யார் யார் பெயரையோ எதிர்பார்த்தேன்! இனி விஜய் பெயர் 100 வருஷம் நிலைத்திருக்கும்! விஷால் சொன்ன காரணம்

  • சென்னை: நடிகர் விஷால் எப்போது விஜய் பற்றி பேசினாலும் அது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிடுகிறது. இப்போது மகுடம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்த ஒரு சம்பவம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதன் நிகழ்ச்சியில் பேசிய விஷால் நடிகர் சங்க கட்டிடம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென முதல்வர் விஜய்யை சந்தித்த தருணத்தை பற்றியும் பேசினார்.

    Advertisement

    நடிகர் விஷால் பேட்டி

    அப்போது, நான் விஜய் சாரை சந்தித்தபோது அவரிடம் யார் யார் பெயரோ அந்த கல்வெட்டில் வரப்போகுது என்று நினைத்தேன். ஆனால் கடைசில பார்த்தா உங்க (விஜய்) பேரு தான் வரப்போகுது. நடிகர் சங்க கட்டடத்தின் கல்வெட்டில் முதல்வர் சி ஜோசப் விஜய் என்ற பெயர் பொறிக்கப்படும். இன்னும் 100 வருஷம் ஆனாலும் அந்தப் பெயர் வரலாறு அங்கேயே இருக்கும் என்று விஜய்யிடம் சொன்னதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    நடிகர் சங்க கட்டிட பிரச்சனை

    பல வருஷங்களாக முடிக்க முடியாமல் கிடந்த நடிகர் சங்க புதிய கட்டிட பணிகள் சமீப காலமாக மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அந்த கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திறப்பு விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என்றும் அவரது பெயர் கல்வெட்டில் இடம்பெறும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதைத்தான் இப்போது விஷால் தனது பேச்சில் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறார்.

    பல வருடங்களாக நடந்து வந்த இந்த கட்டிட பணி எப்போதான் முடிவுக்கு வரும் என்று மீம்ஸ்களில் கூட பலர் கலாய்த்து இருந்தார்கள். விஷால் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த கட்டிட பணியை முடித்த பிறகு தான் நான் கல்யாணமே பண்ணிக் கொள்வேன் என்று கூட அறிவித்திருந்தார். சமீபத்தில் அவருடைய என்கேஜ்மென்ட் எளிமையாக நடந்திருந்தாலும், திருமணம் எப்போது என்று பலரும் கேட்டு வருகின்றனர். கட்டட வேலை முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று விஷாலும் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    விஜய் பற்றி பாராட்டு

    அதுபோல விஜய் அரசியலுக்கு வந்த பிறகும் விஷால் பலமுறை அவரை வெளிப்படையாக பாராட்டுகிறார். அரசியலில் எடுத்த சில முடிவுகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் குறித்து நேர்மறையாக கருத்த தெரிவித்தால் அவர் கவனிக்கப்பட்டார். அதே சமயத்தில் சினிமாத்துறைக்கு அமைச்சராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டபோது கூட எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    சினிமாவைப் பற்றி தெரியாதவருக்கு இந்த துறை கொடுத்திருக்க வேண்டாம், சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்த முதல்வர் விஜயே இந்த துறையையும் சேர்த்து கவனித்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஆனாலும் அது அப்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. இப்போது விஜய் குறித்து விஷால் பெருமையாக பேசி இருப்பது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    விஷாலின் மகுடம் படம்

    விஷால் இயக்கி நடித்திருக்கும் மகுடம் படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷனை விஷால் தொடங்கிவிட்டார் .அதே நேரத்தில் அடுத்த வாரம் விஸ்வநாத் & சன்ஸ் படமும் வெளியாக இருப்பதால் சூர்யாவுடன் விஷால் மோத இருக்கிறார். ஏற்கனவே கவின், நயன்தாரா நடித்த ஹாய் படமும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அந்த படம் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்விகளுடன் இருக்கிறது.

    English Summary

    Vishal: Whenever actor Vishal talks about Vijay, it becomes a talking point among fans. Now an incident shared by him during the promotion of Makudam is going viral on social media. Speaking on its program, Vishal also talked about the moment when he suddenly met Chief Minister Vijay while talking about the Actors' Association building.