கோவைக்கு திடீர் விசிட் அடிக்கும் திரிஷா.. விஷயம் இதானா? அப்போ வீடியோவுக்கு பஞ்சம் இருக்காது!

  • சென்னை: நடிகை திரிஷா நீல நிற உடையில், கூலிங் கிளாஸ் அணிந்தபடி கோவையில் இருக்கும் வீடியோ ஒன்று இப்போ சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்த திரிஷா கோவையில் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஏர்போர்ட்டிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே திரிஷா எங்கே போனாலும் கூட்டம் சூழ்ந்துவிடும், நிலையில் கடை திறப்பு விழாவில் திரிஷாவை பார்ப்பதற்காக கூட்டம் கூடுமா என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    Advertisement

    கடை திறப்பு விழா

    கோவையில் 100 அடி சாலையில் திறக்கப்பட உள்ள ஐ மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூமை திரிஷா திறந்து வைக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அவர் அந்த நிகழ்ச்சியில் ஏதாவது பேசுவாரா? அதில் தன்னுடைய அடுத்த படத்தை பற்றி பேசுவாரா? அல்லது அந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் பேசி முடித்து விடுவாரா? தன்னை பற்றி சமீப காலமாக பரவி வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பாரா? என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

    Advertisement

    திரிஷாவின் புது படம்

    திரிஷாவை பொறுத்தவரை இப்போது சினிமாவில் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடித்தவர், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்திலும் நடித்திருக்கிறார். இது தவிர இயக்குனர் ராதாகிருஷ்ண மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் திரில்லர் படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், அபர்ணா முரளி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் லண்டனில் நடைபெற்று வருவதால் அங்கே தான் சில மாதங்களாகவே அவர் இருந்தார். இந்த நிலையில் இப்போது அவர் கோவைக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அப்டேட் ஆக இருக்கிறது.

    Advertisement

    ரசிகர்கள் கமெண்ட்ஸ்

    ஏற்கனவே வானிலை சட்டென மாறி, மழை எப்போ வருது எப்படி போகிறது என்று தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் திடீரென மழை வந்து விடுகிறது. கனமழை வரும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் கூட மழை வராமல் ஏமாற்றி விடுகிறது. ஆனால் திரிஷாவை பார்ப்பதற்காக இப்பவே கோவைக்கு போகணுமே என்று சிலர் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ நீங்க வீடியோ வெளியிடுங்க, அதை நாங்க சோசியல் மீடியாவில் பார்த்துக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனாலும் திரிஷா இந்த நிகழ்ச்சியில் என்ன பேசுவார் என்பது தான் இப்போ பலருடைய எதிர்பார்ப்பு.

    English Summary

    A video of actress Trisha, wearing a blue outfit and sunglasses, has been gaining attention on social media. Trisha, who had been abroad for a film shoot, has arrived at the airport to attend the inauguration of a new store in Coimbatore. As crowds typically gather wherever Trisha goes, a large turnout of people is expected at this store opening as well.