பிக் பாஸ் ஆடிஷனில் கடுமையாக நடந்து கொண்ட காரணம் இதுதான்! ஓபனாக பேசிய ஆரி

  • சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு சவால், அழுத்தம், மனநிலை சோதனை என எல்லாமே சேர்ந்து இருக்கும். அதிலும் தற்போது புதியதாக கவனம் பெற்று இருக்கும் பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகர் ஆரியின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ஆடிஷனுக்கு வரும் போட்டியாளர்களிடம் அவர் பேசும் விதம், கடுமையாக இருப்பதாக சிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கு ஆரி அளித்துள்ள விளக்கம் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆரி. அந்த நிகழ்ச்சியின் போது பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது போன்ற பல விஷயங்களை பேசி இருந்தார். அதோடு தான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர், விவசாயத்தை முதன்மைப்படுத்தி தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். அதனாலயே மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனி மரியாதை கிடைத்தது.

    Advertisement

    நடுவர்கள் பற்றிய விவாதம்

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் அவர் நடுவராக வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் நடுவராக செயல்படும் விதத்தை பார்த்து சிலர் அப்போது பேசியது இவர்தானா? என்று கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக ஆடிஷனுக்கு வரும் பெண் போட்டியாளர்களிடம் அவர் பேசும் தோனி, கேட்கும் கேள்விகள், அவர்களை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை குறித்து விமர்சனம் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    போட்டியாளர்கள் குற்றச்சாட்டு

    சில பெண் போட்டியாளர்கள் ஆரியின் அணுகுமுறை ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர். போட்டியாளர்களை விமர்சிப்பது, அவர்கள் பேக்ரவுண்ட் பற்றி பேசினால் சென்டிமென்ட் கண்டன்ட் ட்ரை பண்றீங்களா? என்றெல்லாம் பேசுகிறார். இதனால் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால் சிலர் ஆரிக்கு சப்போர்ட்டும் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னை பற்றி விவாதங்களுக்கு ஆரி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

    ஆரி கொடுத்த விளக்கம்

    அதில், என்னுடைய வேலை அவர்களை தயார் செய்வது. யாரையும் காயப்படுத்துவது அல்ல. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு போட்டியாளர்கள் எதிர்கொள்ள போகும் விஷயங்கள் இதைவிட மிகவும் கடினமாக இருக்கும். ஆடிஷன் கட்டிடத்திலேயே கொஞ்சம் கடுமையாக அணுகுவதன் நோக்கம் போட்டியாளர்களை மனதளவில் தயார்படுத்துவதுதான் என்று சொல்லி இருக்கிறார். அதோடு சிலர் என்னை புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு நன்றி என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    ஆரி தன்னுடைய அணுகுமுறையை நியாயப்படுத்துவதற்காக பிக் பஸ் வீட்டின் சூழ்நிலையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை வைத்து தான் இப்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். போட்டிக்கு தயார் செய்வதற்கும், அவர்களை மனதளவில் காயப்படுத்துவதற்கு இடைகளான கோடு எங்கு இருக்கிறது? அந்த கோடு தாண்டப்பட்டு விட்டதா என்பது தான் தற்போது நடக்கும் விவாதத்தின் மையப் புள்ளியாக இருக்கிறது.

    கடைசியாக ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே போட்டியாளர்களுக்கு ஒரு டப் டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த டெஸ்ட் போட்டியாளர்களை வலிமை ஆக்குகிறதா? இல்லை அவர்களுடைய மனதை உடைக்கிறதா? என்பது தான் இந்த விவாதத்தின் கேள்வியே.

    English Summary

    Bigg Boss Aari: The Bigg Boss show invariably involves a combination of challenges, pressure, and psychological tests for the contestants. Amidst this, actor Aari—who is currently in the spotlight as a judge for the new 'Bigg Boss Common Man' edition—has been facing continuous criticism on social media regarding his conduct. Now, the explanation he has offered in response has sparked a fresh debate.