சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வெற்றியின் இன்னொரு பெரிய பேசுபொருளாக மாறியிருப்பவர் நடிகை திரிஷா. படத்தின் ரிலீஸுக்கு முன்பு "திரிஷாவை ஓரம்கட்டிட்டாங்களா?" என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாக மாறி, சமூக வலைதளங்களில் "கருப்பு படத்தின் மறைமுக ஹீரோயின் திரிஷாதான்!" என்ற அளவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதிலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் முன்பே சொன்ன ஒரு விஷயம் தற்போது அப்படியே நடந்திருக்கிறது என்பதே ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் என பெரும்பாலான இடங்களில் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர்தான் அதிகம் காணப்பட்டனர். இதனால் "திரிஷாவை ஏன் அழைக்கவில்லை?", "படத்தில் அவங்க ரோல் அவ்வளவுதானா?" என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் ஓடியது. அப்போது இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், "திரிஷாவை யாரும் ஓரம்கட்டலை. படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லோரும் அவரைப் பற்றிதான் பேசுவாங்க பாருங்க" என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். இப்போது அதே விஷயம் நிஜமாக மாறியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தில் திரிஷா நடித்த ப்ரீத்தி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் திரிஷாவின் தோற்றம், இயல்பான நடிப்பு, எமோஷனல் காட்சிகள் என பல அம்சங்கள் கவனம் ஈர்த்துள்ளன. "திரிஷாவின் நோஸ் ரிங் செம்ம", "இது அவருடைய கெரியரின் பெஸ்ட் ரோல்களில் ஒன்று", "சூர்யாவுக்கு சமமான ஸ்க்ரீன் பிரசன்ஸ்" போன்ற பாராட்டுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இந்த பாராட்டுகளை பார்த்த திரிஷாவும் குழந்தை மாதிரி சந்தோஷத்தில், ரசிகர்கள் போடும் பாராட்டு பதிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கருப்பு படம் சூர்யாவின் கெரியரில் மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய சாதனை படைத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் ரூ.250 கோடியை நெருங்கி வரும் இந்த படம் இன்னும் சில நாட்களில் புதிய சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கிடையே திரிஷாவை மையமாக வைத்து ரசிகர்கள் புதிய கோணத்திலும் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா, இப்போது சூர்யாவின் கருப்பு-இந்த மூன்று பெரிய வெற்றி படங்களிலும் திரிஷா முக்கிய ஹீரோயினாக இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் கருப்பு உடை தொடர்பான ரசிகர்களின் காமெடி கணக்குகள் சமூக வலைதளங்களில் வைரலானது. "இந்த ஹீரோக்களுக்கு வெற்றி கொடுத்த ராசி ஹீரோயின் திரிஷாதான்" என்று ரசிகர்கள் போஸ்டர்கள் உருவாக்கி பகிர்ந்தனர். அதை திரிஷாவே ஷேர் செய்து ரசித்ததும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது. இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜியும் திரிஷாவுடன் எடுத்த கருப்பு பட செட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், "எப்போதும் சூப்பரா இருக்கும் ஸ்டாராகவும், ஒரு நல்ல தோழியாகவும் இருந்ததற்கு ரொம்ப நன்றி ஜி மேடம்! கருப்பு வெற்றியை உங்கள் வருகை இன்னும் ஸ்பெஷலாக்கியது. நான் எப்போதும் நீங்கள் என் பக்கம் இருப்பதாக உணர வைப்பது தான் உங்களிடம் இருக்கும் சிறந்த விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கு திரிஷாவும் உடனடியாக அன்பான பதில் கொடுத்திருக்கிறார். "செட்டை ரொம்ப ஜாலியாக வைத்துக் கொண்டதற்கும், எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததற்கும் நன்றி ஜி சார்" என்று பதிலளித்துள்ளார். இந்த "ஜி மேடம்", "ஜி சார்" பேச்சே இப்போது ரசிகர்களிடையே காமெடி டாப்பிக்காக மாறியுள்ளது. "இது என்ன கோட் வார்டா?", "படத்துல மட்டும் இல்ல ரியல் லைஃப்லயும் நல்ல பாண்டிங் போல!" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.ரிலீஸுக்கு முன் எழுந்த விமர்சனம்
கருப்பு ப்ரீத்தி
ரூ.250 கோடியை நெருங்கும் கருப்பு
'கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே!
"கருப்பு ஸ்டார்" திரிஷா?
ஆர்.ஜே. பாலாஜியின் நெகிழ்ச்சி பதிவு
ஆர்ஜே பாலாஜி பேசியதை ஏத்துக்க முடியல! அவமானப்படுத்திட்டாரு! கமலுக்கு அடுத்து சூர்யா தான்.. போஸ் வெங்கட் ஆதங்கம்
திரிஷாவின் அன்பான பதில்