சென்னை: இயக்குனர் ராஜ் கருப்பன் இயக்கத்தில் வெளியான மொத ராத்திரி படம் தான் சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த படத்தில் சில காட்சிகள் பலருடைய வாழ்க்கையில் ஒத்துபோவதை பார்க்க முடிகிறது. அதிலும் கதாநாயகி முத்து செல்வி அவருடைய காதலிடம் ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார். நீ என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் பாத்துக்குறேன்னு சொல்லு என்று சொல்லுவார். இதுதான் பல பெண்களின் ஆசை.
பொதுவாக பெண்ணாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய துணை தனக்கு எந்த சூழ்நிலையிலும் துணையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இந்தப் படத்தில் ஹீரோயினி முத்து வீட்டில் சின்ன வயதில் இருந்தே எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு. கணவன் இறந்த பிறகு பொண்ணை ஏதாவது குறை சொல்லக்கூடாது என்று அம்மா முத்துவின் ஆசைகளுக்கு கட்டுப்பாடு போட்டுக் கொண்டே இருக்கிறார்.
மொத ராத்திரி பட கதை
முத்து ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்கி இருந்தாலும் அதுவெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது நீ பாத்திரம் கழுவு என்று சொல்லுற அம்மா. ஆனால் அவருடைய காதலன் " இந்த உலகத்தில் என்ன மாதிரி வேறு யாராலும் உன்னை காதலிக்க முடியாது" என்று சொல்லும் வார்த்தையை கேட்டு மயங்கி காதலில் விழுந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத சூழலில் கல்யாணம் முடிந்த பிறகும் கூட அந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாமல் அலாரத்தை மாற்றி வைத்துவிட்டு தூங்கிய காதலனை நம்பி முத்து எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் அந்த காதலன் தன்னால் இப்போதைக்கு திருமண வாழ்க்கையில் நுழைய முடியாது என்று தெரிந்து முத்து செல்வியை அவருடைய கணவருடனே சேர்த்து விட்டு ஓடி விடுகிறார். அதற்குப் பிறகும் அவருடைய கணவர் மருது சொல்லும் வார்த்தை தான் முத்துவுக்கு ஆறுதலை கொடுக்கிறது. அதுவரைக்கும் காதலனிடம் என்ன நடந்தாலும் பரவாயில்லை உனக்காக நான் இருக்கிறேன்னு சொல்லு என்று பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கணவர் "என்ன நடந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் உனக்காக நிற்பேன்" என்று சொல்வார். அந்த நேரத்தில் முத்து செல்வியின் ரியாக்ஷன் படத்தில் அவ்வளவு க்யூட்டாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் இதுபோல சின்ன சின்ன விஷயங்கள் கூட இயல்பாக மக்கள் வாழ்க்கையுடன் கனெக்ட் ஆகுற மாதிரி இருக்கிறது. இப்போது பெரிய நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம் என நிஜ வாழ்க்கையில் ஒட்டாத மாதிரி ஏதேதோ கதையை படமாக காட்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் இயல்பாக ஒரு திருமணத்தில் நடக்கும் சண்டைகள், ஈகோ, முகத்துக்கு நேராக போடும் நாடகம் என பல விஷயங்களை தத்துரூபமாக காட்டி இருக்கிறார்கள். அதிலும் பல இடங்களில் தீண்டாமை சாதியை காட்டி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த படத்தின் இயக்குனர் ராஜ் கருப்பன் ஒரு பேட்டியில் பேசும்போது, "நான் தலித் இனத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆனால் என் உடன் பழகியவர்கள் சொன்ன விஷயங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை வைத்து தான் இது போன்ற காட்சிகளை வைத்தேன்" என்று சொல்லி இருந்தார். ஆனாலும் இந்த படத்தை பார்த்த பிறகு சிலர் இப்ப எல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கிறாங்க? என்று கேட்கிறார்கள். அவர்கள் ஒருவேளை செய்தி சேனல்கள் பார்க்கவில்லை என்ற சந்தேகம் தான் வருகிறது. இப்போதும் பல இடங்களில் சாதி கொடுமைகள், கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்கு தெரியவில்லை என்பதுதான் அதிசயமாக இருக்கிறது.ஹீரோ சொன்ன வார்த்தை
படத்தின் வெற்றிக்கு காரணம்
சாதி கொடுமை