பிக் பாஸில் இன்று காலை போடப்பட்ட பாட்டு.. இதுதான் விஜய் ரசிகர்களுக்கு பதிலடியா? அப்போ அந்த அறிக்கை?

  • சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகளை விட, இப்போது வீட்டுக்கு வெளியே நடக்கும் விவாதம் தான் கொஞ்சம் சூடாக இருக்கிறது. விஜய் சேதுபதி லீடர்ஷிப் குறித்து பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை கிளப்பிய நிலையில், அது நிகழ்ச்சியை பற்றிய பேச்சு தான் யாரையும் குறி வைத்து சொல்லவில்லை என்று விஜய் டிவி விளக்கம் கொடுத்துவிட்டது. சரி பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்தால் அடுத்த நாளே பிக்பாஸ் போட்ட ஒரு வேக்கப் சாங் வேற ஒரு பஞ்சாயத்தை கிளப்பி விட்டது.

    Advertisement

    விஜய் சேதுபதி பேசிய லிடர்ஷிப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. விஜய் டிவி அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தாலும் விஜய் ரசிகர்கள் இன்னும் விஜய் சேதுபதியை விடாமல் விமர்சித்து வருகிறார்கள். தவெக கட்சியினர்கள் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் கொடுத்து வருகிறார்கள். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று காலை, ரவி மோகன் நடித்த பிரதர் படத்தில் வந்த மக்காமிஷி பாடலை போட்டியாளர்களை எழுப்புவதற்காக பிக் பாஸ் ஒலிக்கவிட்டு இருக்கிறார்.

    Advertisement

    காலையில் முதல் பாடல்

    எப்போதும் போல சாதாரணமாக பார்த்தால் "விடிஞ்சிருச்சு மக்கா இன்னும் தூக்கமா?" என்று வீட்டில் இருப்பவர்களுக்கு எழுப்புவதற்கான பாடல் தான். ஆனால் இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இந்த பாடலை கேட்டதும் நெட்டிசன்கள் இதை வேற மாதிரியாக பார்க்க தொடங்கி விட்டார்கள். இது ஹவுஸ்மேட்க்கா இல்ல வெளியே இருக்கிறவர்களுக்கான பதிலடியா? என்ற தான் கலாய்க்கிறார்கள்.

    பாடலால் பதிலடி

    மக்கா மிஷி பாடலில் வரும் "நான் ஃபுல் ஸ்பீச்ல பேச வந்தால் ஏன்டா ஓடி ஒளிகிற.. நாலு வால்சுக்குள்ள மட்டும் ரூல்ஸ் பேசி நடிக்கிற.." போன்ற வரிகளை வைத்து பிக் பாஸ் ஏதோ மெசேஜ் சொல்றாரே? என்று சோசியல் மீடியாவில் கலாய்ப்பு ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி சர்ச்சை ஓயாத நேரத்தில் இந்த பாடல் வந்ததுதான் நெட்டிசன்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது. இது வழககமான வேக்கப் பாடலா இல்ல வேற ஏதாவது சொல்ல வராங்களா? என்று சிலர் கேட்கிறார்கள்.

    Advertisement

    வரிகளை கவனிங்க

    விஜய் சேதுபதியை நெகட்டிவ்வாக பேசுறவங்களை லெப்ட் ஹாண்டில் டீல் பண்ற மாதிரி இருக்கே என்று இன்னும் சிலர் கிண்டல் செய்கிறார்கள். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் போது யார் வெளியே போகிறார்கள் என்று க்ளூ கொடுக்கிற வகையில் சில பாடல்கள் போடப்படுவார்கள். அதனால் இது சாதாரண பாட்டு கிடையாது, ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் என்பது பிக் பாஸை தொடர்ச்சியாக பார்த்து வரும் ரசிகர்களுக்கு தெரியும்.

    விஜய் சேதுபதி பேசியதில் என்ன தவறு இருக்கு? கோபம் இதனால் தான் வருதா? விஜய் ரசிகர்களை மடக்கிய சாட்டை
    அந்த வகையில் தான் இன்று போடப்பட்ட மக்காமிஷி பாடலையும் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடியா? என்பது போல நெட்டிசன்கள் முடிச்சு போடுகிறார்கள். ஆக மொத்தத்தில் விஜய் சேதுபதி பேச்சுக்கு விளக்கம் கொடுத்து பிரச்சினையை கூலாக்க நினைத்த விஜய் டிவிக்கு ஒரு வேக்கப் சாங் மூலமாக நெட்டிசன்கள் மீண்டும் புது பஞ்சாயத்து கொடுத்து விட்டார்கள். விஜய் டிவி உனக்கு ரொம்ப நக்கல்யா என்று நெட்டிசன்கள் கலாய்ப்பது புரியாமலா இருக்கும்.

    Advertisement

    English Summary

    Bigg Boss: The debate unfolding outside the Bigg Boss house is currently more heated than the arguments taking place inside it. While Vijay Sethupathi's comments regarding leadership sparked criticism among Vijay's fans, Vijay TV clarified that he was speaking generally about the show and not targeting any specific individual. Just when it seemed the issue had been resolved, a 'wake-up song' played by Bigg Boss the very next day ignited yet another controversy.