ஜனநாயகன் பார்க்க போன திரிஷா செய்த செயல்.. திட்டும் ரசிகர்கள்.. ஆனால், கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு குவியுது

  • சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் தமிழகம் முழுவதும் இன்று தியேட்டரில் திருவிழா போல ஓடிக் கொண்டிருக்கிறது. அதிகாலை முதல் ரசிகர்களின் கொண்டாட்டம், சோசியல் மீடியா விமர்சனங்கள், அரசியல் விவாதம் என படம் பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் தியேட்டர் வருகையும் அதிகமாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் தியேட்டருக்கு போகும்போது திரிஷா செய்த செயலை பார்த்து சில நெடடிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

    Advertisement

    சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபலமான ரோகிணி தியேட்டருக்கு இன்று காலை திரிஷா தன்னுடைய தோழிகளுடன் வந்திருந்தார். தன்னுடைய நண்பர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்கு ஆவலோடு வந்திருந்தார். ஆனால் அவர் செய்த செயல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது திரிஷாவின் கார் தியேட்டர் வளாகத்துக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர்.

    Advertisement

    ரசிகர்களை கண்டு கள்ளாத திரிஷா

    பிறகு அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஒரு செல்பி.. மேடம் ஒரு போட்டோ.. என்று எல்லோரும் முண்டியடித்தனர். இதனால் திரிஷா ரசிகர்களை பார்த்து சிரித்தபடியே யாருடனும் நின்று போட்டோ எடுக்காமல் தியேட்டருக்குள் நேராக போய்விட்டார். பல ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முயன்றாலும் யாருக்கும் அவர் போஸ் கொடுக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

    கீர்த்தி சுரேஷ் செய்த செயல்

    அதே நேரத்தில் இன்னொரு தியேட்டரில் ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்காக போன நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு உள்ளே போன பிறகு கூட அவரிடம் செல்ஃபி கேட்ட ரசிகர்களின் போனை வாங்கி அவரே செல்பி எடுத்துக் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை பாராட்டுகிறார்கள். திரிஷாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    ஜனநாயகன் பிளாக்பஸ்டரா? இல்லை பில்டப் மட்டும் தானா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவியூ
    சோசியல் மீடியாவில் இப்போது இதுதான் ஜனநாயகன் பரபரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதுபோல திரிஷாவின் அம்மாவும் அவருடைய தோழிகளும் கூட வேறொரு காரில் தான் வந்தார்களாம். திரிஷா தன்னுடைய காரில் தன் தோழியோடு மட்டும் இந்த படம் பார்க்க வந்திருந்தார். இதுகுறித்து கூட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். என்ன ஆச்சு அம்மாவும் பொண்ணும் தனித்தனியாக படம் பார்க்க வந்திருக்காங்க என்று கேட்கிறார்கள்.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    எது எப்படியோ இன்று ஜனநாயகம் ரிலீசின் போது திரிஷாவும் இப்போ ட்ரெண்டாக தொடங்கி விட்டார். இந்த படத்தை பார்த்த பிறகு திரிஷா என்ன போஸ்ட் போட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. சமீப காலமாகவே திரிஷா போஸ்ட் போட்டாலே விஜய் ரசிகர்கள் பதட்டம் அடைகிறார்கள். இன்று அதே போல விஜய்க்கு பாராட்டு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!
    காரணம் விஜய்யுடன் பல படங்களில் திரிஷா இணைந்து நடித்திருந்தாலும் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் அவருடன் நடித்த நினைவுகள் அல்லது அவருடைய நடிப்பை பாராட்ட வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Jana nayagan: Actor Vijay's last film, Demokraman, is running like a festival in theaters across Tamil Nadu today. Since early morning, fans' celebration, social media reviews, political discussion are continuously talking about the film, now actress Trisha's theater visit is also being talked about a lot. At the same time, some netizens are criticizing Trisha after seeing what she did while going to the theater.