விஜய் பற்றி ஆஸ்திரேலியாவில் ரசிகர் சொன்ன வார்த்தை.. டக்குனு திரிஷா செய்த செயல்.. இலங்கை தமிழ் பற்றி பெருமிதம்

  • சென்னை: நடிகை திரிஷா எங்கு போனாலும் அவருடைய படங்களை விட, சமீப காலமாக அதிகம் பேசப்படுவது அவரை சுற்றியுள்ள வதந்திகள் தான். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் விஜய் பற்றி எழுப்பிய கேள்விக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன் தான் சமூக வலைத்தளங்களில் வைரலகி வருகிறது .

    Advertisement

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ஸ்டன் பார்க் பகுதியில் அமைந்துள்ள KST Spice Corner-ன் 15-வது ஆண்டு விழா மற்றும் புதிய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திரிஷா கலந்து கொண்டார். பிளாக்டவுன் ஷோக்ரவுண்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    Advertisement

    அந்த நிகழ்ச்சியில் மேடையில் நின்றபடி ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த திரிஷாவிடம், மேடம் தமிழில் பேசுங்க என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு சிரித்தபடியே பதில் கொடுத்த திரிஷா எனக்கு தமிழில் பேசுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் உங்க இலங்கை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பேசுவதை கேட்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

    சிட்னியில் திரிஷா பேச்சு

    சென்னையில் இருக்கிறவங்களால் கூட உங்களை மாதிரி தமிழ் பேச முடியாது. அது வேறு விதமாக இருக்கும். அந்த பேச்சு தான் எனக்கு தெரியும் அதனால் நான் அப்படியே பேசுகிறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று சொல்லிக் கொண்டார். பிறகு எனக்கு தெலுங்கு பேச தெரியாது அதனால் தெலுங்கில் பேச சொல்லி என்னை கஷ்டப்படுத்தாதீங்க, தமிழ் இல்லன்னா இங்கிலீஷ்ல பேசுறேன் என்று இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    விஜய் பற்றிய கேள்வி

    அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தாலும் அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம் தான் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, "திரிஷா மேடம் விஜய் சாரை கேட்டதா சொல்லுங்க" என்று சத்தமாக கூறினார். அந்த கேள்வியை கேட்ட திரிஷா ஒரு நிமிடம் முகம் மாறினாலும் பிறகு புன்னகைத்துக் கொண்டார்.

    விஜய் திரிஷா பஞ்சாயத்து

    ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் அடுத்த பேச்சுக்கு நகர்ந்துவிட்டார். இந்த வீடியோ தான் எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக திரிஷா விஜய் இருவரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர். இருவரும் பல வெற்றி படங்களில் இணைந்து நடித்திருப்பதோடு சமீபத்திய சில பொது நிகழ்ச்சிகளிலும் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது பற்றி பலரும் பேசிய வருகின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    இந்த பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவில் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து நேரடியாக கேட்டது கவனம் ஈர்த்து உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லல ஆனால் அந்த சிரிப்பே போதும் திரிஷா ரொம்ப புத்திசாலித்தனமாக சமாளிச்சுட்டாங்க என்று கூறுகின்றனர்.

    எது எப்படியோ திரிஷா பதில் சொன்னாலும் செய்தி, சொல்லலனாலும் செய்தி தான் அதனால் அவர்கள் அமைதியாக இருந்ததே போதும் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் அப்போது கூட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேள்விகள் கேட்காமல் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

    English Summary

    Trisha: Wherever actress Trisha goes, more than her films, the rumors surrounding her have been the talk of the town lately. Trisha's reaction to a fan's question about Vijay at an event in Australia is going viral on social media.