சென்னை: நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வேறு லெவலில் பேசப்பட்டு வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது ஒரு பக்கம் என்றால், அந்த புகைப்படத்தைச் சுற்றி கிளம்பிய சர்ச்சை இன்னொரு பக்கம் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயமும் அதிக கவனத்தைப் பெறும் சூழலில், திரிஷா வெளியிட்ட புகைப்படம் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியதாக சில விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தற்போது முதலமைச்சராக அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சட்டசபையில் அவர் பேசிய உரை, அதற்கு கிடைத்த வரவேற்பு, சமூக வலைதளங்களில் கிடைத்த பாராட்டு என தொடர்ந்து நல்ல பேச்சு அவரைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில், திரிஷா வெளியிட்ட விஜய் புகைப்படம் பழையதா, புதியதா, எடிட் செய்யப்பட்டதா, AI உதவியோடு உருவாக்கப்பட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. சில ரசிகர்கள், "இப்படி குழப்பம் தரும் புகைப்படங்களை வெளியிட்டு விஜய்க்கே தேவையில்லாத பேசுபொருள் உருவாக்குகிறார்" என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்ட தொடங்கினர். அதுமட்டுமல்ல, "விஜய் அரசியலில் இருக்கும் இந்த நேரத்தில் அவரைச் சுற்றி களங்கம் வரும்படி எந்த விஷயமும் இருக்கக் கூடாது" என்ற உணர்வில் இருந்த ரசிகர்கள், திரிஷாவின் பதிவை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டனர். ஏற்கனவே திரிஷா விஜய்யை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கிறாரா, அன்ஃபாலோ செய்துவிட்டாரா, எக்ஸ் தளத்தில் யாரை ஃபாலோ செய்கிறார் என்றெல்லாம் தேவையில்லாத வதந்திகள் ஓடிக்கொண்டிருந்த சூழலில், இந்த புகைப்பட விவகாரம் அந்த பேச்சுக்கு மேலும் தீனி போட்டது. ஆனால் இத்தனை சர்ச்சை, விமர்சனம், கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க... திரிஷா மட்டும் அதை பெரிதாக எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவே இல்லை என்பதுதான் இப்போது ரசிகர்களிடையே புதிய பேச்சாக மாறியுள்ளது. காரணம், விஜய் புகைப்படத்தைச் சுற்றியுள்ள விவாதம் இன்னும் அடங்காத நிலையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மழை பெய்யும் ஒரு வீடியோவையும், அதனுடன் 'சில்லுனு ஒரு காதல்' படத்தின் 'முன்பே வா என் அன்பே வா' பாடல் பின்னணியில் ஒலிக்கும் ஒரு ஸ்டோரியையும் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு பேரு இங்க கோபத்துல இருக்காங்க... ஆனால் திரிஷா மட்டும் செம கூலாக ஜாலி மூட்ல இருக்காங்க போல!" என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிலர் இதை ரொமான்டிக் மூட் ஸ்டோரி என ரசித்தாலும், இன்னும் சிலர் "விஜய் ரசிகர்கள் இவ்வளவு சீறிக்கொண்டிருக்கிறார்கள்... அதையெல்லாம் கண்டுகொள்ளாம திரிஷா தன்னோட மூட்லயே போய்க்கொண்டிருக்கிறார்" என்ற டோனில் பேசுகின்றனர். திரிஷா பற்றிய இந்த பேச்சு புதிதல்ல. அவர் ஒரு புகைப்படம் போட்டாலோ, ஒரு ஸ்டோரி பகிர்ந்தாலோ, அது சாதாரண அப்டேட்டாக நின்றுவிடாமல் பெரிய விவாதமாக மாறுவது பலமுறை நடந்திருக்கிறது. அதிலும் விஜய்யுடன் தொடர்புடைய எந்த விஷயமாக இருந்தாலும் ரசிகர்கள் அதை இன்னும் நெருக்கமாக கவனித்து வருவது கடந்த சில மாதங்களாக தெளிவாக தெரிகிறது. அதனால் தான் இந்த முறை அவர் போட்ட ஸ்டோரியும் "சும்மா ஒரு மழை வீடியோ" என்ற அளவுக்கு இல்லாமல், "இந்த நேரத்துல இதை போடணுமா?" என்ற கேள்வியையும் கிளப்பியுள்ளது. மற்றொரு தரப்பு ரசிகர்கள் திரிஷாவை காப்பாற்றும் வகையிலும் பேசுகிறார்கள். "அவர் எப்போதும் போல தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு ஸ்டோரி போட்டதாலே அதில் அரசியல் அர்த்தம் தேட வேண்டாம்" என்பதே அவர்களுடைய வாதம். "திரிஷா யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை; அவர் போடும் ஒவ்வொரு பதிவையும் தேவையில்லாமல் விஜய் அரசியலோடு இணைக்க வேண்டாம்" என்றும் அவருடைய தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர்.திரிஷாவால் ஏற்பட்ட விவாதம்
குழப்பத்தில் ரசிகர்கள்
9 பேர் பலியான அதே நாளில்தான் இதுவும் நடந்து இருக்கு.. திரிஷா பதிவுக்கு திமுக ஐடிவிங் போட்ட ரிப்ளை
“திரிஷா போல ரஜினியும்… முதல்வர் விஜய் பிறந்தநாளில் நடந்த சம்பவம்! மீண்டும் கிளம்பிய பனிப்போர் பேச்சு”
திரிஷாவின் புது ஸ்டோரி
ரசிகர்கள் கருத்து