பிக் பாஸில் நேற்று நடந்த சம்பவம் பலருக்கு பாடம்.. விஜய் சேதுபதி பேசியது மட்டுமல்ல! இன்னொரு விஷயம்!

  • சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில், விஜய் சேதுபதி தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு மறு விளக்கம் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் போட்டியாளர்கள் திட்டுவது போலவே மீண்டும் குதர்க்கமான விஷயங்களையும் பேசி இருந்தார். அது ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று தலைவராக இருந்த ஷாமாவில் சறுக்கல் தான் பலருக்கு பாடமாக அமைந்திருக்கிறது.

    Advertisement

    காமன் மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பிக்பாஸ் 10ல் கலந்து கொண்டாலும் உள்ளிருந்த மற்ற போட்டியாளர்களுக்கு டப் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த வாரம் ஷமா வீட்டின் தலைவர் ஆனதும் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து அவரே பாடம் கற்றுக்கொண்டு பல இடங்களில் சிறப்பாகவே விளையாடி வந்தார். முதல் வார தலைவராக இருந்த ஷாதிகா ஆரம்பத்தில் தைரியமாக பேசிக் கொண்டு இருந்தாலும் தலைவரான பிறகு எடுத்த முடிவுகள் எதிலுமே உறுதியாக இருக்க முடியவில்லை.

    Advertisement

    தலைமையில் ஏற்பட்ட பிரச்சனை

    இதுதான் என்னுடைய முடிவு என்று அவர் சொல்லிவிடுவார். பிறகு மற்ற போட்டியாளர்கள் ஏதாவது கருத்து சொன்னால் உடனே அதில் பின்வாங்கி விடுவார். ஆனால் ஷாமா அப்படி இல்லை. பல இடங்களில் ஸ்கோர் பண்ணி இருந்தார். எந்த ஒரு பிரச்சனையிலும் நழுவாமல் அட்ரஸ் செய்து கொண்டிருந்தார். பல இடங்களில் அவர் பொறுமையை தான் கையாண்டு இருந்தார். ஒரு சில இடங்களில் தலைவர் பதவியையும் பயன்படுத்தி இருந்தார். வீட்டிற்குள் அவருடைய பதவி சிறப்பாக இருந்தது குறை சொல்ல முடியாது என்று எதிரணியே பாராட்டும் அளவுக்கு தான் அவருடைய பர்பாமன்ஸ் இருந்தது.

    Advertisement

    மாறிய மனநிலை

    ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் ஷாமாவின் இமேஜ் நொறுங்கி விட்டது. அதாவது ஒரு கூடார டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் தன்னால் வெற்றிபெற முடியவில்லை என்றதும் தனது பதவியை பயன்படுத்தி விட்டார். அதுதான் அவர் செய்த ஒரு மிஸ்டேக். அது பற்றி சக போட்டியாளர்கள் அவரிடம் எடுத்து சொன்னாலும் நான் என்னுடைய முடிவிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்று உறுதியாகவே இருந்தார். கடைசியில் நேற்று விஜய் சேதுபதி அதைத்தான் அட்ரஸ் பண்ணி கேட்டிருந்தார்.

    விஜய் சேதுபதி கேட்ட கேள்வி

    அப்போது கூட அவர் எனக்கு கிடைத்த அட்வான்டேஜ் என்று நான் நினைத்தேன் சார் என்று அவர் மழுப்பலாக சொன்னது எல்லோருக்குமே கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு ஷாமா எல்லா முடிவுகளிலும் சரியாக எடுத்திருந்தாலும் இந்த ஒரு விஷயம் அவருக்கு பேக் ஃபேயர் ஆகிவிட்டது. அதுபோலத்தான் தலைமை பண்பு என்பது வெளியில் இருந்து பார்க்கும்போது ஆயிரம் குறை சொல்ற மாதிரி இருக்கலாம் ஆனால் அந்த இடத்தில் இருக்கும் போது தான் அதன் பிரச்சினை தெரியும்.

    Advertisement

    தவறாக போன விஷயம்

    நமக்கு சரின்னு படுற விஷயம் மற்றவர்களுக்கு சரியாக படாது என்பது நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாமா மூலம் அனைவருக்குமே புரிந்து இருக்கும். நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அது அவருடைய விளையாட்டு பெரிய அளவில் சுவாரசியத்தையோ அல்லது தனித்துவத்தை காட்டவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு அவருடைய விளையாட்டு கவனிக்க வைத்தது.

    ஆனாலும் அவர் தன்னுடைய பதவியை பயன்படுத்தியது, அதற்கு பிறகு சக போட்டியாளர்கள் எடுத்துச் சொன்ன பிறகும் தன்னுடைய முடிவிலிருந்து மாறவே மாட்டேன், ஒருமுறை நான் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. என்பது போலவே அவர் ரியாக்சன் கொடுத்துக் கொண்டிருந்தது தான் இப்போ அவருக்கே பிரச்சனையாக இருக்கிறது. சரி இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இவரை வைத்து விஜய் சேதுபதி என்ன பஞ்சாயத்து ஏற்படுத்தப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    In yesterday's episode of *Bigg Boss*, Vijay Sethupathi offered further clarification regarding the controversies surrounding him. At the same time, he once again engaged in contentious remarks, much like the contestants themselves. However, setting that aside, the missteps made by Shama—who served as the leader yesterday—have served as a lesson for many.