40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை... சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்?


  • சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகை. புதிய தலைமுறை நடிகைகள் தொடர்ந்து அறிமுகமாகி வந்தாலும், இன்றளவும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருவது அவரது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சமீப காலமாக திரிஷாவின் பெயர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவரது புதிய படங்கள், பொதுநிகழ்ச்சி தோற்றங்கள், சமூக வலைதள பதிவுகள் என எது வெளியானாலும் அது உடனடியாக வைரலாகி விடுகிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் அவரை சுற்றி அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    திரிஷா பதிவு

    திரிஷா பகிர்ந்த அந்த பதிவில், "40 வயதில் 25 வயது பெண் போல தோற்றமளிப்பதுதான் நோக்கம் அல்ல. 20 வயதில் இருக்கும் பெண்களுக்கு, 40 வயது என்பது மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கக்கூடிய ஒரு வயது என்பதை காட்டுவதுதான் உண்மையான நோக்கம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த ஒரு வரி பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் வயது குறித்து அதிகமாக விமர்சனங்களை சந்திப்பது வழக்கம். குறிப்பாக 40 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் அந்த எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே திரிஷாவின் இந்த பதிவு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    திரிஷா தற்போது 40 வயதை கடந்திருந்தாலும், தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் "வயது என்பது வெறும் எண் மட்டுமே" என்பதை தனது திரைப்பயணத்தின் மூலம் அவர் நிரூபித்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த பதிவை பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    வதந்திகளுக்கு பதில்

    "40 வயது முடிவு அல்ல, இன்னொரு தொடக்கம்", "இதுதான் உண்மையான தன்னம்பிக்கை", என்று பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள், "சமீப காலமாக திரிஷாவை குறிவைத்து சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு இது மறைமுக பதிலா?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement
    “திரிஷா மேல கிரஷ் இருந்துச்சு... இப்போ இல்லை!” ஓபனாக பேசிய நடிகர் பேசில் ஜோசப்! என்ன இப்படி சொல்லிட்டாரு?

    குறிப்பாக கடந்த சில வாரங்களாக திரிஷாவின் பெயர் பல்வேறு காரணங்களால் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. அந்த சூழ்நிலையிலேயே அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னொரு தரப்பினர், இது எந்த சர்ச்சைக்கும் பதில் அல்ல என்றும், பெண்களின் வாழ்க்கை மற்றும் தன்னம்பிக்கை குறித்து அவர் பகிர்ந்த ஒரு பொதுவான கருத்தாகவே பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

    “தனஞ்செயன் சொன்னது அப்படியே நடந்துச்சு!” திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள்... ஆர்.ஜே. பாலாஜியின் நெகிழ்ச்சி பதிவு!
    Advertisement

    தொடரும் சர்ச்சை

    திரிஷாவின் சமூக வலைதள பதிவுகள் அடிக்கடி ரசிகர்களிடையே கவனம் பெறுவது புதிதல்ல. ஆனால் இந்த முறை அவர் பகிர்ந்துள்ள ஒரு எளிய வாசகம், பெண்களின் வயது, அழகு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தின் பார்வை குறித்து பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கும் திரிஷா, தற்போது தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்த மாதிரியான பதிவுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதனால் அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English Summary

    Actress Trisha, one of the most celebrated stars in South Indian cinema, has once again grabbed attention with a social media post that is now being widely discussed online.Having enjoyed a successful career spanning more than two decades, Trisha continues to remain one of the few actresses who still headlines major films alongside leading stars. Despite the arrival of several younger generations of actresses, she has managed to maintain her popularity and relevance across Tamil, Telugu, and Malayalam cinema.Recently, Trisha shared a quote on her Instagram story that quickly went viral. The message read: “The goal isn’t to look 25 when you’re 40. The goal is to make 40 look like something a 20-year-old can look forward to.”The statement immediately resonated with many fans, who praised it as a powerful message about self-confidence, aging gracefully, and challenging unrealistic beauty standards.In the entertainment industry, actresses often face scrutiny regarding their age and appearance, especially after crossing the age of 40. Many fans believe Trisha’s post serves as a subtle response to such criticism, while others view it simply as an inspiring message encouraging women to embrace every stage of life with confidence.The post has generated significant engagement on social media, with users sharing messages such as “40 is not an ending, it’s a new beginning” and “This is what true confidence looks like.”Trisha has consistently demonstrated that age is not a barrier to success. Even after more than twenty years in the film industry, she continues to secure major projects and remains one of the most sought-after actresses in South Indian cinema.While some social media users speculate that the post may be linked to recent online discussions and controversies surrounding the actress, others argue that it should be viewed as a broader message about self-worth and positive aging rather than a direct response to any specific criticism.Regardless of the interpretation, the post has reignited conversations about beauty standards, confidence, and the pressures faced by women in the entertainment industry. Once again, Trisha has managed to spark meaningful discussion through a simple yet impactful message.