சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வார சனிக்கிழமை எபிசோடடில் விஜய் சேதுபதி பேசிய பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. இதற்கு இடையே உள்ளே வைத்த டாஸ்க்கில் வீட்டிற்குள் இருக்கும் பொருள்கள் எல்லாம் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இன்று காலை வெளியான ப்ரோமோவில் ஆனந்தி அடிப்பட்டு கதறி அழுததை பார்க்கும்போது லட்சுமி பிரியாவிற்கு ரெட் கார்டு கிடைக்குமா? விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் உள்ளே நடக்கும் போட்டி கலவரத்தை பார்க்கும் பொது இந்த பிரச்சனை சனிக்கிழமை வரைக்கும் தாங்குமா? அல்லது அதற்கு முன்பே உள்ளே இருப்பவர்களை வெளியே அனுப்பப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை நிறைந்ததுதான். அதிலும் இந்த சீசன் புது விதமாக ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்ப மேடையிலேயே பல போட்டியாளர்களை எவிக்ஷன் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டது பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அவர்களுக்கு இனி வைல்ட் கார்ட் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் வீட்டில் பயங்கரமாக டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சீசன்களில் இருந்தது போல இல்லாமல் இந்த சீசன் சுவாரசியமாகவே போய்க்கொண்டிருக்கிறது. போனவாரம் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசி இந்த நிகழ்ச்சிக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இந்த நிலையில் இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஏற்கனவே காமன்மேன் நிகழ்ச்சியில் காருக்குள் அடித்துப் பிடித்து இடம்பிடிக்க கொடுக்கப்பட்ட டாஸ்க் போலத்தான் இருக்கிறது. விஜய் சேதுபதி பேச்சுக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த வித்தியாசமான விளக்கம்.. பிக் பாஸ் சர்ச்சை ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அந்த ஸ்டூலை பிடுங்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு பாட்டிலுக்குள் நண்டை போட்டால் நண்டு தானும் மேலே வராது, அடுத்தவர்களையும் முன்னேற விடாமல் தடுக்குமே அதைத்தான் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்காக கொடுத்திருக்கிறார்கள். அதில் ஜேசன், ஷாமா உட்பட ஒரு சில போட்டியாளர்களுக்குள் சண்டை நடக்கிறது. யாரெல்லாம் சண்டை போடுகிறார்களே என்று தெரியாத வகையில் தான் உள்ளே அடித்துக் கொள்கிறார்கள். அதில் ஜேசன் அந்த டாஸ்க் வீட்டை உடைத்து விட்டார். போனவாரம் மற்றவர்களுடன் விட்டுக் கொடுத்து விளையாடிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி வசைப்பாடி அவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கிறேன் என்கிற பெயரில் அவர்களின் மனதையே மாற்றி விட்டிருந்தார். ஆனால் இந்த வாரம் இவர்கள் இப்படி அடித்து விளையாடியதை பார்த்து சக மனிதர்களிடம் அன்பா இருக்கணும், அமைதியாக இருக்கணும் என்று அட்வைஸ் கொடுத்ததற்கும் வாய்ப்பு இருக்குது. சரி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.பிக் பாஸ் புது டாஸ்க்
ஒரு கூடாரம் வைத்திருக்கிறார்கள் அந்த கூடாரத்தில் சில ஓட்டைகள் போட்டு இருக்கிறார்கள். அதில் போட்டியாளர்கள் தங்களுடைய தலையை வெளியே நீட்டிக்கொண்டு நிற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில போட்டியாளர்களுக்கு மட்டும் தான் அந்த சின்ன ஓட்டைகள் கிடைக்கிறது. சில போட்டியாளர்களுக்கு ஸ்டூல் போட்டு அதில் ஏறி நின்றால் தான் அந்த ஓட்டைக்கு வெளியே தலையை நீட்ட முடியும்.உடைந்த பொருள்கள்
விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்