சென்னை: நானி படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அழகான கதைகள், இயல்பான நடிப்பு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த முறை நானி இந்த பாதையில் வரவே இல்லை. தசரா படத்துக்கு பிறகு இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓலாவுடன் மீண்டும் இணைந்திருக்கும் நானியை இதுவரை பார்க்காத அளவிற்கு மிகவும் ஆக்ரோஷமான கேரக்டரில் கொண்டு வந்திருக்கிறது. படம் செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.
படத்தின் கதை 1980களில் செகந்திராபாத்தில் நடக்கிறது. அங்கு ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் சவாரி சமூகத்தை சுற்றி தான் மொத்த கதையும் நகர்கிறது. அந்த சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் மாலிக் என்ற கேரக்டர் மக்களை அடக்கி ஆளுகிறார். சிறையில் இருந்து திரும்பி வரும் ஜடால் என்ற கேரக்டராக நானி நடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தனக்காக மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் மக்களுக்காக போராட வேண்டிய சூழலுக்குள் அவர் செல்கிறார். இதுதான் படத்தின் அடிப்படை கதை. ஆனால் இயக்குனர் இதை சாதாரண ஆக்சன் படமாக மட்டும் எடுத்துச் செல்லவில்லை. அடக்குமுறை, அடையாளம், பழிவாங்குதல், அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என நிறைய விஷயங்களை உள்ளே வைத்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா தெலுங்கானாவில் தான் பார்த்த சில நிஜ சம்பவங்களும் படத்துக்கு உத்வேகம் இருந்ததாக முன்பே தெரிவித்து இருந்தார். அப்படி என்றால் படம் நல்லா இருக்கா? இல்லையா? என்றால் இங்கு தான் ரசிகர்களிடம் கருத்து இரண்டாக பிரிகிறது. படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் நானியின் தோற்றம், நடிப்பு, உலகத்தை உருவாக்கிய விதம் இடைவேளை காட்சி ஆகியவை கவனம் ஈர்பதாகவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். அனிருத் இசையும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறதாக பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இடைவேளைக்கு பிறகு படத்தின் திரைக்கதை தடுமாறுவதாகவும் ஒரு தரப்பு விமர்சிக்கிறது. குறிப்பாக அதிகப்படியான வன்முறை, பல விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்ல முயற்சிப்பது, சில கேரக்டர்களுக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காதது ஆகியவை படத்தின் வேகத்தையும் தாக்கத்தையும் குறைத்து விட்டதாக சிலரின் கருத்தாக இருக்கிறது. அதிலும் நானி மோகன் பாபு மோதல் எப்படி இருக்கிறது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த மோதல் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனமும் இருக்கிறது. அதே நேரத்தில் நானியின் நடிப்பு முதல் பாதியில் உருவாக்கப்பட்ட அந்த இருந்த உலகத்தையும் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். கயாடு லோஹர், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயன் என பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக சோனாலி குல்கர்னி நானியின் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த அம்மா மகன் உணர்வு தான் படத்தின் சில இடங்களில் உணர்ச்சிகளை கொடுப்பதாக ஒரு ரசிகர் கூறி இருக்கிறார். அதுபோல திரைப்பட விமர்சனரான கிரிஸ்டோபர் கனகராஜ் இந்த படத்தை பார்த்து விட்டு டாக்ஸிக் படத்துக்கு டார்ச்சர் என போட்டது போல் இதற்கு பதிவு போடாமல், முதல் 20 நிமிடங்களுக்கும் இடைவேளை காட்சி மற்றும் கேசிஆர் வரும் இடம் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. நானிக்கு மாஸ் அவதார் செட்டே ஆகவில்லை. காமெடி வில்லன், டம்மி கயோடு லேஹர் அம்மா மகன் எமோஷனல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். மொத்தத்தில் பார்த்தால் தி பாரடைஸ் நானியின் வழக்கமான படம் கிடையாது. நானியின் மாஸ் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் செல்பவர்களுக்கு சில காட்சிகள் நிச்சயம் பிடிக்கலாம். ஆனால் கதையும் திரைக்கதையும் இறுதிவரை ஒரே வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இரண்டாம் பாதியில் ஏமாற்றமாக இருக்கலாம்.தி பாரடைஸ் கதை
நானியின் ஷ்யாம் சிங்கா ராய் படம் Dravidian Commercial Movie- சமூக வலைதளங்களில் கொண்டாட்டமான வரவேற்பு
ரசிகர்கள் கருத்து