நடிகர் பாண்டியராஜ் மகனுக்கு நடந்த விபரீதம்.. ஒகேனக்கலில் காதலியுடன் தொங்கவிட்ட இயக்குனர்

  • சென்னை: சினிமாவில் சில காட்சிகளைப் பார்க்கும்போது, இது நிஜமாகவே நடந்திருக்குமா? என்று நமக்குத் தோன்றும். ஆனால், அந்தக் காட்சியைப் படமாக்கும்போது நடிகர்கள் எந்த அளவுக்கு ஆபத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அப்படியொரு சம்பவத்தைத்தான் நடிகர் காதல் சுகுமாரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    Advertisement

    நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் கதாநாயகனாக நடித்த வைதேகி படத்தின் படப்பிடிப்பின்போது, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்த அவரது பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. படத்தின் முக்கியமான இறுதிக்காட்சிக்காக பிருத்வியை கயிற்றில் கட்டி நீர்வீழ்ச்சியில் தொங்கவிட்டதாகவும், அந்தக் காட்சியை சூட் செய்யும் போது நடந்த சம்பவத்தை பற்றியும் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    காதலர்களை தொங்கவிட்ட இயக்குனர்

    காதல் சுகுமாரன் தனது பதிவில், பாண்டியராஜனின் மகன் பிருத்வி ஹீரோவாக நடித்த வைதேகி படத்தில் நானும் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன். அந்தப் படத்தின் கிளைமாக்ஸில், காதல் தண்டபாணி காதலர்களைக் கயிற்றில் கட்டி நீர்வீழ்ச்சியில் தொங்கவிட்டு, பின்னர் கயிற்றை வெட்டிவிடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    நடிகர் காதல் சுகுமாரன் பதிவு

    இந்தக் காட்சியைப் படமாக்கும்போது, அங்கு உதவி இயக்குநராகப் பணியாற்றிய தொரட்டி படத்தின் இயக்குநர் மாரிமுத்து, இது மிகவும் ஆபத்தானது என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் மாற்று முறையில் காட்சியைப் படமாக்கலாம் என்றும் இயக்குநரிடம் பலமுறை எடுத்துச் சொன்னார். நானும் மற்றவர்களும் இதையே சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், இயக்குநரோ அந்தக் காட்சி படத்துக்கு மிகவும் முக்கியம் என்று சொல்லி, நடிகர்களை பாதுகாப்பாகத்தான் கட்டியிருக்கிறோம் என்று தன்னுடைய முடிவில் உறுதியாகத்தான் இருந்தார்.

    Advertisement

    பாண்டியராஜன் செய்த செயல்

    சூட்டிங்கில் நடந்த இந்த விஷயத்தை பற்றி உதவி இயக்குநர் மாரிமுத்து, சென்னையில் இருந்த பாண்டியராஜனுக்குத் தகவல் கூறினார். மகன் ஆபத்தான காட்சியில் நடிப்பதை அறிந்ததும் பாண்டியராஜன் பதறிப்போய், சுமார் 5 மணி நேரப் பயணத்தில் குடும்பத்துடன் படப்பிடிப்புத் தளத்துக்கே வந்துவிட்டார். இயக்குநரிடம் கோபப்பட்டு திட்டிவிட்டு சூட்டிங்கை நிறுத்திவிட்டு முதலில் தனது மகனைப் பாதுகாப்பாக இறக்கிவிடுமாறு கூறியதாகக் காதல் சுகுமாரன் நினைவுகூர்ந்துள்ளார்.

    அதற்குள் அந்தக் காட்சியின் பெரும்பகுதி படமாக்கப்பட்டிருந்ததாகவும், பிருத்வி பின்னர் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டார். படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போதே இன்றைக்கும் பதற்றமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    பாண்டியராஜனின் மகன் பாசம்

    இந்த சம்பவத்தை பகிர்ந்த காதல் சுகுமாரன், பாண்டியராஜன் தனது மகன்கள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்றும், அவருடன் 5 படங்களில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாண்டியராஜனின் பிறந்தநாளில் அவருடன் பணியாற்றிய காலத்தில் நடந்த இந்த மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Pandiaraj: Sometimes, while watching certain scenes in movies, we wonder if they actually happened in real life. However, we are often unaware of the extent of the danger the actors faced while filming those scenes. Actor Kadhal Sukumar has shared one such incident on his social media page.