சென்னை: வருங்கால முதல்வரே என்று ஒரு ரசிகர் உற்சாகமாக குரல் கொடுக்க, சிவகார்த்திகேயன் கொடுத்த அந்த ஒரு ரியாக்ஷன் தற்போது இணையத்தில் தனிக்கதையாக ஓடிக் கொண்டிருக்கிறது. அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட போது அவரை பார்த்து ரசிகர்கள் வழக்கம்போல ஆரவாரம் செய்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென வருங்கால முதல்வரே என்று குரல் எழுப்பினார். அதை கேட்ட சிவகார்த்திகேயன் சிரித்தப்படியே சற்று வெக்கப்பட்டு உடனே வாயில் விரல் வைத்து "உஷ்" என்று அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். அவ்வளவுதான் அந்த ரியாக்ஷனை வைத்து இணையத்தில் மீம்ஸ்களும் கலாய்ப்புகளும், ஆரம்பமாகிவிட்டன.
சிவகார்த்திகேயன் மனதில்
ஒரு பக்கம் வருங்கால முதல்வர் என்று ரசிகர் சொன்னதும் சிவகார்த்திகேயன் சிரித்ததை பார்த்து மனசுக்குள்ள என்ன நினைத்திருப்பாரோ என்று ரத்திசர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் அவரது முந்தைய சில சம்பவங்களையும் இப்போது தூசி தட்டி எடுத்து கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக விஜய் நடித்த கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கையில் கொடுத்து இந்தாங்க சிவா இனி நீங்க வச்சுக்கோங்க என்று சொன்னதும் உங்களுக்கு வேற வேலை இருக்கு, நீங்க அத பாருங்க. நான் இதை பார்த்துக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் சொல்லி இருந்தார்.
அதனால் சினிமாவை விட்டு விஜய் போன பிறகு அந்த இடத்தில் இனி சிவகார்த்திகேயன் தான் என்று விஜய் பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்தது. அந்த சமயத்தில் அவரை பலரும் திடீர் தளபதி என்று கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டனர். அப்படி இருந்தபோது பராசக்தி படம் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோத போகிறது என்றதும் பலரும் சிவகார்த்திகேயனை அடிக்க தொடங்கிவிட்டார். கடைசியில் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல்போய் விட்டது. இந்த நிலையில் இப்போ வருங்கால முதல்வரே என்று கூவுறாங்களே இனி அடுத்து விஜய் ரசிகர்கள் எப்படி அடிப்பாங்களோ என்று ஒரு நிமிடம் பயந்துவிட்டார் போல என்று சில நெட்டீசன்கள் கலாய்க்கிறார்கள். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயனுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் சொன்ன வார்த்தைக்கு அவர் சிரித்தபடி அமைதியாக இருக்க சைகை செய்தது மட்டும் தற்போது வைரலாகி வருகிறது. இருந்தாலும் அந்த ஒரு "உஷ்" சைகை வைத்து சிவா மனசுல என்ன ஓடிச்சு? என்று நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கதைகளை உருவாக்கி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் சிலர் கலாய்ப்புகளையும், சிவகார்த்திகேயன் மீது நீண்ட காலமாக ஓடும் அந்த தளபதி பேச்சையும் சேர்த்து பார்த்தால் இந்த ஒரு வீடியோ இன்னும் சில நாட்களுக்கு சோசியல் மீடியாவில் சுற்றிக்கொண்டே இருக்கும். ஏற்கனவே சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என்று கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த வீடியோவை பார்த்தால் என்ன போஸ்ட் போடுவார்? என்றும் சிலர் இப்போதே எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள்.ரசிகர் சொன்ன வார்த்தை
ரசிகர்கள் கேள்வி