லண்டனில் திரிஷா? பக்கத்தில் யாரு? வைரலாகும் வீடியோ.. விளாசிய நடிகை அம்பிகா.. நறுக்குன்னு கேட்ட கேள்வி

  • சென்னை: நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் எப்போதுமே ஒரு பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது திரிஷா லண்டனில் இருக்கிறாரா? என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டன் தெருக்களில் தான் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு ஹோட்டலில் திரிஷாவை பார்த்ததாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அதற்கு நடிகை அம்பிகா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

    Advertisement

    அந்த வீடியோவை வெளியிட்ட பெண், what is that Trisha? என்ற கேப்ஷனை கொடுத்து இருக்கிறார். உடனே இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள் ஆளுக்கு ஒரு கதையை கட்ட தொடங்கி விட்டார்கள். திரிஷா யாரோடு லண்டன் போயிருக்கிறார்? எதற்காக போயிருக்கிறார்? என்று தேட தொடங்கி விட்டார்கள். இந்த வீடியோ வைரலாகி வருவதை பார்த்ததும் நடிகை அம்பிகா அந்த வீடியோவுக்கு ஒரு கமெண்ட் போட்டு இருக்கிறார்.

    Advertisement

    நடிகை அம்பிகா பதிலடி

    "அது திரிஷாவாக இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை பற்றி நமக்கு என்ன? இதெல்லாம் ஒரு விஷயமாக? " என்று அம்பிகா பதிலடி கொடுத்திருக்கிறார்.

    இது ஒரு பிரச்சனையா?

    நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது திரிஷா எங்க போனார்? யார் கூட போனார்? என்று ஒரு விவாதத்தை வைத்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்வது அவசியமா? என்று அம்பிகா கேட்டிருக்கும் நிலையில் அதை வைத்தும் நெட்டிசன்கள் விவாதத்தை தொடங்கி விட்டார்கள். அம்பிகா திரிஷாவுக்கு சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கிறாரே அப்போ என்னவா இருக்கும்? என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    Advertisement

    ஒரே சந்தேகம்

    உங்களுக்கு இருக்கிற ஆயிரம் பிரச்சனையில் இதுவெல்லாம் ஒரு வேலையா? உங்க வேலையை முதல்ல பாருங்க என்று அம்பிகா பொட்டில் அடித்தது போல பேசி இருந்தாலும் இந்த நெட்டிசன்கள் விவாதம் மட்டும் குறையவே இல்லை. அந்த வீடியோவில் கூட த்ரிஷா மேடம் எதற்காக லண்டனுக்கு போனீங்க? எதுவும் புது படம் சூட்டிங்க்கா? அல்லது பர்சனல் விஷயமா? என்று திரிஷாவை டேக் செய்து பலர் கமெண்ட்ஸ் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

    ரசிகர்கள் கேள்வி

    சும்மாவே திரிஷா வைரல் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போ அவரே வெளியிடாத வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுவும் அந்த லண்டன் பெண் எப்போ அந்த வீடியோவை எடுத்தார்? என்று தெரியவில்லை. ஒருவேளை முன்னாடியே எடுத்து இப்போ போஸ்ட் போட்டாரா? அல்லது இப்போதுதான் அந்த வீடியோவை எடுத்தாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். எது எப்படியோ இப்போ மீண்டும் திரிஷா பற்றிய பேச்சு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Trisha: There is always some buzz surrounding actress Trisha on social media. In this instance, a video has gone viral online raising the question: Is Trisha currently in London? While a video posted by a woman—claiming to have spotted Trisha at a hotel while wandering the streets of London—is circulating widely, actress Ambika has responded to the matter.