அனுபமா பேட்டியை சுற்றி எழும் முக்கிய கேள்வி.. எல்லாவற்றுக்கும் Narcissist என்ற பெயரா? விவாதம்

  • சென்னை: நடிகை அனுபமாவின் பேட்டி முழுமையாக பார்த்த பிறகு பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் அதை ஒப்பிட்டு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அனுபமா சொன்ன அனுபவத்தை மறக்க முடியாது. ஆனால் அவர் அனுபவித்த எல்லாவற்றையும் நார்சிஸ்ட் என்ற ஒரே வார்த்தைக்குள் கொண்டு வருவது சரியா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

    Advertisement

    முதலில் Narcissist Abuse என்றால் என்ன?

    எளிமையாக சொன்னால் ஒருவருடைய சுயமரியாதை, சுதந்திரம், உணர்வுகளை தொடர்ந்து பாதித்து அவரை கட்டுப்படுத்தும் அல்லது மன ரீதியாக காயப்படுத்தும் உறவு நடத்தைகளை குறிக்க இந்த வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது தனியாக ஒரு மருத்துவ நோய் அல்ல அதேபோல் ஒருவரை Narcissist என்று சொல்லி விடுவதும் அவருக்கு Narcissist Personality Disorder இருக்கிறது என்று மருத்துவ ரீதியாக முடிவு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. NPD-ஐ தகுதியான மனநல நிபுணர் தான் மதிப்பீடு செய்து கண்டறிய முடியும்

    Advertisement


    அனுபமா குற்றசாட்டு

    அனுபமா பேசியதை பார்த்தால் அவருடைய முக்கிய குற்றச்சாட்டு இதுதான், ஆரம்பத்தில் தன்னை மிகவும் புரிந்து கொள்வது போல இருந்தது. தன்னுடைய உடை சமூக வலைதள பதிவுகள், தான் மற்றவர்களுடன் பேசுவது இந்த சின்ன சின்ன விஷயங்களும் கட்டுப்பாட்ட ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். முதலில் அது அக்கரையாக தெரிந்தது. நாளடைவில் அதுவே கட்டுப்பாடாக மாறிவிட்டது என்பதுதான் அவர் சொல்லும் அனுபவம்.

    உதாரணமாக ஒரு உடையை அணிந்த போது இதில் நீ அழகாக இருக்கிறாய் என்று பாராட்டுவது இயல்பான விஷயமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அந்த நபருக்கு பிடித்த உடைகளை மட்டுமே அணிய வேண்டும்.. என்ன பதிவை சமூக வலைத்தளத்தில் போட வேண்டும் என்பதற்கு கூட அவரிடம் கேட்க வேண்டும் என்ற நிலை வந்தால் அது உறவில் healthy boundary இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும்.

    Advertisement

    மனநிலை பாகுபாடு

    அதுபோல அனுபமா இன்னொரு விஷயத்தையும் மிகவும் அழுத்தமாக சொல்கிறார். ஒருநாள் ரொம்ப அன்பாக ரெமோ மாதிரி இருப்பது, மறுநாள் அந்நியன் மாதிரி நடந்து கொள்வது, மீண்டும் வந்து அன்பை கொட்டுவது இந்த மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல் தான் தவித்ததாக அவர் கூறுகிறார். இதுபோன்ற அதிகப்படியான பாராட்டும் வேகமான எமோஷனல் அழுத்தம் போன்றவை உளவியல் விவாதங்களில் love Bombing என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அதுவும் ஒருவருக்கு NDP இருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடையாது.

    இப்படிப்பட்ட நடத்தை வேறு காரணங்களால் ஏற்படலாம். இதில் தான் அனுபமா பேட்டியை பார்க்கும்போது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டிய இடம் வருகிறது. அவர் பொய் சொல்கிறார் என்று சொல்ல முடியாது. அவர் அனுபவித்ததை அவர் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார். அந்த வலியை யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அந்த அனுபவத்திற்கு நாம் வெளியில் இருந்து ஒரு மருத்துவ பெயரை வைத்து இதுதான் நடந்திருக்கிறது என்று உறுதியாக முடிவு செய்து விடவும் முடியாது.

    Advertisement

    பலரும் கவனிக்க வேண்டியது

    ஏனென்றால் ஒரு ஆண் தன்னுடைய மனைவி வேறு ஒரு ஆணிடம் சிரித்து பேசும் போது சங்கடப்படுவது மட்டும் அவரை நார்சிஸ்ட்டாக மாற்றாது. அதேபோல் கணவன் கோபமாக இருக்கும்போது மனைவியும் அமைதியாகி விடுவது மட்டும் மன ரீதியான துன்புறுத்தல் என்று சொல்ல முடியாது. நடந்ததை மட்டும் பார்த்துவிட்டு முடிவு செய்யாமல் அந்த விஷயம் எப்படி தொடர்ந்து நடக்கிறது? அதன் பின்னணி என்ன? அது அந்த உறவில் இருக்கும் இன்னொருவருக்கு எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியது இருக்குது.

    அனுபமா சொன்ன ஒரு விஷயம் பல குடும்பங்களிலும் இருக்கக்கூடிய தாகவே இருக்கிறது. அவர் சிரித்தால் நானும் சிரிக்க வேண்டும், அவர் சீரியஸாக இருந்தால் நானும் அப்படியே இருக்க வேண்டும் என்ற உணர்வு.. இதைக் கேட்டதும் சிலர் இது எங்கள் வீட்டிலும் நடக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அதே சம்பவத்தை கணவரிடம் தான் கேட்டால் நான் உனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லையா? நீ உனக்கு பிடித்ததை செய்யவே இல்லையா? என்று அவர் வேறு ஒரு கதையை சொல்லக்கூடும்.

    Advertisement

    அதனால் தான் ஒரு உறவில் நடந்த பிரச்சனையை வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு கோணத்தில் தீர்ப்பு சொல்லி விடுவது ஆபத்தானது அனுபமாவின் பேட்டிக்கு பிறகு பல பெண்கள் இது என்னுடைய கதையும் கூட என்று கூறி வருகின்றனர். அது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஏனென்றால் காதல், திருமணப்பிரிவு, கட்டுப்பாடு, எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களில் பலருக்கும் பல அனுபவம் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கதையும் ஒரே மாதிரியானது கிடையாது. ஒருவருக்கு அது உண்மையான மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம், இன்னொருவருக்கு அது இரண்டு பேருடைய எதிர்பார்ப்புகள் ஒத்துப்போகாத பிரச்சனையாக இருக்கலாம். இன்னொருவருக்கு அது பாதுகாப்பின்மை அல்லது குடும்ப சமூக அழுத்தங்களால் ஏற்பட்ட உறவு பிரச்சனையாக இருக்கலாம். அதனால் தான் அவர் நார்சிஸ்ட்டால் பாதிக்கப்பட்டவர் என்று 2 வரிகளில் ஒரு முழு உறவை முடிவு செய்துவிடுவது சரியான அணுகுமுறை அல்ல.

    Advertisement

    எச்சரிக்கை

    அதே நேரத்தில் ஆண்களுக்கும் இந்த பேட்டி ஒரு முக்கியமான எச்சரிக்கையை கொடுக்கிறது. காதலித்த பெண் நம்முடைய சொத்து கிடையாது. அவள் என்ன உடை அணிய வேண்டும்? யாருடன் பேச வேண்டும்? என்ன பதிவிட வேண்டும் என்று ஒவ்வொன்றாக கட்டுப்படுத்துவது காதல் அல்ல. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் என்ற பெயரில் ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதும் ஆரோக்கியமான உறவு கிடையாது.

    அதுபோல பெண்களும் தங்களுக்கு பிடிக்காத ஒவ்வொரு நடத்தைக்கும் உடனடியாக நார்சிஸ்ட், டாக்ஸிக் என்று முத்திரை குத்துவதற்கு முன்பு இது உண்மையிலேயே துன்புறுத்தலா? அல்லது இருவருக்கும் ஆன கருத்து வேறுபாடா? என்று கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டியது இருக்கிறது. உறவு என்றால் இரண்டு பேரில் மனநிலை, கடந்த காலம், குடும்பப் பின்னணி, சமூக அழுத்தம், பாதுகாப்பின்மை என பல விஷயங்கள் கலந்ததுதான்.

    அனுபமா அனுபவித்த வலி உண்மையானது என்றால் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அந்த வலியை வைத்து சம்பந்தப்பட்ட இன்னொருவருக்கு மருத்துவ ரீதியான முத்திரை குத்துவது மட்டும் நம்முடைய வேலையாக இருக்கக் கூடாது. கடைசியில் காதல் நம்மை நாமாக இருக்க விட வேண்டும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, காதலுக்காக ஒருவருடைய சுயமரியாதையை இழக்க வேண்டிய நிலை வந்து விட்டால் அந்த உறவை பற்றி நிச்சயமாக ஒருவரை ஒரு முறை நின்று யோசிக்க வேண்டும்.

    English Summary

    After watching actress Anupama's interview in its entirety, many women have begun comparing her account to incidents in their own lives. At the same time, others—while acknowledging that Anupama's experience is unforgettable—question whether it is appropriate to reduce everything she went through to the single label of "narcissist."