118 பவுன் நகை பறிபோன பிறகும் கன்னியாகுமரி இன்ஸ்டா பிரபலம் போட்ட வீடியோ.. இதுதான் அடுத்த அப்டேட்டா?

  • சென்னை: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா வீட்டில் நகை திருடு போன விஷயம் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு வீட்டில் திருடு போய்விட்டால் ஐயோ பாவம் என்று சொல்வார்கள். ஆனால் இவர் வீட்டில் திருடு போனதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். திருடிய திருடர்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம் என்று குதூகலபடுகிறார்கள். இந்த அமர்க்களத்துக்கு மத்தியில் இப்போ மதுமிதா வெளியிட்ட அடுத்தடுத்த வீடியோக்கள் மேலும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா

    இன்ஸ்டாகிராமில் சிலர் அடுத்தவங்களை பற்றி பேசிய பிரபலம் ஆகி விடுவார்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை சோசியல் மீடியா பிரண்ட்....ஸ்களிடம் சொல்லி பிரபலமாகுவார்கள். அதுபோலத்தான் மதுமிதாவும் என் வீட்டு நகையை பார்த்தீங்களா? பணத்தை பார்த்தீங்களா? என்று அலப்பறை பண்ணுவதை பார்த்து புலம்புவதற்காகவும் பொறாமைப்படுவதற்காகவும் பலர் இவரை பாலோ பண்ணுகிறார்கள்.

    Advertisement

    அது மட்டுமல்ல பக்கத்து மாநிலத்தில் திருடு போனால் கூட திருடர்களுக்கு இவங்க அட்ரஸ் கொடுத்து இவங்களும் நிறைய நகை வச்சிருக்காங்க, இங்க போயிட்டு வாங்க என்று வழிகாட்டிய நெட்டிசன்கள் எல்லாம் அதிகமானம். இதற்கெல்லாம் காரணம் மதுமிதாவின் ஆடம்பரமான அளப்பரை ரிலீஸ் தான். இவர் வீட்டில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பணமும், நகையும் காணாமல் போய்விட்டது என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஆறுதலே இல்லை

    அப்படி இருந்தும் யாரும் இவருக்கு ஆறுதல் சொல்லவில்லை. எல்லோருமே இவரை திட்டி வருகிறார்கள். இதனால் கடுப்பாகி சோசியல் மீடியாவை விட்டு இனி மதுமிதா போய்விடுவார் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்படியெல்லாம் இல்லைங்க நான் ரொம்ப வித்தியாச....மானவர் என்று மதுமிதாவின் வீடியோக்கள் காட்டுகிறது. அதாவது அவரது வீட்டில் நகை பணம் எல்லாம் திருடு போன பிறகு அவர் தன்னுடைய குழந்தைக்கு 10 நாட்கள் லீவு விட்டாச்சு அதனால என் குழந்தையோடு நாங்கள் இனி ஜாலியாக வெளியே சுற்ற போறோம் என்று அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    கட்டிலில் பணம் கட்டு

    அது மட்டும் இல்லாமல் நம்ம வீட்டு பெண் குழந்தைகள் தான் நம்ம வீட்டு மகாலட்சுமி அவங்க கையில் நம்ம சம்பாதிக்கிற பணத்தை கொடுத்து வாங்கினால் அதற்கு பிறகு அதிர்ஷ்டம் கொட்டும்ங்க என்று தன்னுடைய குழந்தை மீது பணத்தை அபிஷேகம் செய்வது போல ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். மேலும் வழக்கம் போல கட்டிலில் பணத்தை எல்லாம் போட்டு அதில் அவர் உருளுவதும், பிறளுவதும்... பணத்தை தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொள்வதுமாக அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

    கன்னியாகுமரி மதுமிதா தங்கத்தில் குளித்து.. யாரது கட்டிங் மிஷினுடன்.. 6 வீடுகளா? பழைய வீடியோ வைரல்
    Advertisement

    மீண்டும் வீடியோஸ்

    அப்போ திருடர்கள் என் வீட்டில் நகையை திருடிக் கொண்டு போனாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று இவர் சொல்ல வருகிறாரா? அல்லது நீங்க புலம்புறவங்க புலம்பிக்கொண்டே இருங்க நான் இப்படி தாங்க என்று அவர் சொல்கிறாரா? என்பதுதான் விவாதமாக இருக்கிறது. ஏற்கனவே, திருடர்கள் என் வீட்டுக்கு வந்தாலே குழம்பி போயிடுவாங்க, நான் எந்த வீட்டில் இருக்கேன்னு திருடர்களால் கண்டுபிடிக்க முடியாது, ஏன்னா என்கிட்ட 6 வீடு இருக்கு என்று ஒரு வீடியோவில் திருடர்களுக்கே சவால் விட்டிருந்த மதுமிதா ஒன்றரை கோடி பறி கொடுத்த பிறக்கும் அவருடைய அலப்பறை வீடியோக்கள் ஆரம்பம் ஆகி இருப்பதை பார்க்கும் நெட்டிசன்கள் இவர் 10 நாள் விடுமுறைக்கு போகிறேன் என்று திருடர்களுக்கு மீண்டும் அப்டேட் கொடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    English Summary

    Instagram celebrity: For the past few days, the theft of jewelry from the home of Instagram celebrity Madhumitha has been the talk of social media. People are gleefully suggesting that a felicitation ceremony should be held for the thieves. Amidst this commotion, a series of videos subsequently released by Madhumitha has sparked further debate.