திரிஷா கேக் சர்ச்சையே ஓயல.. விஜய் சேதுபதி மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. லீக்கான வீடியோ! குவியும் கமெண்ட்ஸ்

  • சென்னை: சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளுக்கு திரிஷா பகிர்ந்த ஒரே ஒரு போட்டோ சோசியல் மீடியாவையே பரபரப்பாகியது. இப்போது அதேபோல இன்னொரு பிறந்தநாள் சர்ப்ரைஸ் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த முறை சர்ப்ரைஸ் கொடுத்திருப்பது விஜய் சேதுபதி.

    Advertisement

    அதுவும் தனது மகன் சூர்யா சேதுபதிக்காக குடும்பத்துடன் நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது திரிஷா ஒரு நாள் கழித்து பகிர்ந்த போட்டோ இணையத்தில் கவனம் பெற்றது. விஜய்க்கு முன்னால் விதவிதமான கேக்குகள் வைக்கப்பட்டு இருந்த அந்த போட்டோவை வைத்தே ரசிகர்கள் பலவிதமான கதைகளையும் விவாதங்களையும் தொடங்கினர். 5 கேக்குகள் இருந்தது கூட பேசு பொருள் ஆனது.

    Advertisement

    விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ்

    இந்த பரபரப்பு ஓய்வதற்குள் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸும் பேசப்படுகிறது. கடந்த ஜூலை 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா சேதுபதிக்கு விஜய் சேதுபதி அவருடைய மனைவி, மகள் என மொத்த குடும்பத்தினரும் சூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றனர். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கேக்குகளை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர்.

    விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா சர்ப்ரைஸ்

    பிறகு விஜய் சேதுபதி தன்னுடைய மகனை செல்லமாக கட்டிப்பிடித்து கிண்டல் செய்தபடியே வாழ்த்து சொல்லி இருக்கிறார். பிறகு சூர்யா சேதுபதி தன்னுடைய அம்மா மற்றும் தங்கச்சியுடன் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். சினிமாவில் என்ன தான் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தையும் விஜய் சேதுபதி கவனித்து வருகிறார் இதை எல்லா நடிகர்களும் கவனிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

    Advertisement

    அப்பாவாக சப்போர்ட்

    சூர்யா சேதுபதி பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அவருடைய தந்தையும் அவருடைய குடும்பமும் அவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. சூர்யா பேசும் விஷயங்கள் எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து மீம்ஸ்களாக வெளியிட்டனர். ஆனால் அதையெல்லாம் விஜய் சேதுபதி பெரிதுபடுத்தவில்லை. தன்னுடைய மகனுக்கு தான் அவர் முக்கியத்துவம் கொடுத்து சப்போர்ட் செய்து வந்தார். அதனால் தொடர்ந்து சினிமாவில் சூர்யா ஜெயிப்பார் என்றும் பலரும் கருத்து கூறுகிறார்கள்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் தன்னுடைய அப்பாவின் சின்ன வயது கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு சிந்து பாத் படத்திலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார். அதற்குப் பிறகு ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கிய போனிக்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அந்த படத்துக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து தோற்றத்தில் பெரிய வித்தியாசத்தை கொண்டு வந்தது அப்போது பெரிய அளவில் கவனம் பெற்றது. இப்போது ஒரே ஒரு கேக் விஷயம்தான் ஆனால் அதற்கும் திரிஷா போன மாதம் வெளியிட்ட புகைப்படத்துடன் இணைத்து ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

    English Summary

    Vijay Sethupathi: Actor Vijay Sethupathi gave a special birthday surprise to his son Surya Sethupathi by visiting his shooting spot with the entire family. Surya celebrated his birthday by cutting cakes with his mother and sister, while Vijay Sethupathi affectionately hugged and wished him. The viral celebration video has also sparked comparisons with Trisha’s recent birthday surprise photo for Vijay.