“மேஜிக்கல் மே” சூசகமாக திரிஷா வெளியிட்ட போஸ்ட்.. அடுத்தடுத்த சம்பவம் இருக்கு போல!


  • சென்னை: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா கிருஷ்ணன், தற்போது மீண்டும் வெற்றிப் பாதையில் செல்வது போல தெரிகிறது. சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றி உற்சாகத்தில் இருக்கும் திரிஷா, சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    நடிகை திரிஷா பதிவு

    படப்பிடிப்பு தளத்தில் எடுத்த அழகான புகைப்படங்களை பகிர்ந்த திரிஷா, அதற்கு "My magical May said, one more for the win... Just God things" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஒரு வரி பதிவே தற்போது ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

    Advertisement

    ஏனெனில், திரிஷாவுக்கு இந்த மே மாதம் உண்மையிலேயே ஸ்பெஷலான மாதமாக அமைந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. முதலில், மே 4ஆம் தேதி திரிஷாவின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் அதேபோல் வாழ்த்துக்கள் குவிந்தன.

    திரிஷா பிறந்த நாள்

    அதுமட்டுமல்லாமல், திரிஷாவுடன் நீண்டகால நண்பர் தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் வெற்றியும் இந்த மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதுவும் திரிஷாவின் பிறந்தநாளில் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானது அப்போது யாரும் எதிர்பார்க்காத அளவில் விஜய் வெற்றி பெற்றது அனைவருக்குமே இன்ப அதிர்ச்சியாக தான் அமைந்தது.

    Advertisement

    இதற்கிடையில், தற்போது 'கருப்பு' திரைப்பட வெற்றியும் திரிஷாவுக்கு இந்த மே மாதத்தை மேலும் மறக்க முடியாத மாதமாக மாற்றியிருக்கிறது. அதனால்தான் அவர் "மேஜிக்கல் மே" என்று குறிப்பிட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

    சமீப காலமாக திரிஷா நடித்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு திரிஷாவின் திரை பயணம் நல்ல வரவேற்பில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் முழு கொண்டாட்டத்துடன் பேசும் அளவிலான கமர்ஷியல் ஹிட் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த குறையை 'கருப்பு' படம் போக்கியிருக்கிறது.

    Advertisement

    கருப்பு ஹிட்

    சூர்யாவுடன் பல வருடங்களுக்கு பிறகு திரிஷா மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடம் நீண்டகாலமாக இருந்தது. அதற்கு 'கருப்பு' நல்ல பதிலாக அமைந்திருக்கிறது.

    படத்தில் திரிஷாவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், தனது இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம், ஸ்ட்ராங்கான பிரசென்ஸ் ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அவர் பகிர்ந்த கருப்பு பட ஷூட்டிங் ஸ்டில்களும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகை என்ற பெருமை திரிஷாவுக்கு உண்டு. 'கில்லி', 'சாமி', 'உனக்கும் எனக்கும்', 'வின்னைத்தாண்டி வருவாயா', '96', 'பொன்னியின் செல்வன்' போன்ற பல வெற்றி படங்கள் அவரது கேரியரை உயர்த்தியவை.

    Advertisement

    ஒரு கட்டத்தில் கதாநாயகிகளின் மார்க்கெட் குறையும் என்ற எண்ணத்தை முறியடித்து, இன்னும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். அதுவே திரிஷாவின் ஸ்டார் பவரை காட்டுகிறது.

    மேஜிக்கல் மே

    இப்போது 'கருப்பு' வெற்றியால், திரிஷாவுக்கு மீண்டும் ஒரு பெரிய கமர்ஷியல் ஹிட் கிடைத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் தான் அவர் இந்த மே மாதத்தை "மேஜிக்கல்" என்று குறிப்பிட்டாரோ என்ற பேச்சும் இணையத்தில் சூடுபிடித்திருக்கிறது.

    மொத்தத்தில், பிறந்தநாள் மகிழ்ச்சி, நண்பரின் அரசியல் வெற்றி, கருப்பு பட ஹிட் என இந்த மூன்றும் சேர்ந்து திரிஷாவுக்கு இந்த மே மாதத்தை மறக்க முடியாத மாதமாக மாற்றியிருக்கிறது.

    English Summary

    Actress Trisha has sparked fresh speculation among fans with her latest Instagram post describing May as her “magical month.” Sharing behind-the-scenes photos, she wrote, “My magical May said, one more for the win... Just God things,” leading fans to wonder if she is hinting at more positive developments ahead. The buzz comes at a time when Karuppu, her latest film with Suriya directed by RJ Balaji, is performing strongly at the box office. Fans are also linking her comment to other significant moments this month, including her birthday celebrations and other personal milestones. With Karuppu marking another successful outing, Trisha’s post has only added to the excitement surrounding her current winning phase.