குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா... விஜய் மட்டும் ஏன் வரவில்லை? இதுதான் காரணமா? ரசிகர்கள் பிடித்த பாயிண்ட்


  • சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி. தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் கோவாவில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சினிமா உலகின் மிகப்பெரிய நட்சத்திர சந்திப்பாக மாறியிருந்தது.

    Advertisement

    மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா - அமலா, வெங்கடேஷ், அனில் கபூர், ஜாக்கி ஷ்ராஃப், பூர்ணிமா பாக்யராஜ், சரிதா, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர். குஷ்புவுக்கு நெருக்கமான நடிகை த்ரிஷாவும் தங்க நிற சேலையில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    Advertisement

    குஷ்பு மகள் கல்யாணம்

    முன்னதாக, "25 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள்" என்ற தகவல் வெளியான நிலையில், பின்னர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் கோவாவில் ஒன்றுகூடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

    ஆனால், திருமணத்தை விட சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட கேள்வி ஒன்றுதான். "குஷ்பு நேரில் அழைத்தும் முதலமைச்சர் விஜய் ஏன் வரவில்லை?"

    குஷ்பு மகள் கல்யாணத்தில் கலக்கிய திரிஷா.. பக்கத்தில்

    விஜய் கலந்து கொள்ளாத காரணம்

    திருமணத்திற்கு முன்பே குஷ்புவும், சுந்தர் சி.யும் நேரில் சென்று விஜயை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். அதனால் அவர் கோவாவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் திருமணத்தில் பங்கேற்கவில்லை.

    Advertisement

    இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய நாளில் சென்னை முழுவதும் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகள், புதிய சிறப்பு பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த நிகழ்வு, தொடர்ந்து சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பங்கேற்றார். அரசுப் பொறுப்புகள் காரணமாகவே அவர் கோவா செல்ல முடியாமல் போயிருக்கலாம் என்ற கருத்தை பலர் முன்வைத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் இன்னொரு விவாதமும் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் தாமதமாக த்ரிஷா வெளியிட்ட கேக் வெட்டும் புகைப்படம் பல நாட்களாக இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் உண்மையா? ஏ.ஐ.யா? என்ற விவாதம் இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், மீண்டும் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தேவையற்ற பேசுபொருள் உருவாகலாம் என்பதால், விஜய் அந்த நிகழ்ச்சியை தவிர்த்தாரா என்ற கேள்வியையும் சில நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

    Advertisement

    இதற்கிடையில், கோவா திருமணத்தில் த்ரிஷா தனியாக கலந்து கொண்டது விஜய் ரசிகர்களிடையே மற்றொரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. "திருமணம் முடிந்தது... ஆனால் இன்னும் ரிசப்ஷன் இருக்கே!" என்பதே தற்போது ரசிகர்களின் பேச்சாக உள்ளது.

    ரசிகர்கள் கருத்து

    சென்னையில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வாரா? த்ரிஷாவும் வருவாரா? இருவரும் ஒரே மேடையில் உடையில் வருவார்களா? அல்லது இந்த முறை எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விகளே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

    மொத்தத்தில், அவந்திகா - ஷ்ரவன் திருமணத்தை விட, "விஜய் ஏன் வரவில்லை?", "ரிசப்ஷனில் என்ன நடக்கப் போகிறது?" என்ற எதிர்பார்ப்புதான் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய டிரெண்டாக மாறியுள்ளது.

    English Summary

    Khushbu Daughter Wedding: The wedding of Avantika Sundar, the elder daughter of actress Khushbu and filmmaker Sundar C, turned into one of the biggest celebrity gatherings in recent times, with several leading stars from the South Indian film industry attending the ceremony in Goa.Among those present was actress Trisha Krishnan, whose elegant appearance in a golden saree quickly became a talking point on social media. However, the biggest question that emerged after the wedding was not about the guest list—it was about Chief Minister Joseph Vijay's absence, despite reportedly receiving a personal invitation from Khushbu and Sundar C.