சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் இன்ஸ்டா பதிவு.. மொத்த வதந்திகளுக்கும் இதுதான் பதிலா? குவியும் கமெண்ட்ஸ்

  • சென்னை: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் திரிஷா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் அவரை பற்றிய பழைய பேட்டிகள், இன்னொரு பக்கம் சோசியல் மீடியா வதந்திகள், அதோடு சிலர் கூறும் கருத்துக்கள் என தினமும் ஏதாவது ஒரு காரணத்தால் அவர் பெயர் ட்ரண்ட் ஆகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அவர் கடைசியாக வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமாக கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    சமீபத்தில் விஜய்யின் குடும்ப விவாகாரம், சங்கீதா விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற சம்பவம், அதற்கு முன் குட்டி பத்மினி கூறிய கில்லி பட கால காதல் குறித்த பேட்டி என இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த விவாதங்களில் திரிஷா பெயரும் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவ்வளவு சர்ச்சைகள் நடந்தாலும் திரிஷா இதுவரை எந்த ஒரு விளக்கத்திற்கும் நேரடியாக பதில் கொடுக்கவில்லை.

    Advertisement

    ரசிகர்களின் எதிர்பார்ப்பு

    அதற்குப் பெயராக பதிலாக தனது வேலை, பயணம், திரைப்படங்கள், விளம்பர நிகழ்ச்சிகள் என வழக்கம் போல பிசியாகவே இருந்து வருகிறார். ஆனால் இப்போது சில நாட்களாக திரிஷா எந்த இன்ஸ்டாக போஸ்ட்டும் போடவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுகிறது. இதற்கு முன்பு என்னதான் பிரச்சனை வந்தாலும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரிக்கு தத்துவங்களையாவது வைத்து விடுவார். ஆனால் இப்போ திரிஷா ஏன் போஸ்ட் போடவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    திரிஷாவின் இன்ஸ்ட்டா பதிவு

    அதோடு அவர் கடைசியாக போட்ட போஸ்ட் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை அதில் திரிஷா பகிர்ந்து இருந்தார். அதில் "எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது நம் விருப்பம்.. அந்த விருப்பத்தையே தேர்வு செய்யுங்கள்" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

    Advertisement

    திரிஷாவின் பதில்

    இந்த பதிவில் திரிஷா தன்னை பற்றி வரும் பிரச்சனைகள் வதந்திகளுக்கு எல்லாம் கவலைப்படவே மாட்டேன் என்பது போல சொல்லி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பது எல்லாராலும் இருக்க முடியாது. ஒரு சின்ன பிரச்சனை வந்தாலே நாம் பதறி விடுவோம். ஆனால் திரிஷா இவ்வளவு வதந்திகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    பழைய பேட்டி

    இதுபோல வதந்திகளுக்கு திரிஷா பதில் கொடுப்பது முதல் முறை அல்ல. ஏற்கனவே சில வருஷங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் சோசியல் மீடியாவில் வரும் வதந்திகள் குறித்து அவர் பேசும் போது, முகம் தெரியாத சிலர் கற்பனையாக கதை கட்டுகிறார்கள். அதையெல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். ஒவ்வொரு வதந்திக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் மன நிம்மதியே இருக்காது. அதனால் அதை கடந்து போய் விடுவேன் என்று சொல்லி இருந்தார். அந்த பழைய பேட்டியும் தற்போது வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவும் பொருந்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English Summary

    Trisha: Trisha is one of the most talked about actresses on social media for the past few days. On one hand old interviews about him, on the other hand social media rumours, along with the opinions of some people, his name is trending every day due to one reason or another. At this stage, his last post is getting a lot of attention on the internet.