வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து


  • சென்னை: சின்னத்திரை நடிகரும், யூடியூபருமான நாஞ்சில் விஜயன் மீதான சர்ச்சைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல்வேறு விவகாரங்களால் பேசப்பட்டு வந்த நாஞ்சில் விஜயன், தற்போது டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி அளித்துள்ள புதிய புகாரால் மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார்.

    Advertisement

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்த சூர்யா தேவி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதன்படி, நாஞ்சில் விஜயன் தன்னிடம் ரூ.2.10 லட்சம் பணம் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், பணத்தை கேட்டபோது அவமதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், மதுரைக்கு வரவழைத்து சிலரை வைத்து தன்னை மிரட்டியதாகவும், தாக்கிய சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பழைய சர்ச்சைகளும் மீண்டும் பேசப்பட ஆரம்பித்துள்ளன.

    வைஷு விவகாரம் மீண்டும் வைரல்

    சூர்யா தேவி அளித்த புகாரில் மிகவும் கவனம் ஈர்த்த விஷயம், வி.ஜே. வைஷு தொடர்பான குற்றச்சாட்டு. விஜய் வயசு சில மாதங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்று புகார் கொடுத்திருந்தார். அப்போது வைஷுவை "ஆப்" செய்ய முடியுமா? அவரை கட்டுப்படுத்த ஏதாவது செய்ய முடியுமா? என்று நாஞ்சில் விஜயன் தன்னிடம் உதவி கேட்டதாக சூர்யா தேவி கூறியிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    இதனிடையே, சூர்யா தேவி செய்தியாளர்களிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வைஷு, "கடவுள் இருக்கான் குமாரு" என்ற ஒரே வரியால் நாஞ்சில் விஜயனை மறைமுகமாக கலாய்த்துள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நாஞ்சில் விஜயன் - வைஷு மோதல்

    கடந்த சில ஆண்டுகளாக நாஞ்சில் விஜயன் மற்றும் வைஷு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டன. ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட இவர்களுக்குள் பின்னர் கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது தன் ஆஞ்சில் விஜயின் திருமணத்திற்கு பிறகு என்னுடன் பேசுவதில்லை அவர் பழையபடி என்னை காதலிக்க வேண்டும் என்று வைஷு வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்

    Advertisement

    இருவரும் நேரடியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தது, லைவ் வீடியோக்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் வெளியான தகவல்கள் மூலம் பல சர்ச்சைகள் கிளம்பின. தற்போது சூர்யா தேவி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அந்த பழைய காயங்களை மீண்டும் திறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

    Nanjil Vijayan: நாஞ்சில் விஜயன் மீதான வழக்கு வாபஸ்! - சமரசம் ஆன திருநங்கை வி.ஜே. வைஷு!

    ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

    சூர்யா தேவி அளித்த புகாருக்கு பிறகு நெட்டிசன்கள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளனர். ஒரு தரப்பினர், "இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர், "சோசியல் மீடியா சண்டைகள் இப்போது காவல் நிலையம் வரை போய்விட்டதே" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், "வைஷு போட்ட 'கடவுள் இருக்கான் குமாரு' பதிவு தான் இந்த விவகாரத்தின் ஹைலைட்" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Advertisement
    Nanjil Vijayan: ரோபோ சங்கர் குடும்பமே கடனில் தான் இருக்கிறது! இந்திரஜா தாலியை கூட கழட்டி.. நாஞ்சில் விஜயன் உருக்கம்

    மீண்டும் சர்ச்சையில் நாஞ்சில் விஜயன்

    யூடியூப் வீடியோக்கள், சமூக வலைதள பதிவுகள், நண்பர்கள் வட்டார மோதல்கள் என பலமுறை சர்ச்சைகளில் சிக்கிய நாஞ்சில் விஜயன், தற்போது நேரடியாக காவல் துறை புகார் விவகாரத்தில் பெயர் அடிபட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

    சூர்யா தேவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? நாஞ்சில் விஜயன் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? வைஷு மீண்டும் ஏதாவது பதில் பதிவு வெளியிடுவாரா? என்ற கேள்விகளுடன் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    A fresh controversy has emerged around Nanjil Vijayan after TikTok influencer Surya Devi filed a complaint with the Chennai Police Commissioner’s Office. Surya Devi has alleged that Nanjil Vijayan borrowed ₹2.10 lakh from her and failed to return the money, while also accusing him of intimidation, threats and public humiliation when she sought repayment. She further claimed that she was allegedly summoned to Madurai, threatened by a group of individuals and that an incident involving her was recorded on video. The complaint has reignited discussions surrounding the earlier dispute involving VJ Vaishu, whose cryptic social media response has drawn significant attention online. While the allegations have triggered widespread debate across social media platforms, no official findings have been announced yet. Many users are calling for a proper investigation, while others note how online feuds between influencers and content creators are increasingly spilling over into legal and police proceedings. The latest developments have once again placed Nanjil Vijayan at the center of public scrutiny.