில் கஷ்டப்பட்ட போது நான் தான் அவருக்கு ஆறுதலாக இருந்தேன். ஆனால் அவர் என் வாழ்க்கையை கெடுப்பார் என்று நினைத்து கூட பார்க்கல. எனக்கும் என் கணவருக்கும் கல்யானமாகி 7 வருஷம் ஆகுது. நாங்க சந்தோஷமாக இருந்தோம். ஆனா இந்த நடிகை வந்த பிறகு எங்க வாழ்க்கையே பிரச்சனை ஆயிடிச்சு என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

    Advertisement

    ஈஸ்வர் சாய் உடன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த அந்த நடிகை ஆல்பம் பாடல்களில் மட்டும் நடிக்க வில்லையாம். தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று பிரபலமானவராம். அவரும் நடிகர் ஈஸ்வர் சாய்யும் இணைந்து நடித்த ஆல்பம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் அதற்கு முன்பு நேற்று இருவரும் ஒரே ரூமில் சிக்கிக்கொண்டது தான் பெரிதாக பேசப்படுகிறது.

    இடையில் வந்த உறவு

    ஈஸ்டர் சாய் தன்னுடைய மனைவியுடன் கடந்த ஜூன் மாதம் திருமண நாளில் சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை கூட சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல நடிகர் ஈஸ்வர் சாய்க்கு ஒரு மகனும் இருக்கிறார். குழந்தை மற்றும் மனைவியுடன் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். சமீப காலமாகத்தான் தான் நடிக்கும் ஆல்பம் பாடல்கள் மேக்கிங் வீடியோ மற்றும் ப்ரோமோ வீடியோக்களை மட்டும் பகிர்ந்து இருக்கிறார்.

    English Summary

    Eeshwar Sai,: The video of famous actor Ishwar Sai's wife in tears is going viral on social media. She said that she was shocked when she got there that she was informed that her husband was together in the hotel with the actress who is acting in the album song with her husband.