விஜய் பற்றிய பேச்சு.. திரிஷா வெளியிட்ட பதிவு.. இந்த நடிகைக்கு தான் பதிலடியா? பற்றி எரியும் புதிய சர்ச்சை

  • சென்னை: நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் பகிரும் ஒவ்வொரு பதிவும் தற்போது தனி விவாதம் ஆகி விடுகிறது. குறிப்பாக கடந்த சில காலமாக அவரை சுற்றி விஜய் தொடர்பான பல்வேறு வதந்திகள், விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் பரவி வரும் நிலையில் திரிஷா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வெளியிடும் பதிவுகள் எல்லாம் யாருக்கான பதிலடி என்று கேள்வி எழுந்து வருகிறது.

    Advertisement

    அந்த வகையில் தற்போது திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 2 இன்ஸ்டா ஸ்டோரி பதிவுகள் இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது? அதில், நான் வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறேன் என்று முதல் பதிவில் சொல்லி இருக்கிறார். அதாவது "ஒரு காலத்தில் நாம் வேண்டிக் கொண்ட வாழ்க்கையே இன்று நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு நிறைவாக இருப்பது ஒரு பாக்கியம்" என்ற அர்த்தத்தில் அந்த பதிவு இருக்கிறது.

    Advertisement

    நடிகை திரிஷா இன்ஸ்ட்டா பதிவு

    அதற்கு அடுத்ததாக திரிஷா பகிர்ந்த இரண்டாவது பதிவுதான் நெட்டிசனின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதில் "Drama at this age is embarrassing... Go make some money and find peace." என்ற வாசகம் இடம் பிடித்திருக்கிறது. அதாவது, "இந்த வயதில் ட்ராமா செய்வது சங்கடமாக இருக்கிறது. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து மன அமைதியை தேடுங்கள்" என்று அந்த பதிவுக்கு அர்த்தம் வருகிறது. இந்த 2 பதிவுகளையும் அடுத்தடுத்து திரிஷா வெளியிட்டிருப்பதால் இது யாருக்கான மறைமுக பதில் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் சில நெட்டிசன்கள் இந்த பதிவு நடிகை குட்டி பத்மினிக்கு தான் என்று அடித்து கூறி வருகின்றனர்.

    Advertisement

    அதாவது சமீபத்தில் திரிஷா மற்றும் விஜய் குறித்து குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் பேசும்போது, திரிஷா நல்ல பெண் அவரைப் பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் பிரிந்ததற்கு காரணம் கூட திரிஷா தான் என்று சிலர் சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் இருவருக்கும் இப்போ ஈர்ப்பு இருக்கிறதோ.. இல்லையா.. என்று தெரியாது. ஆனால் ஆரம்பத்தில் கில்லி சமயத்தில் இருவருக்குள் நல்ல புரிதல், மனப்பூர்வமான ஒரு காதல் இருந்தது.

    அந்த சமயத்தில் எஸ்வி சந்திரசேகருக்கு இது பிடிக்கவில்லை. அவர்தான் அப்போது சங்கீதாவை விஜய்க்கு கல்யாணம் பண்ணி வைத்தார். அதற்கு பிறகு விஜய்யின் வாழ்க்கை வேற மாதிரி போய்விட்டது. திரிஷாவின் வாழ்க்கை வேற மாதிரி போய்விட்டது. பிறகு இருவரும் கோட் சமயத்தில் தான் சந்தித்தார்கள். ஆனால் அதற்கு முன்பு விஜய், சங்கீதா பிரிந்து விட்டார்கள். இப்படி இருக்கும்போது இதில் திரிஷாவை தொடர்பு படுத்தி சொல்லுவது என்ன நியாயம்? ஒருவேளை அவர்கள் இருவரும் நல்ல நட்பு மட்டுமே இருக்கலாம் அதைக்கூட இவர்கள் தவறாக பேசுவது தப்பு என்றெல்லாம் பேசி இருந்தார்.

    Advertisement

    இந்த வயதில் ட்ராமா பண்ணாதீங்க! உழைத்து சம்பாதிங்க! இன்ஸ்ட்டாவில் திரிஷா பதிலடி! வெடிக்கும் சர்ச்சை
    இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதும் குட்டி பத்மினியை பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டனர். இவர் திரிஷாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறாரா? அல்லது திரிஷாவை கேவலப்படுத்துகிறாரா? என்று கேள்வி கேட்டனர். காரணம் கில்லி படம் வருவதற்கு முன்பே விஜய்க்கு கல்யாணம் முடிந்துவிட்டது. அதாவது சங்கீதா விஜய்யின் திருமணம் 1999 ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. ஆனால் விஜய் திரிஷா இருவரும் இணைந்து நடித்த கில்லி படம் 2004 இல் தான் வெளியானது. இது தெரியாம இவங்க இப்படி கதை விட்டுட்டு இருக்காங்க என்றும் விமர்சித்து இருந்தனர்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சில நாட்களுக்கு பிறகு திரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த பதிவு வெளியிட்டிருப்பதால் இது குட்டி பத்மினிக்கு வெளியிட்ட பதிவாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். ஆனால் இது குறித்து திரிஷா அந்த பதிவில் குட்டி பத்மினி பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடுவது. இதனால் இந்த பதிலடி யாருக்காக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் கமெண்டுகளை கொட்டுகிறார்கள்.

    English Summary

    Trisha: Every post that actress Trisha shares on social media is now a separate discussion. Especially since various rumours, criticisms and comments related to Vijay have been spreading around her for the last few years, the question arises as to whose posts Trisha is publishing without mentioning anyone's name. Since Trisha has published these 2 posts in succession, the question has now arisen to whom this is an indirect answer. It is in this situation that some netizens are saying that this post is for actress Kutty Padmini.