சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து வழக்கு கடந்த பல மாதங்களாகவே தமிழ்த்திரை உலகில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இருவரும் சோசியல் மீடியாவில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது முதல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் வரை இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இடைக்கால நீதிமன்ற உத்தரவு ரவி மகனுக்கு ஒரு முக்கியமான நிம்மதியை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது ஆர்த்தி ரவி கேட்ட மாதம் 40 லட்சம் இடைக்கால ஜீவனாம்ச கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக மாதம் 3 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அதே நேரத்தில் ரவி மோகனுக்கு தனது இரண்டு மகன்களையும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ரவி மோகனம் ஆர்த்தி ரவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பல வருஷங்களாக தமிழ் சினிமாவில் அழகான தம்பதிகளில் ஒருவராக பலம் வந்தார்கள். ஆனால் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்க்கு போனது. நான் துரோகம் செய்ய மாட்டேன்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்.. நெகிழ வைத்த வார்த்தை இந்த விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவி மோகன் பழகுவதை வைத்தும் சோசியல் மீடியாவில் அதிகமான விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பிறகு திடீரென தான் ரவி மோகனை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டு விட்டு கெனிஷா போய்விட்டார். அதற்கு பிறகு ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் பேசி இருந்தார். அதில் தான் பல வருஷங்களாக மன அழுத்தத்தில் வாழ்ந்தேன், என்னுடைய குழந்தைகளை கூட பார்க்க முடியாமல் தவித்தேன். என்னுடைய பெயரையும் வாழ்க்கையும் மீட்டெடுக்க வேண்டும் அதுவரை புதிய படங்களை வெளியிட மாட்டேன் என்றும் சொல்லியிருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. பிறகு பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தாலும் பழைய லெவலுக்கு ரவி மோகன் வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் ஆசைப்பட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருந்தார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். நான் இனி சினிமாவை விட்டு போக மாட்டேன் என்னுடைய குடும்ப வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். இப்படி சோசியல் மீடியாவில் சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்த ரவி மோகன் விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. தற்போதைய உத்தரவுகள் இடைக்கால ஏற்பாடுகள் மட்டுமே. வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை ஆனாலும் ஒரு வழியாக ரவி மோகனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தால் சந்தோஷம் என்று அவருடைய ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.ரவி மோகன் விவாகரத்து வழக்கு
பிறகு விவாகரத்து வழக்கின் ஒரு பகுதியாக ஆர்த்தி ரவி தனக்கும் தன்னுடைய குழந்தைகளின் பராமரிப்புக்கும் மாதம் 40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.ரவி மோகன் பற்றிய சர்ச்சை
கண்ணீர் விட்ட ரவி மோகன்