என் வாழ்க்கையில் மிகப்பெரிய கௌரவம்.. ஜானகி பற்றி திரிஷா உருக்கம்.. 96 படத்தில் நடந்த விஷயம் தெரியுமா?

  • சென்னை: சில போட்டோக்களை பல வருஷங்கள் கழித்து பார்க்கும்போது மனதில் என்னவோ செய்யும். அதேபோல சில புகைப்படங்களை தான் பாடகி ஜானகி மறைவுக்குப் பிறகு நடிகை திரிஷா பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்திய திரை இசையின் நைட்டிங் கேர்ள் என்று கொண்டாடப்பட்ட ஜானகி ஜூலை 11ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவுக்கு காரணமாக காலமானார். பல தலைமுறைகளை நினைவுகளோடு கலந்த அவருடைய குரலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை திரிஷா எழுதிய பதிவு பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

    Advertisement

    திரிஷா போஸ்ட்

    திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஜானகியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஜானகியை வாஞ்சையாக கட்டிப்பிடித்தபடி திரிஷா சிரிக்கும் காட்சிகளும் இருக்கிறது. மேலும் "அந்த பதிவிற்கு என்னுடைய மிகவும் சிறப்பான படங்களில் ஒன்றில் உங்கள் பெயரை சுமந்தது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் உங்களை தெரிந்து கொண்டதும் உங்கள் அன்பைப் பெற்றதும் நான் என்றென்றும் பாதுகாக்கும் நினைவு" என்று திரிஷா பகிர்ந்து இருக்கிறார்.

    பாடகி ஜானகி மறைவுக்கு வருத்தம்

    திரிஷாவின் பதிவில் இருக்கும் "உங்கள் பெயரை சுமந்தேன்" என்ற ஒரு வரி தான் 96 பட ரசிகர்களை மீண்டும் பழைய நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது. விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் திரிஷாவின் கேரக்டர் ஜானகி தேவி என்கிற ஜானு. ஜானகியின் தீவிர ரசிகையாகவே அந்த கேரக்டர் காட்டப்பட்டிருக்கும். பள்ளி பருவ ஜானுவிடம் பாட சொன்னாலே எஸ் ஜானகியின் பாடல்கள் தான் வரும். அந்த அளவிற்கு ஜானகியின் குரலும் 96 படத்தின் உணர வைத்திருக்கிறது.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    இந்த படத்தில் ஒரு சோகமான விஷயமும் இருக்கிறது. 96 படத்திற்காக எஸ் ஜானகி ஒரு காட்சியில் நடித்திருந்தார். ராமுவும் ஜானுவும் ஜானகியை மீட் பண்ற மாதிரி அந்த காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சி கட் பண்ணி எடுத்து விட்டார்களாம். பிறகு டெலிட் சீனாக அந்த வீடியோ வெளியான போது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஜானகி அம்மாவையே நடிக்க வைத்துவிட்டு இந்த காட்சி எப்படி டெலிட் பண்ணுனீங்க என்று இயக்குனர் பிரேம்குமாரிடம் பலரும் கேள்வி எழுப்பினர்.

    English Summary

    Trisha: Actress Trisha has shared She said carrying Janaki’s name in one of her most special films, 96, was one of the greatest honours of her life. Trisha played Janaki Devi, popularly known as Jaanu, an ardent S Janaki fan in the film. Interestingly, S Janaki had also appeared in a special scene shot for 96, but the sequence was removed from the theatrical version and later released as a deleted scene.