வாழ்க்கையில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறாங்க! நச்சுனு பேசிய மதுரை முத்து! பலருக்கு பாடம்

  • சென்னை: மதுரை முத்து பட்டிமன்ற பேச்சாளராக இருந்தாலும் சோசியல் மீடியாவில் வெளியிடும் வீடியோக்கள் சில நேரங்களில் பலரையும் யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். அதுபோலத்தான் இப்போது கூட அவர் பேசியது பலருக்கு பாடமாக இருக்கிறது என்று அந்த வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

    Advertisement

    அவசரமான உலகத்தில் மனிதாபிமானம் என்பது எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கிற நிலைமை இதுதான் இப்போ மாறி கொண்டு இருக்கிறது. நம்ம குடும்பம், நம்முடைய வாழ்க்கை என்ற மனநிலை பலருக்கும் வந்துவிட்டது. யார் எப்படி போனாலும் சரி, யாரை ஏமாற்றினாலும் சரி, நம்முடைய வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். இதை வைத்துதான் இப்போது மதுரை முத்துவும் பேசி இருக்கிறார்.

    Advertisement

    மதுரை முத்து வீடியோ

    அவர் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில், இப்ப எல்லாம் நிறைய சைக்கோவில் இருக்கிறாங்க. அதை நீங்களும் பார்த்து இருக்கீங்க, நானும் பார்த்திருக்கிறேன். நம்முடைய வாழ்க்கையில் பல சைக்கோக்களை நாம கடந்து கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட நேபாளத்தில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் பாடம். முந்தைய நாள் 65 கோடிக்கு அதிபதியாக இருந்த நபர் அடுத்த நாளே எதுவும் இல்லாமல் தெருவுக்கு வந்து விட்டார்.

    நிலை இல்லாத வாழ்க்கை

    உடுக்க உடை கூட இல்லாமல் அவர் தவித்ததை வீடியோவாக பார்த்திருப்போம் ஆனால் அந்த நேரத்திலும கூட சில சைக்கோக்களின் செயல் நமக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அந்த நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண்களின் உயிரற்ற உடல் சகதியில் முங்கி கிடக்கும்போது கூட அவர்களில் காதுகளில் அணிந்து இருந்த நகையைத் திருடுவதற்காக சில முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வீடியோக்களையும் நாம் பார்த்தோம்.

    Advertisement

    நிலையில்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் பிச்சைக்காரனாக மாற்றிவிடும் என்று தெரிந்த பிறகும் அந்த சூழ்நிலையிலும், என்னுடைய வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்று மனிதாபிமானமே இல்லாமல் திருடுகிறவங்களின் மூளையை நாம என்ன சொல்றதுன்னு தெரியல. அவங்கள ஒரு சைக்கோக்கள் என்றே சொல்லலாம். அதேபோல சில சைக்கோக்கள் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம்.

    நெகட்டிவ் கமெண்ட்

    யார் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு நெகட்டிவ் ஆகவே கமெண்ட் போடுவார்கள். சமீபத்தில் கூட நான் ஒரு கார் வாங்கி இருக்கிறேன் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அதற்கு கீழே ஒருவன் கமெண்ட் போட்டு இருக்கிறான், நீ விரைவில் ஆக்சிடென்ட் ஆவதற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட மனநிலையெல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஏற்கனவே எனக்கு பல ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது ஆனாலும் இன்று நான் வந்திருக்கிறேன் இப்படி இருக்கும் போதும் கூட அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கிற மனநிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    Advertisement

    ஏமாற்றி வீடியோக்கள்

    அதுபோல இன்னும் சில சைக்கோக்கள் இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் அவர்களுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக நல்லா இருக்கிற நடிகர்களையும், சினிமா பிரபலங்களையும் இறந்து போய் விட்டார்கள் என்று மாலை போட்டு வீடியோ வெளியிடுகிறார்கள். இந்த சைக்கோகளை என்னவென்று சொல்வது? எப்படி எல்லாம் இந்த உலகத்தில் சைக்கோக்கள் இருக்கிறார்கள் பாருங்களேன்.

    இது போன்ற சைக்கோக்கள் அவர்களுடைய வசதிக்காக அடுத்தவர்களை பற்றி என்ன வேணாலும் பேசுகிறார்கள். உங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றி தவறுகளாகவே யோசிக்க வருகிறது என்றால் முதலில் நல்ல புத்தகங்களை படிங்க, காதுக்கு இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருங்க அப்போதான் உங்களுடைய மனநிலை மாறும் என்று மதுரை முத்து பேசியிருக்கிறார்.

    English Summary

    Madurai Muthu: Although Madurai Muthu is a debate show speaker, the videos he posts on social media sometimes prompt people to reflect deeply. Similarly, fans are currently sharing his latest videos, noting that his words serve as a valuable lesson for many.