சென்னை: சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்டாகி கொண்டே இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் நெட்டிசன்களின் கற்பனையே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கி விடுகிறது. தற்போது நடிகர் சூர்யா ஜோதிகா குடும்பத்தை மையமாக வைத்து வைரலாகும் ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையவாசிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
நெட்டிசன்களின் கமாண்ட்
அதாவது சூர்யா குடும்பத்தை பற்றி வெளியான அந்த பதிவில், ஒரு நெட்டிசன் "நான் ஒரு நாளாவது ஜோதிகாவாக மாறி சூர்யாவுடன் வாழ வேண்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த மற்றொருவர், "அப்படியானால் நான் சூர்யாவின் உடம்புக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து விடுவேன்" என்று கமாண்ட் போட்டு இருக்கிறார்.
ஜூனியர் சூர்யா ரெடியா? தேவ்-தியாவின் லேட்டஸ்ட் வீடியோ! ஜோதிகா கொடுத்த ரியாக்ஷன், தள்ளி நின்ற
அதோடு அரட்டை முடியவில்லை. அடுத்ததாக இன்னொருவர், "நான் சூர்யாவின் மகன் உடம்புக்குள் புகுந்து இரண்டு பேருக்கும் நடுவில் படுத்துக்கொள்வேன்" என்று கற்பனையை இன்னும் ஒரு படி உயர்த்தி இருக்கிறார். ஆனால் கடைசியாக வந்த கமெண்ட் தான் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. அதாவது, "நீங்க சொன்ன மாதிரி நடந்தால், நான் சிவக்குமார் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து விடிய விடிய மகாபாரதம் சொல்லி ரெண்டு பேரையும் தூங்க விடாம பண்ணிடுவேன்" என்று மிரட்டுற மாதிரி வந்த அந்த பதிலை பார்த்து பலருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த ஸ்கிரீன்ஷாட் பார்த்தவர்கள், கற்பனைக்கும் ஒரு அளவு இருக்கும் ஆனால் இது அதையெல்லாம் தாண்டி போய்விட்டது, சோசியல் மீடியாவில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும்போது இப்போ இதுதான் பொது பிரச்சனையா மாறிவிட்டது என்று ஜாலியான கமெண்ட் செய்து வருகின்றனர். அரசியல், சினிமா, வசூல் நிலவரம், ட்ரோல் என தினமும் ஏதாவது ஒரு விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கிடையில் இப்படி ஒரு காமெடியான வாக்குவாதங்களும் இடையே வைரலாகி இணையவாசிகளுக்கு சின்ன ரிலாக்ஸ் கொடுத்து விடுகிறது. ஏற்கனவே சமீபத்தில் அரசியல் பேச்சு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. விஜய் அரசியலில் முழு நேரமாக களமிறங்கிய பிறகு அவருக்கு மக்கள் முதல் அமைச்சர் பதவியை கொடுத்து விட்டார்கள். உடனே சினிமா துறையில் இருந்து பலர் நாங்களும் இனி மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் பல வருடங்களாக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலும் இப்போது விஜய் வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய அரசியல் தொடர்பான விருப்பத்தையும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதுபோல நடிகர் விஷாலும் மக்களுக்கு இன்னும் அதிகமான சேவை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். சில வருஷங்களாக அமைதியாக இருந்த நடிகர் தனுஷ் மீண்டும் நற்பணி முயற்சிகளை வேகப்படுத்தி சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை பகிர ஆரம்பித்திருப்பதும் பேசு பொருளாக உள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள், அரசியல், சமூக சேவை, பொதுமக்கள் பிரச்சனைகள் என்று தீவிரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் கூடு விட்டு கூடு பாய்வதால் யார் எங்கே போவார்கள் என்ற கற்பனை உலகத்தில் வேற லெவல் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பெரிய அரசியல் விவாதங்களுக்கும் சினிமா சர்ச்சைகளுக்கும் நடுவே இப்படி ஒரு சாதாரண கமெண்ட் இணையத்தில் ஆயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பார்த்தால் சிவக்குமார் என்ன சொல்லப் போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.வைரலான மீம்ஸ்
அரசியல் விவாதம்
ரசிகர்களின் கேள்வி