மொத்த சர்ச்சைக்கும் ஒரே போஸ்டில் முற்றுப்புள்ளி வைத்த திரிஷா.. லண்டன் விசிட் பின்னணி இதுதானா?

  • சென்னை: நடிகை திரிஷா லண்டனில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோ சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. திடீரென லண்டனுக்கு திரிஷா எதற்காக போனார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்போது அவரே அது குறித்த ஒரு போஸ்ட் போட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். திரிஷா வெளியிட்ட பதிவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    சோசியல் மீடியாவில் எப்போதுமே பேசப்படும் நடிகையாக திரிஷா மாறிவிட்டார். சினிமாவில் இவர்நடிக்கும் படங்களை விட சோசியல் மீடியாவில் இவரைப் பற்றிய பேச்சுக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் இன்ஸ்ட்டா ஸ்டோரியில் இவர் வைக்கும் புகைப்படங்களும் தத்துவங்களும் கூட பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுகிறது.

    Advertisement

    லண்டனில் திரிஷா

    இப்படி இருக்கும்போது தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் நான் லண்டனில் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு ஹோட்டலில் திரிஷாவை பார்த்தேன். அவர் சில பெண்களுடன் அங்கு ஹாயாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு வீடியோவை எடுத்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விட்டார். உடனே அது தீப்பிடித்தது போல பரவ தொடங்கி விட்டது. எதற்காக திரிஷா திடீரென லண்டனுக்கு போயிருக்கிறார்? அடுத்த வாரம் முதல்வர் விஜய் சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு திரிஷா லண்டனுக்கு போயிருக்கிறாரே அப்போ அதுவாக இருக்குமோ? இதுவா இருக்குமோ? என்று ஆளுக்கு ஒரு பக்கம் கதை கட்ட தொடங்கி விட்டார்கள்.

    Advertisement

    வதந்தி

    இது பற்றி சோசியல் மீடியாவிலும், youtube சேனல்களிலும் பலரும் வீடியோக்களையும் வெளியிட தொடங்கி விட்டார்கள். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் திரிஷா சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் சினிமாவை விட்டு விலகி விட்டாரா? என்ற கேள்விகளும் எழுந்தது. இப்போது மொத்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுக்கிற மாதிரி திரிஷா ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அது வெறும் பட அறிவிப்பு மட்டுமல்ல, அது தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இருக்கிறது.

    புது பட அறிவிப்பு

    அதாவது பாலிவுட்டில் புகழ்பெற்ற பனோரமா ஸ்டுடியோ (திருஷ்யம் பட நிறுவனம்) தயாரிக்கும் படத்தில் திரிஷா தான் கதாநாயகியாக நடிக்கிறாராம். அவருடன் ராதிகா சரத்குமார், நடிகை அபர்ணா பாலமுரளி என மூன்று பேரும் ஒரே படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்கள். அக்ஷய் குமாரின் ஏர்லிஃப்ட், சைஃப் அலிகானின் செஃப் போன்ற படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ணமோகன் இந்த படத்திற்கு ஆக்ஷன் கட் சொல்கிறார். இது அவருடைய முதல் தமிழ் திரைப்படம்.

    Advertisement

    அந்த படத்தின் கதையில் சைக்காலஜி, ஹரார் வகையில் உருவாக்கப்பட போகிறதாம். இதற்காக படப்பிடிப்பு பணி சூழ்ந்த நகரமான லண்டனில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்காகத்தான் திரிஷா லண்டனில் இருக்கிறாராம் ஆனால் செய்திகள் வேறு விதமாக பரவி வருகிறது. ஏற்கனவே திரிஷாவும், விஜய்யும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வதில் கொள்வதால் இப்போ லண்டனில் கூட விஜய் வருவதற்கு முன்பே திரிஷா போய்விட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டது.

    லண்டன் ரகசியம்

    அதோடு லண்டனில் விஜய்யின் மனைவி சங்கீதா இருப்பதால் அவரை சந்திப்பதற்காக திரிஷா போயிருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருந்தது. ஆனால் இப்போது அவர் வெளியிட்ட பட அறிவிப்பை பார்த்தால் மொத்த வதந்திகளுக்கும் பதில் சொல்வது போல இருக்கிறது. சரி எது எப்படி போனாலும் சரி அடுத்த படத்திலாவது திரிஷாவுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள கதையை கொடுங்க பாஸ் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

    English Summary

    Trisha: A video showing actress Trisha in London, which surfaced a few days ago, sparked widespread discussion on social media. While many were wondering why she had suddenly traveled to London, she has now put an end to the speculation by sharing a post about it. Upon seeing her post, fans are extending their best wishes to her.