இன்ஸ்டாகிராமை அதிரவிட்ட திரிஷா, ரஜினி


  • சென்னை: சினிமாவில் வசூல் சாதனை, யூடியூப் வியூஸ் சாதனை, ட்ரெய்லர் வியூஸ் சாதனை என்று பல விஷயங்கள் பேசப்படும். ஆனால் இப்போது சமூக வலைத்தளயங்களில் பேசப்படுவது வேறொரு சாதனை. அதாவது இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் அதிகமான கமெண்ட்களை பெற்ற கோலிவுட் பிரபலங்களின் பதிவுகள் பட்டியலில் தற்போது இரண்டு பெயர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றொருவர் நடிகை திரிஷா. இந்த தகவல் தற்போது இணையத்தை வியக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    ரஜினியின் போஸ்ட்

    கடந்த மாதம் முழுக்க அதிக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட இரண்டு பெயர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் திரிஷா தான். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் "வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு.." என்ற ஒரே ஒரு வரியுடன் தனது போட்டோவை போஸ்ட் போட்டிருந்தார். அந்த ஒரு பதிவு ரசிகர்களிடம் செம வரவேற்பு பெற்றது.

    Advertisement

    ரஜினியின் போஸ்ட் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்ததோடு 4.69 லட்சத்துக்கும் அதிகமான கமெண்ட்கள் பதிவாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை உருவாக்கியது. அதே நேரத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட ஒரு சாதாரண பர்த்டே போட்டோ தான் எதிர்பார்க்காத அளவிற்கு இணையத்தை கலக்கியது. இதற்கு இண்ட்ரெடக்ஷன் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    குஷ்பு மகள் கல்யாணத்தில் கலக்கிய திரிஷா.. பக்கத்தில்

    அதிக கமெண்ட்ஸ் பெற்ற திரிஷா

    அதுவும் நடிகராக இருந்து இப்போது முதல்வராக மாறி இருக்கும் விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா என்ன போஸ்ட் போடுவார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முதல் நாள் பிறந்த நாளில் எந்த போஸ்டும் போடாமல் அமைதியாக இருந்த திரிஷா அடுத்த நாளே கேக் வெட்டும் ஒரு புகைப்படத்தை போஸ்ட் போட அது சோசியல் மீடியாவே கொழுந்து விட்டு எரிய வைத்துவிட்டது.

    Advertisement

    குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா... விஜய் மட்டும் ஏன் வரவில்லை? இதுதான் காரணமா? ரசிகர்கள் பிடித்த பாயிண்ட்
    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டாலும், அந்த போஸ்டில் என்னெல்லாம் இருக்கு? இது உண்மையான புகைப்படமா அல்லது ஐ புகைப்படமா? என்ற விவாதம் சோஷியல் மீடியாவில் சூடு பிடித்தது. ஆனாலும் போஸ்ட் வெளியான சில மணி நேரங்களிலே லட்சக்கணக்கான லைக்குள் குவிந்ததோடு 3.62 லட்சத்துக்கும் அதிகமான கமெண்ட்கள் பதிவாகி புதிய சாதனையை உருவாக்கியது.

    ரசிகர்கள் கருத்து

    ரஜினிகாந்த் என்றால் பல தலைமுறைகளைக் கடந்த ரசிகர்கள் பட்டாளம்... அவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டாலே அது செய்தியாகி விடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதேபோல 20 வருஷத்துக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவிற்கு சோசியல் மீடியாவில் இருக்கும் கிரஷ் மற்றும் அவருடைய போஸ்டுக்கு உருவாகும் பரபரப்பும் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா வசூல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் சோசியல் மீடியாவில் ஒரு நட்சத்திரத்தின் தாக்கம் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை இவர்களுடைய கமெண்ட்ஸ் காட்டி இருக்கிறது.

    English Summary

    Trisha and Rajinikanth: Instagram has become the latest platform to measure a celebrity's popularity, Superstar Rajinikanth's Instagram comeback post, featuring the caption "Vanakkam Vandhutennu Sollu," attracted over 4.69 lakh comments within hours, becoming one of the most engaged posts by a Tamil celebrity. Actress Trisha also sharing a birthday celebration post following Chief Minister Vijay's birthday. eventually crossing 3.62 lakh comments.