சென்னை: நடிகை திரிஷா வெளியிட்டிருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இப்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் விஜய்யுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது தீபாவளியை முன்னிட்டு அவர் பகிர்ந்திருக்கும் பதிவு பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதிலும் இந்த முறை அவர் பகிர்ந்திருப்பது சினிமா, ஃபேஷன் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பதிவு கிடையாது. ஆதரவற்ற நாய்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்த தீபாவளி நான் ஒரு சிறப்பான விஷயம் செய்யப்போகிறேன். மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு உணவு வழங்குவதற்கான செலவை ஏற்கிறேன்", வெறும் ரூ.1,000 கொடுத்தால் ஒரு மீட்கப்பட்ட நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு வழங்க முடியும், அதாவது 30 நாட்களுக்கு அந்த நாய் வயிறு நிறைய உணவு சாப்பிடுவதற்கான உதவியைச் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறார். இதோடு நிறுத்தாமல், இந்த தீபாவளிக்கு தன்னுடன் ரசிகர்களும் இணைந்து ஒரு நாயின் உணவுச் செலவை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ரூ.1,000 நன்கொடை அளித்து ஒரு நாயின் வாழ்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியை கொண்டு வரலாம் என்றும், இதற்காக ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நன்கொடை அளிக்குமாறும் கேட்டிருக்கிறார். இறுதியில், அவர்களுக்கும் இந்த தீபாவளி சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே நடிகர், நடிகைகள் தங்களுடைய புத்தாடை புகைப்படங்கள், குடும்பத்துடன் கொண்டாட்டம், வாழ்த்துகள் என சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்வது வழக்கம். ஆனால் திரிஷா இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். பட்டாசு, புது டிரஸ், இனிப்புகள் என நம்முடைய கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஆதரவற்ற விலங்குகளுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக ரூ.1,000ல் நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு கிடைக்கும் என்பதை அவர் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது. நம்முடைய சிறிய உதவிகூட உணவுக்காகக் காத்திருக்கும் ஒரு உயிருக்கு எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என்பதை இந்த பதிவு நினைவுபடுத்துகிறது. திரிஷாவின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டனர். அனில் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பழுப்பு நிற கோட் அணிந்திருந்த நிலையில், திரிஷா இளஞ்சிவப்பு நிற புடவையில் வந்திருந்தார். இருவரும் மணமக்களை வாழ்த்த மேடைக்கு சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவின. ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகளும் பேசப்பட்டன. குறிப்பாக விஜய் - திரிஷா இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. ஆனால் என்ன பற்றி என்ன வேணாலும் பேசிட்டு இருக்குற அதைப்பற்றி எல்லாம் நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்று சொல்வது போல தான் இப்போது த்ரிஷா தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் இந்த தீபாவளிக்கு நாய்க்கு உதவும்படி வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதனாலேயே திரிஷா பதிவு வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு
ரசிகர்களிடம் வேண்டுகோள்
சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் இன்ஸ்டா பதிவு.. மொத்த வதந்திகளுக்கும் இதுதான் பதிலா? குவியும் கமெண்ட்ஸ்
திரிஷா செய்திருக்கும் விஷயம்
விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில்