சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நீடித்து வரும் திரிஷா கிருஷ்ணன், சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஒரு படம் வெளியானாலோ, ஒரு புகைப்படம் பகிர்ந்தாலோ, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலோ அவரை குறிவைத்து சிலர் தொடர்ந்து விமர்சித்து வருவது ரசிகர்களிடையே கூட கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷா பற்றிய விமர்சனம்
குறிப்பாக சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு திரிஷாவின் நடிப்பு, வசன உச்சரிப்பு, தோற்றம் என பல விஷயங்களை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், விமர்சனங்களும் அதிகரித்தன. தியேட்டரில் படம் ஓடியபோது பெரிதாக பேசப்படாத விஷயங்கள், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு திடீரென விவாதமாக மாறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆன்மிக குரு சத்குரு பேசும்போது, "யாரும் உங்களிடம் நன்றாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காத அளவுக்கு உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் நீங்கள் அற்புதமானவராக இருங்கள். மற்றவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்." என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை திரிஷா பகிர்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், "இது வெறும் ஆன்மிக பதிவு இல்லை... தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு திரிஷா கொடுத்த அமைதியான பதில்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் "மக்கள் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் செல்வேன்", "வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அமைதிதான்" என்ற மனநிலையில்தான் திரிஷா இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். திரிஷாவின் சினிமா பயணத்தை பார்த்தால், இதுபோன்ற விமர்சனங்கள் அவருக்கு புதிதல்ல. 'மௌனம் பேசியதே', 'சாமி', 'கில்லி', 'விண்ணைத்தாண்டி வருவாயா', '96', 'பொன்னியின் செல்வன்' என தலைமுறைகளை கடந்து வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நீடிப்பதே அவரது மிகப்பெரிய சாதனை என்று ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். சமீப ஆண்டுகளில் 'லியோ', 'பொன்னியின் செல்வன்', 'கருப்பு' போன்ற படங்கள் மூலம் மீண்டும் உச்சத்தில் இருக்கும் திரிஷா, இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் குறையவில்லை. ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது வேலை, சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. அதனால்தான் ஒவ்வொரு முறையும் சர்ச்சைகள் வந்தாலும், அவர் நேரடியாக பதிலளிப்பதை விட ஒரு பதிவு, ஒரு புகைப்படம் அல்லது ஒரு சிரிப்பால் கடந்து செல்கிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர். "வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது" என்பதையே திரிஷா தனது சமீபத்திய பதிவின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.திரிஷாவின் பதிவு
இதற்கு முன்பும் 'கருப்பு' படத்தில் தான் பேசிய வசனங்கள் அடங்கிய வீடியோவை திரிஷா வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் சிலர் அவரை குறிவைத்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதற்குப் பதிலாக எந்த விவாதத்திலும் இறங்காமல், இந்த சத்குரு வீடியோவை பகிர்ந்திருப்பது தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.பதிலடி
'கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே!