சட்டசபையில் குலுங்கி சிரித்த முதல்வர்.. சந்தோஷத்துக்கு காரணம் இதுதானா? நிம்மதியில் ரசிகர்கள்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது பேச்சு, நடை, உடை என எல்லாமே மாறி இருக்கிறது. குறிப்பாக சட்டசபை கூட்டங்களில் பெரும்பாலும் அமைதியாக அமர்ந்திருப்பார், முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் இருப்பதும் சோசியல் மீடியாவில் அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருந்தது. எதையோ பறிகொடுத்தது போல இருக்கிறார் என்று பலரும் சொல்லி வந்த நிலையில் இன்று சட்டசபையில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இந்த விமர்சனங்களை வேறு விதத்தில் திருப்பி இருக்கிறது.

    Advertisement

    வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர்களின் பணியை எப்படி தொடர்ந்து கண்காணிப்பாளர்கள் என்பதை பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். விவசாய தலைவர்கள் பற்றியும் காமெடியாகவே அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அறநிலைத்துறை அமைச்சர் போன்றோர் இடை இடையே குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

    Advertisement

    எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு

    அப்போது அறநிலை துறை அமைச்சர் ரமேஷை பார்த்து, சாமி அமைச்சரே... அறநிலைத்துறை அமைச்சரே.. நீங்க எல்லாம் எப்படி டெக்னிக்கா பேசி பிரச்சாரம் செய்தீர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது என்று எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலகலப்பாக பேசியதும், முதல்வர் விஜய் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவரது சிரிப்பை பார்த்ததும் அவை முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.

    குலுங்கி சிரித்த முதல்வர்

    இந்த காட்சி தான் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வழக்கமாக அமைதியாக அமர்ந்திருக்கும் விஜய்யை வைத்து பல ட்ரோல் வீடியோக்களும், மீம்ஸ்களும் பரந்து வருகிறது. ஆனால் இப்போது அவர் இப்படி தன்னை மறந்து சிரித்த காட்சியை பகிர்ந்த ரசிகர்கள் இப்பதான் பழைய விஜய் தெரிகிறார், இந்த சிரிப்பை தான் நான் இத்தனை நாளாக மிஸ் பண்ணுனோம், முகத்தில் இப்போதுதான் ரிலாக்ஸ் தெரிகிறது என்றெல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள்.

    Advertisement

    சச்சின் திரைப்படத்தில் விஜய்யின் சிரிப்பை பார்த்து ஒரு சிறுமி கியூட்டா இருக்கு என்று சொல்லுவார். அந்த சிறுமி இப்போ சமீபத்தில் ஒரு பாடகியாக மாறி இருக்கும் நிலையில் அவர் அந்த காட்சியை ரீ கிரியேட் செய்திருந்தார். அந்த காட்சிகளை இப்போது முதல்வர் விஜயின் சிரிப்பு வீடியோவுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் பற்றி கடந்த சில மாதங்களவே பல சர்ச்சைகளும் பரவி வந்தது.

    ரீ கிரியேட் காட்சி

    அரசியலுக்கு வருவதை அறிவித்த சில மாதங்களிலேயே அவருடைய குடும்ப விஷயம் அதிகமாக பேசப்பட்டது. அதிலும் விஜய்யின் மனைவி சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு அதிகமாக விமர்சிக்கபட்டது. அதனால் விஜய் இந்த முறை ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கூட சிலர் சொல்லி வந்தனர். சொந்த குடும்பத்தை கவனிக்க முடியாதவர் எப்படி நாட்டை கவனிப்பார் என்ற விமர்சனத்தை பலர் வைத்தனர். ஆனாலும் மக்கள் அவரை முதல்வராக மாற்றி இருக்கின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    அதற்கு பிறகும் சிலர் தன்னுடைய மகன் மற்றும் குடும்பத்தை கவனிக்காதவர் என்று குற்றசாட்டை வைத்து வந்தனர்‌. ஆனால் விஜயின் மகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தன்னுடைய தந்தையை பற்றி பெருமையாக பேசி மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து மனைவி சங்கீதாவும் விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கி இருக்கிறார். இதனால் விஜய்க்கு குடும்பத்தில் நிம்மதி கிடைத்திருப்பதன் வெளிப்பாடுதான் இப்போ சட்டசபையில் இவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று சிலர் கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.

    சிக்சர் அடித்த சிஎம்.. நெல்லுக்கு அள்ளிக் கொடுத்த விஜய்! வரலாற்றிலேயே இது தான் முதன்முறையாமே!
    எப்போதும் அமைதியாக எதையோ பறி கொடுத்தது போல இருக்கும் விஜய் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது என்று கமாண்டுகளில் பலர் ஹார்ட்டின் பறக்க விடுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே.

    English Summary

    Vijay: After Chief Minister Vijay came into politics, everything like his speech, style and dress has changed. Especially during assembly meetings, he often sat quietly and showed no emotion on his face, which was often talked about on social media. While many people were saying that he seems to have lost something, an interesting incident that happened in the assembly today has turned these criticisms in a different way.