சென்னை: நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிடும் பிரபலங்களில் ஒருவர் அல்ல. ஆனால் அவர் எப்போது ஒரு புகைப்படம் அல்லது ஸ்டோரி பகிர்ந்தாலும், அது ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு கேக், மூன்று திரமிஸு வைத்து கொண்டாடிய புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்திருந்தார். அந்த ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பல நாட்கள் வைரலானதோடு, அந்த திரமிஸு விற்பனையே பல மடங்கு அதிகரித்ததாகவும் பேசப்பட்டது.
அந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், தற்போது த்ரிஷா மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த முறை காரணம் அவரது அம்மா உமாவின் 70-வது பிறந்தநாள். அம்மாவுடன் எடுத்த அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, மனம் நெகிழும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "70 வயதா? நம்பவே முடியல... 40 வயது மாதிரி இருக்காங்க", "இப்போ தான் புரிகிறது த்ரிஷாவின் இளமை ரகசியம் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்கிறது" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் உமாவையே சினிமாவில் நடிக்கலாம் என்று பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில், ரசிகர்கள் இன்னொரு விஷயத்தையும் பேச ஆரம்பித்துள்ளனர். விஜய் பிறந்தநாள் பதிவுக்குப் பிறகு, குஷ்புவின் மகள் அவந்திகா திருமணத்தில் விஜயும், த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொள்வார்களா, இருவரின் புகைப்படம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் பல நாட்கள் நீடித்தது. ஆனால் திருமண விழாவில் அப்படி எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், அந்த திருமண விழாவில் எடுக்கப்பட்ட மற்றொரு அழகான தருணத்தை நடிகை குஷ்பு தற்போது தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் த்ரிஷாவை அன்புடன் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, "Cutie" என்று ஒரே வார்த்தையில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு தற்போது த்ரிஷா ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில ரசிகர்கள் திரிஷாவும் குஷ்புவும் இவ்வளவு டீப்பான பிரண்டா அல்லது குஷ்புவின் தம்பி விஜய் த்ரிஷாவுக்கு பிரண்டு என்பதால் இவ்வளவு நெருக்கமா என்றும் கமெண்ட்ஸ் கொடுக்கின்றனர். இதனால், ஒருபுறம் அம்மாவுக்கு த்ரிஷா வெளியிட்ட பிறந்தநாள் பதிவு, மறுபுறம் குஷ்பு பகிர்ந்த அன்பான புகைப்படம் என இரண்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. "த்ரிஷா எந்த பதிவு போட்டாலும் அது ஏன் இவ்வளவு வைரலாகிறது என்பதற்கு இதுவே சாட்சி" என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில், த்ரிஷாவின் திருமணம் பற்றிய பேச்சும் மீண்டும் கிளம்பியுள்ளது. "அம்மாவும், மகளும் சந்தோஷமாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் விரைவில் த்ரிஷாவின் திருமண செய்தியையும் கேட்க வேண்டும்" என்று ரசிகர்கள் மீண்டும் தங்கள் விருப்பத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, இன்று வரை தனது ரசிகர்களின் ஆதரவை குறையாமல் தக்க வைத்திருப்பதோடு, அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் செய்தியாக மாறும் அளவுக்கு சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.த்ரிஷா போஸ்ட்
குஷ்பூ பதிவு
மே சீசன் தொடங்கி விட்டது.. திரிஷா கொடுத்த க்ளூ! என்னது அடுத்த துணை முதல்வரா? போஸ்ட் கவனிச்சீங்களா?
திரிஷா பிறந்த நாளில் தோழன் விஜய்க்கு கிடைத்த கிப்ட்.. முகமெல்லாம் சந்தோஷம்! இனி நடக்கப்போவது என்ன?
ரசிகர்கள் கேள்வி