3000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி.. முதல்வரிடம் லெஜெண்ட் சரவணன் வைத்த கோரிக்கை! விஷயம் இதுதானா?

  • சென்னை: தொழிலதிபரும் நடிகருமாக லெஜன்ட் சரவணன் ஆயுத பூஜையை முன்னிட்டு 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச உதவிகளை வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயங்கள்தான் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் விஜய் மனது வைத்தால் அவர்களுடைய கோரிக்கைகளை ஒரே நிமிடத்தில் நிறைவேற்றிவிட முடியும் என்று பேசியிருக்கிறார். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாகத் தானே விஜயிடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், லெஜெண்ட் சரவணன் ஏன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார், ஆட்டோ ஓட்டுநர்களின் தற்போதைய பிரச்சினைகள் என்ன என்பதுதான் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    லெஜெண்ட் சரவணன் செய்த உதவி

    ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய லெஜெண்ட் சரவணன், பல ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. தொடர்ந்து தங்களுடைய வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இப்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் மனது வைத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஒரு நொடியில் நிறைவேற்ற முடியும் என்று பேசி கொண்டிருந்தார் அப்போது விஜய் பெயரை சொன்னதும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆரவாரம் செய்தனர்.

    Advertisement

    அதோடு, ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாகத் தானே விஜயிடம் கோரிக்கை வைப்பதாகவும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் உதவிகளை வழங்கிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக லெஜெண்ட் சரவணன் பேசியிருப்பதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என்ன பிரச்சினை?

    தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் சமீபகாலமாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்தால் தங்களுடைய வருமானம் பாதிக்கப்படுவதாக சில ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பயணிகள் எண்ணிக்கை குறைவதால் தினசரி வருமானம் பாதிக்கப்படுவதாகவும், இதைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Advertisement

    இதற்கிடையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாகவும், தீபாவளிக்கு முன்பாக மீட்டர் கட்டணத்தைத் திருத்துவது குறித்து உறுதி அளிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

    முதல்வரிடம் கோரிக்கை

    இப்படி பல கோரிக்கைகள் இருக்கும் சூழலில், ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினைகளை முதலமைச்சர் விஜயிடம் கொண்டு செல்வதாக லெஜெண்ட் சரவணன் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் லெஜெண்ட் சரவணா இதற்கு முன்பு எத்தனையோ உதவிகள் செய்திருந்தாலும் இப்போது அவர் செய்யும் உதவிகளை வைத்து பல விமர்சனங்களும் வருகிறது. அடுத்து அவரும் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற கேள்விதான் அதிகமாக எழுகிறது. அதிலும் இவர் ஆரம்பத்திலேயே விஜய் அண்ணா என்று உரிமையாக அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பது போல பேசுவதை பார்த்ததும் இவர் விஜய் கட்சியில் தான் இணைய போகிறாரா? அதற்காகத்தான் இப்படி பேசுகிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English Summary

    Legend Saravanan: Businessman and actor 'The Legend' Saravanan provided free assistance to 3,000 auto-rickshaw drivers on the occasion of Ayudha Puja. His remarks during the event are now gaining attention online. Noting that the demands of the auto-rickshaw drivers have remained unfulfilled for many years, he stated that if Chief Minister Vijay decides to intervene, their requests could be met in just a single minute.