Toxic Twitter review: டாக்ஸிக் பிரியாணியா? தக்காளி சாதமா? யாஷ் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

  • சென்னை: கீது மோகன் தான் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்த படம் என்பதால் முதல் காட்சி முடிந்ததுமே இணையத்தில் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்து விட்டன. படம் வருவதற்கு முன்பே ட்ரெய்லரை பார்த்த சிலர் என்னடா இது கோட் மாதிரி இருக்கே என்று கலாய்க்க, பட குழுவோ இது வேற லெவல் உலகம், ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படும் என்று தொடர்ந்து நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தது.

    Advertisement

    இப்போது அந்த நம்பிக்கையை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அல்லது பிரியாணி என்று ஆசைப்பட்டு போனால் தக்காளி சாதம் கொடுத்துட்டாங்களே என்று புலம்புகிறார்களா? என்று பார்த்தால் முதல் நாள் காட்சி ரசிகர்களின் பேச்சை வைத்து பார்த்தால் படம் கொஞ்சம் டாக்ஸிக் கொஞ்சம் டேஸ்டி என்று தான் தெரிகிறது.

    Advertisement

    படம் எப்படி இருந்தாலும் சரி யஷ் என்று வந்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய முதல் என்ட்ரி, ஸ்டைல், உடை, நடக்கும் விதம் என எல்லாமே ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறது. குறிப்பாக மாஸ் காட்சிகளில் தியேட்டரில் ஆரவாரத்தில் அதிர்ந்ததாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். யஷ்யை வைத்து 4 வருடம் காத்திருந்ததற்கு குறைந்தபட்சம் ஹீரோ என்ட்ரி வேணும்னு கேட்ட ஹீரோயிசத்தை பாக்கெட் போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்லும் அளவுக்கு அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்

    ஆனால் முதல் பாதியால் தான் படத்திற்கு சின்ன சிக்கல் வருகிறது. படம் ஆரம்பித்தவுடன் கதாபாத்திரங்கள், அவர்களுடைய உலகம், பின்னணி என்று நிறைய விஷயங்களை இயக்குனர் கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பிக்கிறார். பிரச்சனை என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சம் சொல்ல வேண்டியதை ரொம்ப நேரம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். 3 மணி நேரத்திற்கு அதிகமான படம் என்பதால் முதல் பாதியில் சில இடங்களில் வேகம் குறைவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ஒரு கட்டத்தில் சார் இந்த டாக்ஸிக் உலகத்துக்கு வந்துட்டோம். இப்ப கதைக்குள்ள போகலாமா என்று ரசிகர்களே மனதுக்குள் கேட்கும் அளவுக்கு சில காட்சிகள் இழுவையாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. கதையின் வேகம் சற்று தடுமாறினாலும் ஆக்ஷன் காட்சிகளில் இயக்குனர் கையைப் கட்டிக் கொண்டு உட்காரவில்லை. சண்டை காட்சிகள் குறிப்பாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட சில ஆக்ஷன் பிளாக்குகள் ரசிகர்களுக்கு பிடித்திருக்கின்றன.

    Advertisement

    படத்தின் பிளஸ் பாயிண்ட்

    ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலமாக பேசப்படுகிறது. குறிப்பாக சர்க்கஸ் பின்னணியில் வரும் ஆக்சன் காட்சிக்கு ரசிகர்கள் தனி மார்க் போட்டு வருகின்றனர். கதை கொஞ்சம் எங்க போகுது என்று தெரியவில்லை. ஆனால் சண்டை எங்க போகுதுன்னு மட்டும் நல்லாவே தெரியுது என்பது தான் சில ரசிகர்களின் ரியாக்ஷனாக இருக்கிறது. முதல் பாதியில் மெதுவாக நகரும் படம் இடைவேளைக்கு பிறகு வேறு திசையில் செல்கிறது என்பதுதான் தற்போது வெளியாகி வரும் விமர்சனங்களின் முக்கியமான பாசிட்டிவ்.

    குறிப்பாக யஷ் மற்றும் யஷ் மோதும் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய சப்ரைஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் யஷ், கியாரா அத்வானியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நயன்தாரா, ஹீமா குரோஸி, ருக்மணி வசந்த் என பெரிய நடிகைகள் பட்டாளமே இருந்தாலும் எல்லோருக்கும் சரியான அளவில் கதாபாத்திரம் முக்கியத்துவம் கிடைத்ததா என்பதில் சில ரசிகர்களுக்கு திருப்தி இல்லை.

    Advertisement

    டாக்ஸிக் படத்தின் குறைகள்

    அதாவது இவ்வளவு பேரை கூட்டிட்டு வந்து இருக்கீங்க எல்லாரையும் சரியா பயன்படுத்தி இருக்கீங்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி யஷ் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட வேண்டிய மாஸ் தருணங்களை கீது மோகன்தாஸ் கொடுத்திருக்கிறார். அந்த மாஸ் தருணங்களை இணைக்கும் கதைதான் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடித்திருக்கிறதா? என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மொத்தத்தில் சிலருக்கு இது டாக்ஸிக் ட்ரீட்... சிலருக்கு டாக்ஸிக் டார்ச்சர்..!

    English Summary

    Toxic Twitter reviews: Toxic, directed by Geethu Mohandas and starring Yash, has been released in theaters worldwide today. As fans had been eagerly awaiting this film for years, reviews began flooding the internet immediately after the first show concluded. Before the release, some who watched the trailer mocked it, noting a resemblance to *KGF*; however, the film crew consistently assured everyone that the movie would offer a "next-level" cinematic world, crafted to Hollywood standards.