சென்னை: இந்தி சின்னத்திரை உலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் அதிதி ஷர்மா தன்னுடைய கணவர், மாமியார், நாத்தனார் மீது கொடுத்த குடும்ப வன்முறை புகார் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் வாழ்க்கையில் 1 மாதத்தில் பிரச்சனையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சீரியல் நடிகை புகார்
மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் அதிதி ஷர்மா கொடுத்த புகாரில், அதிதியின் கணவர் அபிநீத் வித்யானந்த் கவுஷிக் அவரது அம்மா மற்றும் சகோதரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது நடிகை அதிதி ஷர்மாவிற்கு ஆன்லைன் நடிப்பு பயிற்சி வகுப்பில் 2021 ஆம் ஆண்டு நடிகர் அபிநீத் வித்யானந்த் கவுஷிக் அறிமுகம் ஆகி இருக்கிறார். இருவருக்கும் ஆரம்பத்தில் நட்பு உருவாகி இருக்கிறது அந்த நட்பு பிறகு காதலாக மாறி இரண்டு குடும்பத்தினரின் சம்பகத்துடன் 2024 நவம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த திருமண வாழ்க்கையை இருவருமே பெரிதாக வெளியே தெரியாமல் வைத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ தொடங்கிய சில மாதங்களிலேயே இருவருக்கும் பிரச்சனைகள் தொடங்கி விட்டதாம். அதிதி ஏற்கனவே சில பேட்டிகளில் இது பற்றி பேசி இருக்கிறார். அதில் திருமணமான ஒரு மாதத்திலேயே தாங்க முடியாத அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தேன், என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துவார், என் மாமியார் என்னை கெட்ட வார்த்தையால் திட்டுவார் என்று கூறியிருக்கிறார். தற்போது கடந்த ஜூலை 30ஆம் தேதி கொடுத்த புகாரில், கணவர் அடிக்கடி தன்னை சந்தேகப்படுவதாகவும் தன்னுடைய செல்போனை சந்தேகத்துடன் செக் பண்ணுவதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறி இருக்கிறார். அதோடு மாமியாரும் நாத்தனார் தன்னை அவமதித்ததாகவும் திருமணத்தின் போது தான் அணிந்து வந்த தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதை அடுத்து சம்பந்தப்பட்ட மூவருக்கும் எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். 2018ல் ஹிந்தியில் ஒளிபரப்பான கலீரேன் என்ற சீரியலின் மூலம் பிரபலமான அதிதி பின்னர் நாகினி 3, ரப் சே ஹை துவா, அப்போலினா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். ஜி5 தளத்தில் வெளியான Crashh என்ற வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதிதி திருமண வாழ்க்கை பற்றி போன வருஷமே அதிகமாக பேசப்பட்டது. இருவரும் பிரித்து விட்டதாகவும், விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. அப்போது இரண்டு தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் மாறி மாறி வைத்திருந்தனர். இப்போது மீண்டும் அதிதி கொடுத்த குடும்ப வன்முறை புகார் மூலம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் போலீசார் இரண்டு தரப்பினரிடம் விளக்கம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கின் இறுதி முடிவு நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தெரியவரும்.குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை
யார் இந்த அதிதி ஷர்மா