பாரதிராஜா வாழ்க்கையில் நடந்த அதே சோகம், ஜானகி அம்மாவுக்கும்.. என்ன ஒரு வலி? யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!

  • சென்னை: இயக்குனர் பாரதிராஜா வாழ்க்கையில் நடந்த ஒரு பெரிய துயரம் தான் பாடகி ஜானகியின் கடைசி காலத்திலும் கிட்டத்தட்ட அதே போல நடந்திருக்கிறது. இருவருமே இந்திய சினிமா கொண்டாடிய ஜாம்பவான்கள். ஆனால் அவர்கள் இருவருடைய வாழ்க்கையில் நடந்த சோகம் யாருக்கும் நடக்க கூடாது என்று ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    பாரதிராஜா கேமராவால் கிராமத்து மனிதர்களின் உணர்வுகளை பேச வைத்தார். அதேபோல பாடகி ஜானகி தனது குரலால் காதல் முதல் தாய்மை வரை அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்தார். ஆனால் கடைசி காலத்தில் இருவரும் சந்தித்தது மகன் இழப்பு என்ற தாங்க முடியாத வலி.

    Advertisement

    பாரதிராஜா மகன் இழப்பு

    பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த 2025ல் தனது 48வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஹார்ட் ஆபரேஷன் செய்து பிறகு வீட்டில் ரெஸ்டில் இருந்த நேரத்தில் அவருக்கு எதிர்பாராத மரணம் நிகழ்ந்தது. மகனின் இறுதிச்சடங்கில் பாரதிராஜா உடைந்து நின்ற காட்சிகளை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. மகன் இறந்த துயரத்தில் இருந்து அவர் மீளவே இல்லை என்று பாரதிராஜாவின் குடும்பத்தினரும் பேசி இருந்தனர்.

    அதன் பிறகு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சிலமுறை மருத்துவமனை சிகிச்சை எடுத்திருந்தார். ஆனாலும் கடந்த 2026 ஜூன் 10ஆம் தேதி தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

    Advertisement

    எஸ் ஜானகியின் மகன் பிறப்பு

    இப்போது எஸ் ஜானகியின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தாலும் மனதை நொறுக்கும் இன்னொரு ஒற்றுமை தெரிகிறது. ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி 22ஆம் தேதி உயிரிழந்தார். மகனின் மறைவு தொடர்பான தவறான தகவல்கள் பரவியதால் அப்போது ஜானகியின் பேத்தி விளக்கம் கொடுத்திருந்தார்.

    பாடகி ஜானகி மறைவு

    பல கோடி ரசிகர்களுக்கு ஜானகி அம்மாவாக இருந்தாலும் அவருக்கு முரளி கிருஷ்ணா ஒரே மகன். 88 வயதான தாய்க்கு ஒரு மகன் இறப்பு சாதாரணமாகிவிடுமா என்ன? அந்த துயரம் நடந்து ஆறு மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் ஜூலை 11ஆம் தேதி ஜானகி அம்மாவும் உடல் நல பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    Advertisement

    55 வருஷம் பாடிய பிறகுதான் ஞாபகம் வந்ததா? பத்மபூஷனையே வேண்டாம் என்று சொன்ன எஸ் ஜானகி.. காரணம் தெரியுமா?
    பாரதிராஜா தன்னுடைய மகனை இழந்தார் அதற்குப் பிறகு மறைந்தார். அதேபோல ஜானகி அம்மாவும் தன்னுடைய ஒரே மகன் முரளி கிருஷ்ணாவை இழந்தார். சில மாதங்களில் அவரும் இந்த உலகத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். இவர்கள் இருவருடைய மரணத்திற்கும் காரணம் மகனை இழந்த துயரம் தான் என்று மருத்துவர் ரீதியாக சொல்ல முடியாது. ஆனால் கடைசி காலத்தில் இறந்த இரண்டு ஜாம்பவான்களும் தங்கள் ஒரே மகனை இழந்த வலியை சுமந்தார்கள் என்பது சோகம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Bharathiraja : A major tragedy in director Bharathiraja's life is almost the same in singer Janaki's last days. Both are celebrated legends of Indian cinema. But many fans are expressing regret that the tragedy that happened in the lives of both of them should not happen to anyone. Bharathiraja made the village people speak their feelings through the camera. Similarly, singer Janaki gave life to all emotions from love to motherhood with her voice. But in the last period both faced the unbearable pain of losing their son.