அமேசான் ப்ரைம்-ல் வந்த புது வெப் சீரியஸ்.. ஓசூரை மாற்றிய டைட்டனின் மறக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் கதை!


  • ஓசூர்: ஒரு தொழிற்சாலை ஒரு நகரத்தின் விதியை மாற்ற முடியுமா? ஒரு அரசின் தொலைநோக்கு முடிவு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பலன் தர முடியுமா? தற்போது அமேசான் ப்ரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகியுள்ள "Made in India: Titan Story" வெப் சீரியஸ், இந்தியாவின் முதல் உலகத் தரமான கைகடிகார நிறுவனமான டைட்டனின் வெற்றிக் கதையைச் சொல்வதோடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு முக்கிய அத்தியாயத்தை இந்திய மக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

    Advertisement

    இந்தத் வெப் சீரியஸின் மையமாக இருப்பது டைட்டன் நிறுவனத்தின் நிறுவனர் Xerxes Desai மற்றும் அவரது குழுவின் பயணம் இடம்பெற்றிருந்தாலும், சில நொடிகள் மட்டுமே தோன்றும் இரண்டு தமிழ்நாடு அரசு தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்களின் பங்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    டாடாவுக்கு கதவைத் திறந்த தமிழ்நாடு

    1980-களின் தொடக்கத்தில், இந்தியாவில் உலகத் தரத்திலான கடிகார உற்பத்தி நிறுவனத்தை உருவாக்க டாடா குழுமம் திட்டமிட்டபோது, அதற்கு அரசு பங்குதாரராக வர வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

    அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகமான டிட்கோ (TIDCO) முக்கிய பங்கு வகித்தது. அப்போது தொழில்துறை நிர்வாகத்தில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி மகாதேவன் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் கே. ராஜாராம் ஆகியோர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாக தொடரில் சித்தரிக்கப்படுகிறது.

    அக்காலக்கட்டத்தில் தனியார் முதலீடுகள் மீது அரசுக்கு பெரும் நம்பிக்கையில்லை, ஆயினும் டாடா குழுமம் வேகமாக வளர்ந்து வரும், தொழிற்துறை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தி வந்த தமிழ்நாட்டில் டைட்டன் தொழிற்சாலையை அமைக்க முன்வந்தது. டாடா குழுமம் முதன் முதலில் தென்னிந்திய மாநிலத்தில் முதலீடு செய்த கதையும் ஓசூரில் இருந்து தான் துவங்கியது.

    Advertisement

    அந்த வரையில் எம்ஜிஆர்-யின் அதிமுக ஆட்சியில் இருந்த தொழில்துறை அமைச்சர் கே. ராஜாராம் Captalist மீது அதிகம் நம்பிக்கை இல்லாதவர், ஆயினும் டாடா குமுமத்தின் முதலீட்டுக்கும், தொழிற்சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்தார். இதற்கு காரணம் தொழில்துறை அமைச்சர் கே. ராஜாராம் டாடா குழுமத்திற்கு வைத்த கண்டிசனை டாடா குழுமம் அப்படியே ஏற்றுக்கொண்டது தான்.

    தனியார் முதலீட்டாளர்கள் மீது எச்சரிக்கையான பார்வை கொண்டிருந்த அமைச்சர், வைத்த முக்கிய நிபந்தனை என்னவென்றால், ஓசூரில் தொழிற்சாலை அமைத்துக்கொள்ளுங்கள், இதற்கான முதலீட்டிலும் தமிழ்நாடு அரசு பங்கு பெற தாயார்.. ஆனால் தொழிற்சாலையில் பணியில் அமைக்கம் நபர்கள் அப்பகுதி மக்களாக தான் இருக்க வேண்டும், ஓசூர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்பது தான் முக்கிய கண்டிஷனாக இருந்தது.

    Advertisement

    இதை டாடா குழுமம் ஏற்றுக்கொண்டு.. டைட்டன் உருவானது..

    ஓசூரை மாற்றிய ஒரு முடிவு

    ஓசூர் டைட்டன் தொழிற்சாலை MGR ஆட்சிக்காலத்தில் தமிழக அரசும் (TIDCO) டாடா குழுமமும் இணைந்து 1984-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1988-ல் ஜே.ஆர்.டி டாடாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய எம்ஜிஆர் அரசின் தொலைநோக்கு பார்வையால் அமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை மூலம் கிடைத்த பலன்.

    அந்த காலத்தில் ஓசூர் என்பது கர்நாடக எல்லையோரத்தில் இருந்த வளர்ந்து வரும் சிறிய தொழில் நகரமாக மட்டுமே. ஆனால் டைட்டன் நிறுவனம் அங்கு தனது உற்பத்தி மையத்தை அமைத்த பிறகு, அந்த நகரத்தின் பொருளாதார முகம் முற்றிலும் மாறியது.

    Advertisement

    பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற்று உற்பத்தித் துறையில் இணைந்தனர். டைட்டனைச் சுற்றி உதிரிபாக உற்பத்தியாளர்கள், சிறு தொழிற்சாலைகள், பயிற்சி மையங்கள், தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் சேவை நிறுவனங்கள் உருவாகத் தொடங்கின.

    ஒரு நிறுவனம் மட்டுமல்ல, முழுமையான தொழில் சூழல் (Industrial Ecosystem) ஓசூரில் உருவானது. இன்று இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக ஓசூர் விளங்குவதற்கு டைட்டனின் வருகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ரூ.10 கோடி முதலீடு... ரூ.1 லட்சம் கோடி மதிப்பு

    1984-ல் தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) தமிழ்நாடு அரசு சார்பாக டைட்டன் நிறுவனத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்தது. அப்போது அது ஒரு துணிச்சலான முடிவாக கருதப்பட்டது. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில், அந்த முதலீட்டின் மதிப்பு இன்று சுமார் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

    Advertisement

    2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவாக கணிக்கப்பட்டுள்ள ரூ.3.44 லட்சம் கோடியின் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான மதிப்பாக இது இருக்கிறது. ஒரு அரசின் தொழில் முதலீட்டு முடிவு, நீண்ட காலத்தில் எவ்வளவு பெரிய பொருளாதார பலனை உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணமாக இந்த முதலீடு பார்க்கப்படுகிறது.

    இன்றளவும் தமிழ்நாடு அரசு டிட்கோ வாயிலாக சுமார் 27.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் அதிக பங்குகளை கொண்டுள்ள பங்குதாரராகவும் தமிழ்நாடு அரசு உள்ளது.

    டைட்டன் கதையின் உண்மையான பாடம் என்ன?

    Made in India: Titan Story தொடர் வெறும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக் கதையல்ல. அது ஒரு மாநிலம் தொழில் வளர்ச்சியை நம்பியபோது என்ன நடந்தது என்பதற்கான வரலாற்றுப் பதிவு.

    ஒரு தொழிற்சாலையை உருவாக்குவது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், நகர வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் வரி வருவாய் என பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஓசூர் அனுபவம் காட்டுகிறது.

    இன்று மாநிலங்கள் முதலீடுகளை ஈர்க்க போட்டியிடும் சூழலில், தொழில் வளர்ச்சியை நீண்டகால பார்வையுடன் அணுகிய அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளின் முக்கியத்துவத்தை டைட்டன் கதை மீண்டும் நினைவூட்டுகிறது.

    ஓசூரில் தொடங்கிய ஒரு கடிகார தொழிற்சாலை, காலத்தை மட்டும் அளக்கவில்லை; ஒரு நகரத்தின் எதிர்காலத்தையும் வடிவமைத்தது என்பதே இந்தக் கதையின் உண்மையான மையச் செய்தியாக இருக்கிறது.

    English Summary

    The Amazon Prime web series "Made in India: Titan Story" not only narrates the rise of India's first world-class watch brand but also highlights the crucial role played by the Tamil Nadu government in bringing Titan to Hosur. அமேசான் பிரைம் வெப் சீரியஸ் "Made in India: Titan Story" டைட்டன் நிறுவனத்தின் வெற்றிக் கதையை மட்டும் சொல்லாமல், ஓசூரை ஒரு தொழில் மையமாக மாற்றிய தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.